உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

மாயனின் மனச்சிதறல்கள்


விழிகள்


காதல் போராட்டம்.
அவள் மட்டும்
ஆயுதங்களுடன்....

-------------------------------------

காதல் கவிதைகள்


எனை எழுதிக்கொண்டிருக்கும்
கவிதைக்கு
நான்
எழுதுவது.


-------------------------------------

நான்
உனை
நேசிக்கிறேன் என்பது தெரியும்.


ஆனால்
ஏன் உனை மட்டும்
நேசிக்கிறேன் என்பது புரியவில்லை.

-------------------------------------

தோழமை

துன்பத்தை மட்டும் அதன்
தூரிகைகள் வரைந்தாலும்....


இன்பத்தின் கோடுகளை
இம்மியளவு கூட
இழுக்காமல் போனாலும்....


அந்த உறவு
அழகாய் தான்
இருக்கும்.


-------------------------------------

அவள்
என்னை விரும்பி
கொண்டேயிருப்பாள்....


நானே
என்னை
வெறுக்கின்ற
போதும்.....


-------------------------------------

அதுயெப்படி
உன் புன்னகை பூ
மட்டும் - நீ
உதிர்த்த பின்னும்
பூத்து நிற்கிறது?

--------------------------------------

எஞ்சி
இருக்கும்
எல்லாவற்றையும்
எனக்கு தந்த பின்னும் - அவளிடம்
ஏதோ
இருக்கும்.


---------------------------------------

உன்
அளவுக்கு
என்னால் கூட
என்னை
நேசிக்க முடியாது...


---------------------------------------

About Me


மாயன் - என் புனைப் பெயர்.

பல கனவுகளை சுமந்துக் கொண்டு, வாழ்க்கையின் சரிவான பாதைகளில் வேகமாக பயணிக்கும் பல பேரில் ஒருவன். நான் போகும் வழிகளில் நான் காணுகின்ற யாவையும் பதிவு செய்ய வேண்டும் எனத் துடிக்கும் பலரில் ஒருவன்.

நான் திரும்பி பார்த்த, என்னை திரும்பி பார்க்க வைத்த நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள ஆசைப்படும் சாதாரண மனிதன்.

பெயர்- ராம் வேலை- மென்பொருள் தீர்வுகள், செயல்கூறு ஆய்வு (Software Solutions, Function analysis)

பந்த் தேவையா?

தமிழகத்தில் இன்று(02-ஏப்ரல்-07) நடைபெறும் திடீர் முழு அடைப்பால் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம்.

விஷயம் எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முழு அடைப்பு ஒன்று தான் ஒரே வழியா?...

ஒரு வகையில் நடைபெறும் அத்தனைப் போராட்டங்களுமே மக்கள் நன்மைக் குறித்தே நடத்தப் படுவதாக நடத்துபவர்கள் கூறிக்கொண்டாலும், அத்தகையப் போராட்டங்களிலேயே மக்கள் நலன் கேள்விக்குறியாவது தான் பெரிய வேதனை...

அதுவும் முன்னறிவிப்பு இன்றி நடத்தப்படும் இத்தகைய முழு அடைப்புகளால் நமது மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வேற்று மாநிலத்தவரும் பாதிக்கப்படுகிறார்கள். மாண்புமிகு முதல்வர் கலைஞர்அவர்கள் நல்ல ஒரு தலைவர். ஆதரவு கட்சிகளின் வற்புறுத்தலின் பேரிலேயே இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது...

எது எப்படி ஆயினும் இத்தகைய முழு அடைப்பு போராட்டங்கள், வளரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் மேம்பாட்டிற்கும் ஒரு பின்னடைவாகும்.

அதுவும் முன்னறிவிப்பு இன்றி ரெயில்கள், பேருந்துகள் ஆகியவற்றை நிறுத்துவது நிச்சயம் ஒரு மக்கள் விரோத செயலாக தான் மக்கள் பார்ப்பார்கள்.

இது போன்ற செயல்கள் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமன்றி போராட்டத்தின் காரணமான உண்மையான பிரச்சினையின் முக்கியத்துவத்தை குறைப்பதாக அமையும்.

சிரிங்க... சிந்திக்காதீங்க...

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 39 பேர் கைது...


தேர்ட் அம்பயர் கூட பணம் வாங்குவார்னு நான் நினைச்சு பார்க்கலை...

ஏன் என்னாச்சு?

மேட்ச் ஆரம்பிக்கும் போது பேட்ஸ்மேன் க்ரீஸ்க்கு வந்து சேர்ரதுக்குள்ள ஸ்டம்பை தட்டி விட்டு அவுட் கேட்டப்ப அவுட் கொடுத்துட்டாரே?

===================================================

நம்ம டீம் ஆளுங்க கண்டிப்பா லஞ்சம் வாங்கியிருக்கங்கன்னு எப்படி சொல்றே?

எதிர் டீம் பேட்ஸ்மேன் ஃபோர் அடிச்சப்ப நம்ம போலர் ஸிக்ஸ்க்கு அப்பீல் கேட்டாரே அதை வெச்சு தான்...

===================================================

பணம் வாங்கிட்டாங்கங்கறது உண்மை தான். அதுக்காக கேட்ச் பிடிச்ச பாலை கொண்டு போய் பவுண்டரியில பொட்டுட்டு வர்றதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்....


===================================================

அந்த பேட்ஸ்மேன் கண்டிப்பா லஞ்சம் வாங்கியிருக்கார்...

எப்படி சொல்றே?

பால் போடும் போது ஸ்டம்புக்கு முன்னாடி நிக்காம பின்னாடி போய் நிக்கறார் பாரு...

====================================================

கிரிக்கெட் சூதாட்டத்தை ஒழிக்கவே முடியாதா?

ஏன் முடியாது... கிரிக்கெட்டை ஒழிச்சிட்டா கிரிக்கெட் சூதாட்டம் தன்னாலே ஒழிஞ்சிட்டு போகுது...

=====================================================

ஸ்ரீ லங்கா டீம்க்கும் சூதாட்டக்காரங்களுக்கும் ஏதோ பிரச்சனையாமே?


ஆமா.. இந்தியா டீம்கிட்ட தோக்கறதா பணம் வாங்கியிருந்தாங்களாம். எவ்ளோ ட்ரை பண்ணியும் தோக்கவே முடியலையாம்... அதான் பிரச்சினை...
சிரிங்க... சிந்திக்காதீங்க...

இலங்கையிடமும் இந்தியா தோல்வி...


இன்ஜமாம் - ஏண்டா ஸ்ரீலங்கா கிட்ட இப்படி தோத்துட்டீங்க?

ட்ராவிட் - இதை விட கேவலமா தோக்க தான் நினைச்சோம்... சனியன் பிடிச்சவங்க.. பேட்ல பட்டாலே ஃபோர் போறமாதிரி நிறைய பால் போட்டுட்டானுங்க... மிஸ் ஃபீல்டிங் வேற பண்ணிட்டானுங்க...அதான் கொஞ்சம் ரன் வந்துடுச்சு... இவ்வளோ ரன் எடுத்தது அவமானமா தான் இருக்கு...என்ன பண்ண.....


***************************************************************************************

இன்ஜமாம் - ஏண்டா இவ்வளவு சீக்கிரம் நீங்களும் கிளம்பறீங்க?

ட்ராவிட் - அவனவனுக்கு ஆயிரம் ஆட் சூட்டிங் இருக்கு... கேர்ள் ஃபிரண்ட்ஸ் எல்லாம் வெயிடிங்க்.. கொஞ்சம் ஏமாந்தா பாலிவுட் பயலுங்க தள்ளிட்டு பொயிருவனுங்க... இங்க இருந்து என்னடா பண்ணுறது?

****************************************************************************************


கிரிக்கெட் வீரர்கள் - அடுத்த மாட்ச்ல பாருங்க...பின்னிடறோம்...


மக்கள் - டேய்... அடுத்த வேர்ல்ட் கப் மாட்ச்... 4 வருஷம் அப்புறம் தான்... போய் அதுக்குள்ள ரிட்டயர் ஆகி தொலைங்க...

****************************************************************************************

போன தடவை எப்படி ஆடினேன்?... அதுக்கு முன்னே ஒரு தடவை என்ன ஆட்டம்?... போன மாசம் எல்லாம் கூட நல்லா தானேடா ஆடினேன்?.. அப்படி ஆடியும் ஏண்டா இந்த ஜனங்க நம்மளை இப்படி திட்டறாங்க?


டேய் அவங்க ஆட் ஃபிலிம்ல எப்படி ஆடினே, டிஸ்கோதேல எப்படி ஆடினே ... பொண்ணுங்க கூட எப்படி ஆட்டம் போட்டேன்னு கேக்கலைடா... மேட்ச் பத்தி கேக்கறாங்க... இப்படி பேசி அடி கிடி வாங்கி தொலையாதே...

******************************************************************************************

இந்தியாவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்க என்ன வழி?

முதலில் அரசியலை விளையாட்டாக்கி விட்டு விளையாட்டுகளில் அரசியல் செய்ய முயலும் ஆட்களை அண்ட விடாமல் செய்ய வேண்டும்.

வீரர்களுக்கு விளம்பரங்களில் வரும் வருமானத்தில் பெரும் பகுதியை அரசாங்கம் எடுத்து கொண்டு அதை கிராமபுறங்களில் விளையாட்டுத் துறை வளர உதவ வேண்டும்.


ஒப்பந்தம் செய்யப் பட்ட வீரர்கள் எப்பொதும் கண்காணிப்பில் வைக்க பட வேண்டும்.(சூதாட்டம், பாதுகாப்பு, அநாவசிய பொழுது போக்கு எல்லாம் இதில் தடுக்க படும்)


முக்கியமான வீரர்கள் மாநிலத்துக்கு மாநிலம் இனம் காணப்பட்டு கட்டாய பயிற்சிகள் தினந்தோறும் நடத்தப்பட வெண்டும்.போதிய பயிற்சியெடுக்காத வீரர்களை போட்டியில் சேர்க்கக் கூடாது.


வீரர்களுக்கு நட்சத்திர அந்தஸ்த்து விளையாட்டால் தான் கிடைக்க வேண்டும்.. விளம்பரத்தால் அல்ல. கிடைக்கும் விளம்பரங்களின் வருமானத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்டு... வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும்... மற்றும் சம்பளமும் வழங்க வேண்டும். இது வீரர்களுக்கு மத்தியில் அநாவசியமான பொறாமைகளை தவிர்ப்பதோடு எல்லா வீரர்களுக்கும் சமமான பயிற்சியும் ஊக்கமும் கிடைக்கும்.


எல்லா விதமன பிட்ச்களும் அமைக்கப் பட வேண்டும். அதில் பயிற்சிகள் மேற்கொள்ள பட வேண்டும். வீரர்களின் பலம் மற்றும் பலவீனங்கள் கண்டறியப்பட்டு அதற்கேற்ப்ப பயிற்சி அமைய வேண்டியது அவசியம். உடல் ரீதியாக மட்டுமன்றி மனரீதியாகவும் பயிற்சி அளிக்க பட வேண்டும்.. இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக ஆட உளவியல் பயிற்சி மிக முக்கியம்.

வங்காளதேச அணியிடம் நாம் அடைந்த தோல்வி குறித்து நண்பர்களொடு விவாதித்த போது வந்து விழுந்த விஷயங்கள் இவை.

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..