தாய் மொழி என்றால் என்ன என்று எண்ணுகிறீர்கள்?
தாய் பேசிய மொழியா?
தந்தை பேசிய மொழியா?
எந்த மொழியில் பேசினால் உங்களால் கனவில் கூட புரிந்து கொள்ள முடியுமோ... எந்த மொழியில் அந்த கனவுகளே தோன்றுமோ... அதுவே தாய்மொழி.
அதை விட முக்கியமாக இப்படி யோசித்துப்பாருங்கள்...எந்த மொழியில் நாம் நம்மையும் அறியாமல் யோசிக்கிறோமோ அதுவே நம் தாய்மொழி...
தாய் மொழியில் நாம் பயிலும் எந்த செய்தியும், பாடமும், பொருளும் நம் மனத்தில் மற்ற எந்த மொழியில் படித்தவற்றை விட நிலைத்து நிற்கும்...
உங்கள் கருத்து என்ன?