உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

அறிவாலயத்துக்கு ஆபத்து வருமா?

முன்பு விஜய்காந்தின் ஆண்டாள் திருமண மண்டபம், பின்பு கோடை நாடு எஸ்டேட், இன்று அ.தி.மு.க தலைமையகம். என்ன தான் நடவடிக்கை எடுப்பது வெவ்வேறு துறைகளாக இருந்தால் கூட, மாற்று கட்சிகளின் கட்டிடங்கள் மட்டும் இலக்காவது கொஞ்சம் சந்தேகமாக தான் இருக்கிறது. ஒரு தி.மு.க கட்டிடம் கூட இதில் வருவதில்லையே... ஆக்கிரமப்புகளை அகற்ற வேண்டியது தான்... அதற்காக மாற்று கட்சிகளை குறி வைத்து பழி வாங்குதை போன்ற சந்தேகங்களை தலைவர் கலைஞர் தவிர்ப்பது நல்லது என்றே படுகிறது....

அதற்கு பதிலடியாக தி.மு.க கட்டிடங்களை இடிப்பேன், தி.மு.க.வை பூண்டோடு அழிப்பேன் என்று செல்வி ஜெயலலிதா கூறுவதும் சரியில்லை...

ஆரோக்கியமான அரசியல் மாநிலத்தில் அமைந்தால் தான் மக்களுக்கு பாதிப்பு குறைவாக இருக்கும். மக்களுக்கு செய்ய வெண்டிய நலப்பணிகள் எவ்வளவோ இருக்க, குடும்ப சண்டையிலும், கட்சி சண்டைகளிலும், அநாகரீக அரசியலிலும் தலைவர்கள் நேரத்தை வீணடித்து கொண்டிருப்பது மனதிற்கு கவலை அளிப்பதாக உள்ளது....

9 மறுமொழிகள்:

gajapathy சொன்னது…

I do not know whether u r aware of the fact that this state has been in the grip of competetive politics
for well over three decades and selfish and arrogant persons were being chosen by the people of this state all these years. Karunanithi is certainly going to see his down-
fall sooner or later and this time he is not going to be spared by his
rival.

பெயரில்லா சொன்னது…

ஆலயத்தினுள் யார்வேண்டுமானாலும் எங்குவேண்டுமானாலும் வந்துவிட இயலுமா என்ன ? நாங்கள் விட்டுவிடுவோமா என்ன ?

இலவசக்கொத்தனார் சொன்னது…

//ஆலயத்தினுள் யார்வேண்டுமானாலும் எங்குவேண்டுமானாலும் வந்துவிட இயலுமா என்ன ? நாங்கள் விட்டுவிடுவோமா என்ன ?//

உங்க ஊர் என்ன சிதம்பரமா? :)))

பெயரில்லா சொன்னது…

//உங்க ஊர் என்ன சிதம்பரமா? :))) //

யாது உம் ஊரே ?
யாவர் உம் கேளிர் ?
:}
எதற்கு ?
(நீங்கள்/ நான்) ஆட்டோ சுமோ அனுப்பவா ?
:)

மாயன் சொன்னது…

//I do not know whether u r aware of the fact that this state has been in the grip of competetive politics
for well over three decades and selfish and arrogant persons were being chosen by the people of this state all these years. Karunanithi is certainly going to see his down-
fall sooner or later and this time he is not going to be spared by his
rival. //

காழ்ப்புணர்ச்சி கூடாது... யாராக இருந்தாலும் இது பொருந்தும்...

மாயன் சொன்னது…

//ஆலயத்தினுள் யார்வேண்டுமானாலும் எங்குவேண்டுமானாலும் வந்துவிட இயலுமா என்ன ? நாங்கள் விட்டுவிடுவோமா என்ன ? //

வேற்று கட்டிடங்கள் கல்லாலும் மண்ணாலும் ஆனவையாக தான் தோன்றும்.. நம் வாழ்வுடன் சம்மந்தபட்ட கட்டிடங்கள் மட்டும் தான் அவை கனவுகளாலும், நினைவுகளாலும் நின்று கொண்டிருப்பவை என்பது புரியும்...
விதிமுறை மீறல் இருந்தாலும் எவ்வளவு தூரம் விதிகளை தளர்த்தி உதவ முடியுமோ அதை செய்ய அரசு முன் வர வேண்டும்.. அப்போது தான் மக்களுக்கு அரசு மீது நம்பிக்கை வரும்.

பெயரில்லா சொன்னது…

அங்கு அறிவும் இல்லை; அது ஆலயமும் இல்லை; கடவுளே இல்லை என்பவருக்கு ஆலயம் ஒரு கேடா? அதற்கு ஆபத்து வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…

மஞ்சத்துண்டு மகாத்மா கருவறையில் வீற்றிருக்கும் ஆலயத்துக்கு குடமுழுக்கு செய்ய அன்பழகன் அடிகள் தயாராக இருக்கலாம். இடிக்க அம்மாவும், கேப்டனும் தயாராக இருக்கிறார்கள்.

பெயரில்லா சொன்னது…

அறிவாலயம் அழியும் நாள் அதிக தூரமில்லை.

மஞ்சள் துண்டு மாமாவுக்கு மயிலாப்பூர் ஆலிவர் ரோட்டிலேயே அடக்கம்.

கருத்துரையிடுக

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..