உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

சே - ஒரு நல்ல உள்ளம்

உலகில் நடக்கும் அநியாயங்களைக் கண்டுக் கொந்தளித்த நல்ல உள்ளம் என்ற முறையில் எனக்கு சே-வை பிடிக்கும்..

அவருக்கு தனக்கு சரியென தெரிந்த வழியில் போராடினார் என்பதை விட அவர் வாழ்ந்த நாட்களில் அவருக்குக் கிடைத்த ஒரே வழியில் அவர் பயணித்தார் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்.

ஆனால் உலகில் என்றும் ஒன்று மட்டும் உண்மையாகவே இருக்கிறது..

வன்முறையின் மூலம் எந்த தீர்வும் கிடைக்காது, அப்படி கிடைத்ததாக நம்பப்படும் எந்த தீர்வும் நிலைக்காது.

உயிரைப் பற்றியும், உடைமைகள் பற்றியும் பயங்களை விதைப்பதன் மூலம் ஒழுக்கத்தை கொண்டு வர முடியாது..

வன்முறை மூலம் காலனியாதிக்கம் செய்த மேலை நாடுகள், அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.. ஆனால் மெதுவாக வன்முறையில்லாமல் ரத்தம் சிந்தாமல் பல நாடுகளின் பண்பாட்டை சீரழித்து, இனிக்க இனிக்க பேசி கடை விரித்து இப்போது காலனியாதிக்கம் செய்து கொண்டு வருகின்றன.. அதற்கு நல்ல பலன் உள்ளதே?

புரட்சி செய்ய வேண்டும்.. மாற்றுக் கருத்தே இல்லை..  புரட்சி தான் மக்களை மாற்றும்.. உலகில் அமைதி கொண்டு வரும்.. ஆனால் அது ஆயுதப் புரட்சியாக இருக்க முடியாது.. வன்முறை மூலம் கிடைக்கும் தீர்வாக அது இருக்க முடியாது...

மக்கள் மனதில் அறியாமையைப் போக்குதல், சுய ஒழுக்கத்தை கொண்டு வருதல், சமூக விழிப்புணர்வு கொண்டு வருதல்.. இவை தான் புரட்சி.. இவற்றின் மூலம் மனித இனம் மேன்மை அடைய முடியும்...

சே மட்டும் அல்ல மக்களுக்காக போராடிய அனைத்து நல்ல உள்ளங்களும் சாதிக்க நினைத்தது, மனித இனத்தின் மேன்மையைத் தான்.

அதை அடைய ஆயுதம் தேவை இல்லை. வன்முறை தேவை இல்லை.. ஒவ்வொருவரும் தன் சுய ஒழுக்கத்தை பரிசோதித்து கொண்டால் போதும்.. மற்றவை தானாய் நடக்கும்...

சே மக்களை ஆதிக்கவாதிகளின் அடிமைப்படுத்தும் கரங்களில் இருந்து விடுவிக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மனமாற செய்தார்.. பிறருக்கு போதித்ததை அவர்கள் பின்பற்றும் முன்னரே தான் முன்மாதிரியாக இருந்து அதை வாழ்ந்து காட்டினார்.. அந்த வகையில் சே-வும் ஒரு புத்தர் தான்....
சே-வின் வாழ்க்கை தமிழில் காணொளியாய்...

ஐ நா சபையில் சே நிகழ்த்திய உரை...

அர்த்தமுள்ள (வீர) மரணம்...