உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

ஞாயிறு, நவம்பர் 27, 2011

நிர்வாணமாக தோன்றுவது எப்படி- மேலை நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி - ஒரு பார்வை


ரியாலிட்டி ஷோ எனப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மக்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டவை.

அன்றாட வாழ்க்கையில் மக்கள் செய்பவை, செய்ய நினைப்பவை, அவர்களின் திறமை, அறிவு, கோபம், அழுகை மற்றும் எல்லா வகை உணர்வுகளையும் வெளிக்கொணர்வது தான் ரியாலிட்டி ஷோக்கள்.

பல விதமான ரியாலிடி ஷோக்கள் உள்ளன.. உதரணத்துக்கு ஆள் அரவமற்ற தீவில் தங்கி அந்த சவாலான சூழ்நிலையில் வாழ்ந்து காட்டுவது, சாகசம் செய்து காட்டும் நிகழ்ச்சிகள்.. விளையாட்டு நிகழ்ச்சிகள்….

நம் ஊரிலும் ரியாலிட்டி ஷோக்கள் உள்ளன. மேலை நாடுகளில் எல்லாம் எங்கேயோ போய் கொண்டு இருக்கிறார்கள்... ஆனால் நம் ஊரில் உள்ள ரியாலிடி ஷோ எல்லாம் கேம்ஸ், பாட்டு, டான்ஸ் இப்படியே இருக்கிறது..

இவற்றுள் ஒரு வித்தியாசமான ரியாலிட்டி ஷோவை நான் சென்ற வாரம் பார்க்க நேரிட்டது....

லண்டனில், சானல் 4 -ல் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியின் தலைப்பு "How to look good naked"(மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் தமிழில் "How to look good naked"… "ஆடையில்லாமல் நன்றாக தோன்றுவது எப்படி"... )

கோக் வான் (Gok Wan) எனும் ஆடை அலங்கார நிபுணர் நடத்தி வரும் இந்த நிகழ்ச்சி 2006 -ம் வருடத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சியின் நோக்கம் என்னவோ ஆணுக்கும் பெண்ணக்கும் தன் தோற்ற பொலிவு குறித்து தன்னம்பிக்கை அளிப்பது தான். ஆனால் அதற்கான வழிமுறை தன் கொஞ்சம் நம்மை நெளிய வைப்பதாக இருக்கிறது.

தனக்கு தோற்ற பொலிவு இல்லை எனக் கருதும் பெண் அல்லது ஆண் யாரேனும் ஒருவரை உற்சாகப்படுத்தி அவர்களை புகைப்படக்கருவியின் முன் நிர்வாணமாய் தோன்ற செய்வதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்..

நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண் அல்லது ஆணுக்கு தன்னுடைய தோற்ற பொலிவு குறித்து தன்னம்பிக்கை வரும் விதமாக கீழ்கண்டவற்றை வான்(Wan) செய்வார்

1. பங்கேற்பாளரின் அரை நிர்வாண படத்தை பொது இடத்தில் வைத்து அவர்களின் கருத்தை கேட்டு அவற்றும் உற்சாகம், தன்னம்பிக்கை அளிக்கும் நல்ல கருத்துக்களை பங்கேற்பாளருக்கு காண்பித்தல்

2. அவர்களின் நடை உடை பழக்கங்களை (உள்ளாடை உட்பட) மாற்றுதல்

3. ஒருமுறை நிர்வாணமாக பங்கேற்பாளரை புகைப்படம் எடுத்து அவருக்கு காட்டுதல்

4. பங்கேற்பாளருக்கு எப்படி தன்னை உயர்த்தி காட்டி கொள்வது என்பதற்கான நடை உடை பாவனை பயிற்சிகள் அளித்தல்

5. கடைசியாக அவருக்கு தன் தோற்ற பொலிவு குறித்து தன்னம்பிக்கை வந்த பிறகு, ஒரு நவீன ஆடை அணிவகுப்பில் அவர்களை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பொது மக்கள் முன்பு நிர்வாணமாக தோன்ற செய்தல்


இந்த நிகழ்ச்சியின் விசேஷம் என்னவென்றால் மற்ற நிகழ்சிகள் போல இதில் அழகுக்கான அறுவை சிகிச்சையோ அல்லது எடை குறைப்பு மாதிரியான விஷயங்கள் எதுவும் கிடையாது. (வெறும் ஆடை குறைப்பு தான் போல).

பிரிட்டனில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவோடு இந்த நிகழ்ச்சி சக்கை போடு போட்ட காரணத்தால் , இன்று அமெரிக்கா, சுவீடன், இத்தாலி, கனடா, பிரான்ஸ், செக், போலாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளிலும் அந்த அந்த நாட்டு தன்னம்பிக்கை இல்லாத பிரஜைகளுக்கு "தன்னம்பிக்கை" ஊட்டி கொண்டிருக்கிறதாம்.

நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை...(ஹும் நம்ம ஊர்ல நாம கொடுத்து வச்சது அவ்வளவு தான்)

தொடரின் ஒரு பகுதி காணொளியாய் உங்கள் பார்வைக்கு..



பார்க்கணும்னு விருப்பப் படறவங்க போய் பாத்துக்கோங்க...

மேலதிக தகவல்களுக்கு (தாவல்களுக்கும்) சுட்டிகள் கீழே

வெள்ளி, நவம்பர் 25, 2011

பஸ்ல நாம ஏறினாலும் பஸ் நம்ம மேல ஏறினாலும் டிக்கட் நாம தான் எடுக்கணும்

ஹூம்.. பஸ்  டிக்கட் விலை ஏற்றம் எப்படி எல்லாம் நம்மை பாதிக்கிறது


------------------------------------------------------------------------------------------

பொண்ணு வீடு பெரிய இடம்னு சொல்றீங்களே எப்படி நம்பறது


பொண்ணு வீட்டுக்காரங்க எல்லாரும் ஆபீஸ், கடைக்கு இப்படி எங்க போனாலும் பஸ்ல தான் போவாங்களாம்...

------------------------------------------------------------------------------------------
சிக்கனம் சிங்காரம் - பஸ்சுல டிக்கெட் எடுத்து மாளலை... அதனால இப்போ எல்லாம் சிம்பிளா ஆட்டோவில் போயிட்டு வந்துடறேன்...

------------------------------------------------------------------------------------------

பையன் நிறைய பணம் புழங்குற இடத்தில வேலை செய்யறான்னு சொல்றீங்களே? எங்க ரிசர்வ் பாங்க்ல வேலை செய்யறனா...

இல்லைங்க கவர்மெண்ட் பஸ்ல கண்டக்டரா இருக்கான்...

-------------------------------------------------------------------------------------------

அந்தாளு ஆளுங்கட்சி காரன்னு எப்படி சொல்ற

பஸ் விலையை ஏத்தாம பஸ் டிக்கட் விலையை மட்டும் ஏத்தி இருக்கங்களேன்னு சந்தோஷப்படுங்கன்னு சொல்லிட்டு போறாரு

--------------------------------------------------------------------------------------------
ஏன்டா பஸ் டிக்கட் விலை ஏறிடுச்சுன்னு ஊரே பரபரப்பா இருக்கு நீ மட்டும் கவலை இல்லாம இருக்கியே எப்படி

நாம எல்லாம் என்னைக்கு மச்சி பஸ்ல டிக்கட் எடுத்திருக்கோம்... விலை ஏத்தினா நமக்கு என்ன இறக்கினா நமக்கு என்ன

--------------------------------------------------------------------------------------------
பஸ் டிக்கட் விலை ஏறிடுச்சுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ என்னடான்னா கடவுளுக்கு நன்றி சொல்ற?

நல்ல வேளை.. ரயில்வே டிபார்ட்மென்ட் சென்ட்ரல் கவர்ன்மென்ட் கண்ட்ரோல்ல இருக்கேன்னு நினைச்சு தேங்க்ஸ் சொல்றேன்டா
---------------------------------------------------------------------------------------------