இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் அடுத்து வரப்போகும் சில ஆட்டங்களின் நிலை குறித்த பரபரப்பான காட்சிகள்..
என்னப்பா எட்டு பேர் தான் அவுட் ஆகியிருக்காங்க..? ஆல் அவுட்னு அம்பையர் கிளம்ப சொல்றார்?
ஷ்.. இது ஆஸ்திரேலியா மறந்து போச்சா? கத்தி பேசாத... பைன் போட்டுருவாங்க...
===================================================
சார் மணி மத்தியானம் பதினொன்னு தான் ஆகுது.. சூரியன் சுள்ளுன்னு அடிக்குது.. ஒரு விக்கெட் தான் இருக்கு.. அஞ்சு ஓவர் போட்டா ஆல் அவுட் ஆகிடுவாங்க... பேட் லைட்னு(BAD LIGHT) ஆட்டத்தை கேன்சல் பண்றீங்க... ?
ஆமாய்யா கண்ணு கூசுற அளவுக்கு வெயில் அடிச்சா அது பேட் லைட் தானே? நான்சென்ஸ்...
===================================================
இவர் இப்ப தானே அவுட் ஆனார்? மறுபடி ஆட வர்றார்?
அவர் கருப்பினத்தை சேர்ந்தவர்னு தானே அவர் ஆட கூடாqதுன்னு பிரச்சினை பண்றீங்க? யூ ஆர் சஸ்பெண்டட் ஃபார் 3 மேட்சஸ்....
====================================================
என்னப்பா என்ன பிரச்சினை?
ஆஸ்திரேலியா கேப்டன் அவங்க போலர்ஸ் ஸ்டம்புக்கு போடற பந்தையெல்லாம் இந்தியா பேட்ஸ்மேன் பேட்டால தடுத்துடறாங்கன்னு கம்பிளெயின்ட் பண்ணிட்டிருக்கிறாராம்...
=====================================================
அம்பையர் சார் சொன்னா நம்புங்க சார்.. ஸ்டேடியத்த விட்டு பால் வெளிய போனா அது சிக்சர் தான் சார்.. ஸ்டேடியத்தை விட்டு பந்தை வெளிய அடிச்சா அவுட்டுன்னு எப்போ ரூலை மாத்தினாங்க...
=======================================================
என்னயா டென்ஷனா இருக்கே?
என்னய்யா அநியாயமா இருக்கு... உணவு இடைவேளை முடிஞ்சு பேட்ஸ்மேன் உள்ளே வந்துட்டு இருந்தாங்க. க்ரீசுக்கு வரதுக்குள்ள ரெண்டு பேரையும் ரன் அவுட் பண்ணிட்டாங்க...
=========================================================
ஆனாலும் நம்ம ராமசாமிக்கு ரொம்ப நக்கல்...
எப்படி சொல்றே?
பேசாம அம்பையர்களுக்கும் ஆஸ்திரேலியா டீம் யுனிபார்ம் போட்டு விட்டுருங்கன்னு நக்கல் அடிக்கிறார்...
==========================================================
ஏன் நம்ம டீம் கேப்டன் கலங்கி போய் இருக்கார்?
அவர் அடிச்ச பந்தை அம்பையரே கேட்ச் பிடிச்சுட்டு அவுட்டும் கொடுத்துட்டாராம்...
==========================================================