உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

செவ்வாய், ஆகஸ்ட் 04, 2009

போக்கற்றவர்களும், போக்குவரத்து விதிகளும்

ஊர் பக்கம் தனக்கென ஒரு நிலைப்பாடு இல்லாதவனை போக்கற்றவன் என்று குறிப்பிடுவார்கள்.. அதே போல் சாலையில் எந்த லேனில் போவது என்று தெரியாமல் வளைத்து வளைத்து பாம்பு போல வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளும் போக்கற்றவர்கள் தான்...

போக்குவரத்து நெரிசல்...

என்ன காரணம்? எனக்கு தெரிந்த சில உளவியல் ரீதியிலான காரணங்கள்...

தான் மட்டும் புத்திசாலி மற்றவரெல்லாம் முட்டாள் என்று நினைக்கும் மனப்பாங்கு...

தன்னை ஒருவர் முந்திச் செல்வதைத் தாங்கி கொள்ள இயலாத அதிகார மனப்பான்மை...

வேறு காரணங்கள்...?


விதிகளில் போதிய அறிமுகமின்மை...

அப்படியே அறிமுகம் இருந்தாலும் கடைப்பிடிப்பதில் அலட்சியம்..

எல்லவற்றையும் விட முக்கியமாய் லேன் டிசிப்ளைன் எனப்படும் சாலை ஒழுக்கத்தை மதிக்காமல் இருப்பது...

லேன் டிசிப்ளைன் (Lane Discipline) எனப்படும் சாலை ஒழுக்கம் ஒன்றை மட்டும் எல்லா வாகன ஓட்டிகளும் சரியாக கடைப்பிடித்தால் விபத்துக்களின் எண்ணிக்கையை 80% குறைத்து விடலாம்...

சாலை ஒழுக்கத்தில் பொதுவாக செய்யப்படும் தவறுகள்

  • முன்னால் செல்லும் வாகனத்தை கண்ட இடங்களில் முந்துதல்...
  • பாலங்களில் தன்னுடைய சாரியிலிருந்து வெளிப்பட்டு எதிர்சாரியில் விரைவது...
  • வளைவுகளில் திரும்பும் போது வலது ஓரத்துக்கு சென்று திரும்புவது...

    மேற்கூறியவை விபத்துக்களுக்கு காரணம் என்றால்
    நெரிசலுக்கு காரணம்...
  • சாலையில் நெரிசல் ஏற்பட்டு முன்னால் வாகனங்கள் நின்றுக் கொண்டிருக்கும் போது வலது பக்கம் முன்னேறி சென்று எதிரே வரும் வாகனத்துக்கு வழி இல்லாமல் செய்வது..
  • ஒரே நேரத்தில் ஒழுங்கற்ற முறையில் பல வாகனங்கள் ஒன்றாக முன்னேறுவது...
  • வலது புறமோ, இடது புறமோ திரும்ப இருக்கும் வாகனத்துக்கு வழி விடாமல் போய் கொண்டே இருப்பது...

சிக்னல் நிற்க சொன்ன பிறகும் பச்சை சிக்னலில் முன்னேறி வரும் வாகனங்களுக்கு வழி விடாமல் குறுக்கே செல்வது...

பாருங்கள் இதில்
கொலைவெறியோடு ஓட்டுவது,
படு வேகத்தில் ஓட்டுவது,
அடுத்தவருக்கு ஒலியெழுப்பிய பின்னும் வழி கொடுக்காமல் போவது,
கண்ட இடத்தில் நிறுத்துவது,
சமிஞை கொடுக்காமல் திருப்பங்களில் திருப்புவது

இவைப் பற்றி நான் பேசவேயில்லை...

லேன் டிசிப்ளைனை மட்டும் அனைவரும் ஓரளவு சரியாக கடைப் பிடித்தாலே 80 சதவிகித போக்குவரத்து பிரச்சினைகள் சரியாகி விடும்...

போக்குவரத்து நெரிசலையும் அதற்கு காவல் துறை எடுக்கும் நடவடிக்கைகளையும் மையமாக வைத்து நான் எழுதிய நகைச்சுவைப் பதிவு
இங்கே...