சில காலமாக ஸ்ட்ரெஸ் என சொல்லப்படும் மன அழுத்தம் காரணமாக பலர் பாதிக்க பட்டு வருகின்றனர். இதற்கு காரணம் பலவாக இருக்கலாம் என்ற போதிலும் முக்கியமான காரணமாக கருதப்படுவது வேகமானதாக மாறி வரும் வாழ்க்கை முறை தான். நல்ல உணவு, உடற்பயிற்சி மூலம் இதற்கு தீர்வு உண்டு என்ற போதிலும் வாய் விட்டு சிரித்தால் மன அழுத்தம் சுலபமாக விட்டு போகும் என்பது திண்ணம். மன அழுத்தத்தை போக்கும் சிரிப்பை மன அழுத்தம் சம்மந்தமான துணுக்குகளை வைத்தே வரவைக்க முயற்சி செய்துள்ளேன்...
என்ன தான் உங்களுக்கு ஓவர் ஸ்ட்ரெஸ் இருந்தாலும் உங்க நகத்துக்கு பதிலா என் நகத்தை கடிக்கிறது கொஞ்சம் கூட சரியில்லை
என்ன நம்ம ராமசாமி ரெண்டு கையிலயும் மாவுக்கட்டு போட்டு படுத்து இருக்கார்
வேலையில ஸ்ட்ரெஸ் ஓவரானாதால ஆஃபிஸ்லயிருந்து வரும் போது பத்தாவது மாடியில இருந்து படிக்கட்டுல கால்ல நடந்து வர்றதுக்கு பதிலா கையாலேயே நடந்து வந்துட்டாராம்…
நண்பர் - ஸ்ட்ரெஸ் ஓவரானதால அடி வாங்கினியா எப்படிடா..
பஸ் கண்டெக்டர் – ஆமா மச்சி.. டென்ஷன்ல ஏதோ குழப்பத்துல பஸ் ஸ்டாண்டுக்கு வீட்டுல இருந்து போற வழியில ட்ரெயின்லயே டிக்கெட் கொடுக்க ஆரம்பிச்சிட்டேன்.. அடி பின்னிட்டாங்க…
பெட்ரோல் பங்க்குக்கு போய் டாங்க் பில் அப் பண்ண சொன்னதுக்கா உங்களை திட்டினாங்க..
மார்க்கெட்டுக்கு சைக்கிள்ல போனவன் டென்ஷன்ல ஏதோ ஞாபகத்துல பெட்ரோல் பங்குல நுழைஞ்சுட்டேன்…
ஸ்ட்ரெஸ்ஸுல ஏதோ ஞாபகத்துல ஞாயிற்றுக்கிழமை ஆஃபிஸ் போயிட்டிங்க.. விடுங்க இதெல்லாம் சகஜம்…
அட நீங்க வேற.. நான் ரிட்டயர் ஆகி அஞ்சு வருஷம் ஆச்சுங்க…
ஆஃபிஸ் ஸ்ட்ரெஸ்ஸுல ஏதோ வீடு மாறி நுழைஞ்சு அவர் ஒய்ஃப்னு நினைச்சு உங்க ஒய்ஃபை காஃபி எடுத்துட்டு வர சொல்லிட்டார்.. விடுங்க.. சின்ன விஷயம்
நீங்க வேற அந்தாளுக்கு இன்னும் கல்யாணமே ஆகலைங்க..
டிவி பாக்கிறதை குறைச்சா ஸ்ட்ரெஸ் குறையும்னு டாக்டர் தான் சொல்லிட்டார்ல அப்புறமும் ஏன் சோகமா இருக்கே
அவர் டிவி பாக்கிறதை குறைக்கணும்னு சொன்னது என் பொண்டாட்டியை… எப்படி அவ கிட்ட சொல்றது…