உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

நம் நாட்டில் என்ன பணி முதன்மையாக செய்யப் பட வேண்டும்?

சாலைகள் இடுதலா?

வேலை வாய்ப்பு பெருக்குதலா?

நதிகள் தேசிய மயமாக்கமா?

எல்லாவற்றிலும் முதன்மையாக செய்யப்பட வேண்டிய பணி
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒருங்கிணைந்த அடையாள அட்டை வழங்கப்படுவதாக தான் இருக்க வேண்டும்...

ரேஷனுக்கு ஒரு அட்டை, வாக்களிக்க ஒரு அட்டை, ஓட்டுநர் உரிமத்துக்கு ஒரு அட்டை, வருமான வரித்துறைக்கு ஒரு அட்டை என பல அட்டைகளை சுமந்து பெருங்குழப்பத்துக்கு நடுவே நாம் வாழ்ந்து வருகின்றோம்...

ரேஷனில் ஆரம்பித்து, ஓட்டு போட, வங்கி கடன் வாங்க, கார் வாங்க, வெளிநாட்டுக்கு போக இப்படி எல்லாவற்றுக்கும் ஒரே அடையாள அட்டை இருந்தால் எவ்வளவு எளிதாக இருக்கும்...

ஒருங்கிணைந்த அடையாள அட்டையில் என்ன விவரங்கள் இருக்க வேண்டும்?

ஒருங்கிணைந்த அடையாள எண், பெயர், பிறந்த தேதி, முகவரி, மருத்துவ விவரங்கள்.

இந்த அடையாள எண்ணில் அரசு தகவல் தளத்தில் அட்டைதாரரின் சொத்து விவரங்கள், உறவினர் விவரங்கள், வருமான வரி குறித்தான விவரங்கள் போன்றவை பதிக்கப்பட்டிருக்கும்...

பெயர், புகைப்படம் மட்டும் அல்ல கருவிழி ரேகை, கைரேகை இரண்டும் அதில் பதிக்கப் பட வேண்டும்.

ஒரு தனி மனிதை பற்றிய அனைத்து விபரங்களும் சேமிக்கப் பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் மான இது இணையம், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், நீதி மன்றங்கள் எல்லவிடத்திலும் தொடர்பு கொள்ள முடிந்து தகவல்கள் எடுக்க முடியும்.

இது எப்படி நாட்டு முன்னேற்றத்துக்கு உதவும்?

 • உங்கள் ஓட்டை யாரும் மாற்றிப் போட முடியாது... யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களின்
  வாக்குகளை பதியலாம்.

 • கள்ள ஓட்டு தவிர்க்கப் பட்டாலே தவறான வேட்பாளர் தேர்ந்தெடுக்க படுவதை தவிர்த்திடலாம்... தவறான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் படுவது தவிர்க்க பட்டாலே பாதி பிரச்சினை குறைந்து விடும்.


 • ஆள் மாறாட்டம், போலி பெயரில் கடன் எல்லாம் ஒழிக்கப்பட்டு ஜாமீன் யாரும் கொடுக்காமலேயே வங்கியில் பணம் எடுக்க முடியும்.


 • அரசாங்கம் சம்மந்தமான வேலைகளில் தான் இன்னார் தான் என்று நிருபிக்க பட வேண்டிய தேவைகள் குறைந்து போகும். வேலைகள் விரைவாக நடக்கும்.


 • வழக்குகள் நடை பெறும் வேகம் அதிகரிக்கும். சாட்சி, பிரதி வாதிகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு வழக்குகள் விரைவாக முடிவுக்கு வரும்.


 • மேற்குறிப்பிட்ட விஷயங்களோடு டி.என்.ஏ சாம்பிளையும் சேமித்து குறித்து வைத்தால் வாரிசு பிரச்சினைகள் விரைவாக தீரும்.


 • ஒன்றுக்கும் மேற்பட்ட பேன் கார்டுகள், லைசென்சுகள், அடையாள அட்டைகள் எல்லாம் வைத்துக் கொள்ள முடியாது... ஒருங்கிணைந்த அடையாள அட்டை தான் பான் கார்டு, லைசென்சு எல்லாமுமாக இருக்கும்.அதை வைத்து தான் பஸ் டிக்கெட்டு முதற்கொண்டு, விமான டிக்கெட்டு வரை வாங்க வேண்டியிருக்கும்...


 • தனி மனித தவறுகள் ஒருங்கிணந்த அடையாள் அட்டையில் பதியப் படும். தேர்தலில் நிற்க வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் இந்த தகவல்களை எளிதாக பெற்று வேட்பு மனுவை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ள முடியும்.


 • சந்தேகத்திடமான நபர் என்று யாருமே இருக்கவும் முடியாது... கைது செய்யப்படவும் முடியாது...(அடையாள அட்டை இல்லாமல் சுற்றும் ஒருவர் போலீசில் சிக்கினாலோ, இல்லை யாருடைய அடையாள அட்டை தொலைந்து போனாலோ கருவிழி அல்லது கை ரேகையை வைத்து அவர் விவரங்களை பெற்று அவரை அடையாளம் காண முடியும்.)


 • ஒருவரை பற்றிய மருத்துவ அறிக்கையும் அந்த அடையாள அட்டையில் சேர்க்கப் பட்டால் விபத்து நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு அது பயனுள்ளதாய் இருக்கும்.


 • நாட்டின் மக்கள் தொகை விவரம் துல்லியமாக தெரிந்து கொண்டேயிருக்கும். அரசாங்கம் திட்டங்களை இன்னும் தெளிவாக தீட்ட முடியும். மாநிலம், நகரம், பேரூர், சிற்றூர், கிராமம், தெரு வரை தெளிவான மக்கள் தொகை இருப்பை தெரிந்து கொள்ள முடியும். (இப்போதைய சென்ஸஸ் முறை ஒரு மனிதர் ஒரு இடத்தில் இருக்கிறார் என்பதை உறுதி செய்கிறது. அவரை ஒரே இடத்தில் மட்டும் தான் கணக்கெடுத்தோமா என்பதை உறுதி செய்வதில்லை...)


 • ஒரு தனி மனிதனுக்கு எவ்வளவு சொத்து எங்கெங்கு இருக்கிறது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.யாரும் தலை மறைவு வாழ்க்கையெல்லாம் நடத்த முடியாது. தகவல் தெரிவிக்காமல் சுவிட்சர்லாந்து எல்லாம் போய் வர முடியாது...


இன்னும் எவ்வளவோ...

நடைமுறை சிக்கல்கள்...


 • அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள் எதிர்ப்பார்கள்.

 • தகவல் தளத்தை உடைத்து தகவல் திருட முயற்சிப்பார்கள்.

 • தகவல் உள்ளீடு செய்வதில் தவறுகள் நடக்கலாம்.

 • தகவல் தளத்தை பாதுகாப்பதில் அரசாங்கத்துக்கு சிக்கல்கள் இருக்கும்.

 • இத்தகவல்களை முழுதாக திரட்டி ஒருங்கிணைந்த அடையாள அட்டை வழங்குவதற்கு வருடக்கணக்கில் ஆகலாம். பெருமுயற்சியும் திட்டமிடலும் தேவை.

 • அடையாள அட்டை என்றால் ப்ளாஸ்டிக், பேப்பர் அட்டை அல்ல... ஆக்சஸ் கார்டு போன்ற விஷயம்...ஐந்தாண்டுக்கு(?) ஒருமுறை 100 கோடி மக்களுக்கு தேர்தல் நடத்திக் காட்டும், 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நிகழ்த்தும் அரசாங்கத்துக்கு இது பெரிய பணி அல்ல.

14 லட்சம் பணியாளர்கள் உள்ள இந்தியன் ரயில்வேயில் ஆண்டுக்கு 1000 கோடி பயண விவரங்களையும், 73 கோடி டன் சரக்கு பரிமாற்ற விவரங்களையும் அநாயசமாக கையாளும் இந்திய அரசாங்கத்துக்கு இது சாத்தியமே.

"பாய்ஸ்" படத்தில் செந்தில் சொல்லுவார் "Information is Wealth"(தகவல் தான் சொத்து).

Information Wealth மட்டுமல்ல... அது இந்தியா போன்ற வளரும் வல்லரசு நாடுகளுக்கு அது தான் பவர்(Power).

இது குறித்தான திட்டம் ஏதவது இந்திய அரசாங்கம் வசம் உள்ளதா என்று தெரியவில்லை... திட்டம் இது வரையில் இல்லையென்றால் இது போன்ற திட்டங்கள் காலத்தின் கட்டாயம் என்பதை அரசாங்கம் உணரும் நாள் விரைவில் வர வேண்டும்.

5 மறுமொழிகள்:

திரட்டி.காம் சொன்னது…

நிச்சயமாக நிறைவேற்றப்படவேண்டிய செயல்!

வெங்கடேஷ்

துளசி கோபால் சொன்னது…

அருமை.

செய்வாங்களா?

செய்யணும்.

செஞ்சுருவாங்கல்லே?

மாயன் சொன்னது…

துளசி கோபால்,

நாட்டு நலத்திட்டம்ல... செஞ்சிட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க...

அடப்பாவியா கூட இருக்கலாம்.. அப்பாவியா தான் இருக்க கூடாது... நாமெல்லாம் அப்பாவிகள்...

கள்ள ஓட்டு போடமுடியாதுன்ற ஒரே காரணத்துக்காகவே இதை பண்ணவே மாட்டாங்க...

பெயரில்லா சொன்னது…

கேவலம், இலங்கையில் கூட எப்பவோ வந்திட்டுது. வல்லரசுக்கு இன்னமும் சிந்திக்க வரவில்லையா?

MR.G சொன்னது…

super.........

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..