உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

மக்கள், மாவோயிஸ்ட்கள், ராஜினாமா


தண்டேவாடா படுகொலையில் உயிர் துறந்த போலீஸ் வீரர்களின் குடும்பங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்..
 
உள்துறை அமைச்சர் . சிதம்பரம் தண்டேவாடா படுகொலைகளுக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய முடிவெடுத்தாராம். அதை மன்மோகன் சிங்கும் சோனியாவும் நிராகரித்தார்களாம்...

அரசியலிலேயே சாயம் போய் வெளுத்து கிழிந்து தொங்கும் அரதப் பழசான நாடகம் இந்த ராஜினாமா நாடகம் தான்.. ஏதோ ஓட்டுக்கு கொஞ்சம் காசு வாங்கிக் கொண்டு போடுகிறார்கள் என்றால் மக்கள் என்ன சொன்னாலும் நம்புவார்கள் என்று எண்ணுவதா?

அரசியலில் செய்வது மாதிரியே அரத பழசான தாக்குதல் திட்டங்களை பயன் படுத்தியால் தான் அந்த படுகொலைகளே நடந்தது என்று நிபுணர்கள் கடுமையாக சாடுகின்றனர்..

ராஜினாமா செய்வதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை... இந்த மாதிரி ஓட்டரசியல் ஸ்டண்டுகளை ஓரம் வைத்து விட்டு மாவோயிஸ்ட்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.. இது ஓரிரண்டு வருட பிரச்சினையல்ல உடனே தீர்ப்பதற்கு.. ஆனால் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆக்கப் பூர்வமான வழியில் முதல் அடியை இன்றே வைத்தால் 5 வருடத்திலோ, 10 வருடத்திலோ நிச்சயம் இந்த பிரச்சினைகள் தீர்க்கப் பட்டு விடும்... நான் இந்த பதிவில் எளிதாக எழுதி விடுவது போல் அல்ல தீர்வுக் காண்பது.. இருந்தாலும் ஒரு மத்திய உள்துறை அமைச்சருக்கு இருக்கும் அளப்பறிய அதிகாரத்தின் மூலம் என்ன மாதிரியான தீர்வை வேண்டுமானாலும் முன் வைக்கலாம்.. முன்னெடுத்துச் செல்லலாம்..

வேண்டியது எல்லாம் என் ஆட்சிக்கு பிறகு, எனக்கு பிறகு, என்ற எண்ணம் இல்லாமல், ஓட்டு அரசியலாக இதை பார்க்காமல் நாட்டு நலனை மட்டும் கருத்தில் கொள்ளுதல் மட்டுமே..

ராஜினாமா நாடகங்களை நடத்துவதை விட்டு விட்டு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்.. எல்லாவற்றையும் ஓட்டரசியலாக பார்க்காதீர்கள்... இது போன்ற விஷயங்கள் ஓட்டு போட்டு பிரதிநித்துவத்தை தேர்ந்தெடுக்கும் ஜனநாயகத்துக்கு எதிரானது.. இது வலுப்பெற்றால் ஜனநாயகமே இருக்காது.. அதற்கு பிறகு ஓட்டரசியலை வைத்துக் கொண்டு மணியாட்டிக் கொண்டு போக வேண்டியது தான்….

பின் குறிப்பு

இத்தனை மாற்று கட்சிகளுடன், ஐந்து வருடத்துக்கு ஒரு முறை ஆட்சி மாறக்கூடிய ஜனநாயக அமைப்பிலேயே இவ்வளவு ஊழல்களும், சர்வாதிகாரமும் தலைவிரித்தாடுகிறதே, இந்த அதிகாரமெல்லாம், ஒரே கட்சியிடமோ, ஒரேகுழுவிடமோ போய் சேர வழி வகுக்கும் மாவோயிஸ்ட்களின் நோக்கம் நிறைவேறினால் என்ன ஆகும் என்று, ஏன் அவர்களை ஆதரிக்கும் மக்கள் யோசிப்பதேயில்லை….

3 மறுமொழிகள்:

இளமுருகன் சொன்னது…

//ஏதோ ஓட்டுக்கு கொஞ்சம் காசு வாங்கிக் கொண்டு போடுகிறார்கள்//

ஓட்டு இல்லாமல் யாரும் எந்த பதவிக்கும் வர முடியாது.நம் கையில் உள்ள பலம் வாய்ந்த ஆயுதத்தை காசுக்கு விற்றுவிட்டு பின் ஆட்சியில் இருப்பவரை குறை கூறுவதால் ஏதாவது பயன் இருக்கிறதா என்ன?

இளமுருகன் சொன்னது…

//ஓட்டரசியல் ஸ்டண்டுகளை ஓரம் வைத்து விட்டு //

அப்படி ஒரு கட்சி எந்த காலத்திலும் வரப்போகும் சாத்தியமே தெரியவில்லையே! உங்கள் கனவு மெய் பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்?

தண்டேவாடா படுகொலையில் உயிர் துறந்த போலீஸ் வீரர்களின் குடும்பங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்..

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..