அன்னா ஹஸாரே உடன் போராடும் பல்லாயிரக்காண மக்களுக்கு நன்றிகள்.
அன்னாவுக்கு ஆதரவு தெரிவிப்போரில் பெரும்பாலும் நன்றாக படிப்பறிவு உள்ள நடுத்தர, மேல் தட்டு வாழ்க்கை முறையில் வாழும் மக்களாக இருக்கிறார்கள்.
தங்கள் "ஊழல் ஒழிப்பு" சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.ஆனால் கசப்பான உண்மை என்ன என்று எண்ணிப் பார்த்தால், நாம் அனைவரும் செய்யும் சிறு வருமான வரி ஏய்ப்பு தான் ஊழலின் ஆரம்பம்…
பணம் கொடுத்து பள்ளி, கல்லூரியில் பிள்ளைகளுக்கு இடம் வாங்குவதில் ஆரம்பித்து,
சொத்தை குறைந்த விலைக்கு பதிவு செய்தல், பொருட்களை பில் இல்லாமல் வாங்குதல்,
ஓட்டுக்கு பணம் வாங்குதல், பணம் கொடுத்து பேப்பர் சேஸ் செய்து பாஸ் செய்தல் என்று நாம் செய்யும் அத்தனை சட்ட, விதிமுறை மீறல்களும் ஒரு வகையில் ஊழல் தான்…
இது போன்ற ஊழல்களில் ஈடுபடுவது நம் போன்ற நடுத்தர, மேல்தட்டு மக்களே.. வசதி இருப்பதினால் விதிமுறைகளை வளைக்க பார்க்கும் நம் செயல்களே அத்துணை ஊழல்களின் ஆரம்பம்..
ஊழலுக்கு எதிராக போராடுவதாக நினைக்கும் அத்துணை பேரும் இவை போன்ற அன்றாட வாழ்வில் தான் செய்யும் விதிமுறை மீறல்களை கைவிட வேண்டும்..
அப்போது தான் உண்மையாக ஊழல் ஒழிந்ததாக பொருள்.
அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் நோக்கி "ஊழல்" என்று ஒரு விரலை நாம் நீட்டும் போது மற்ற மூன்று விரல்கள் நம்மை சுட்டிக் காட்டி கொண்டிருப்பதை மறவாதிருப்போமாக.