Sunday, August 28, 2011

அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தரும் ஊழல்வாதிகள்

அன்னா ஹஸாரே உடன் போராடும் பல்லாயிரக்காண மக்களுக்கு நன்றிகள்.

அன்னாவுக்கு ஆதரவு தெரிவிப்போரில் பெரும்பாலும் நன்றாக படிப்பறிவு உள்ள நடுத்தர, மேல் தட்டு வாழ்க்கை முறையில் வாழும் மக்களாக இருக்கிறார்கள்.

தங்கள் "ஊழல் ஒழிப்பு" சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.ஆனால் கசப்பான உண்மை என்ன என்று எண்ணிப் பார்த்தால், நாம் அனைவரும் செய்யும் சிறு வருமான வரி ஏய்ப்பு தான் ஊழலின் ஆரம்பம்…

பணம் கொடுத்து பள்ளி, கல்லூரியில் பிள்ளைகளுக்கு இடம் வாங்குவதில் ஆரம்பித்து,
சொத்தை குறைந்த விலைக்கு பதிவு செய்தல், பொருட்களை பில் இல்லாமல் வாங்குதல்,
ஓட்டுக்கு பணம் வாங்குதல், பணம் கொடுத்து பேப்பர் சேஸ் செய்து பாஸ் செய்தல் என்று நாம் செய்யும் அத்தனை சட்ட, விதிமுறை மீறல்களும் ஒரு வகையில் ஊழல் தான்…

இது போன்ற ஊழல்களில் ஈடுபடுவது நம் போன்ற நடுத்தர, மேல்தட்டு மக்களே.. வசதி இருப்பதினால் விதிமுறைகளை வளைக்க பார்க்கும் நம் செயல்களே அத்துணை ஊழல்களின் ஆரம்பம்..

ஊழலுக்கு எதிராக போராடுவதாக நினைக்கும் அத்துணை பேரும் இவை போன்ற அன்றாட வாழ்வில் தான் செய்யும் விதிமுறை மீறல்களை கைவிட வேண்டும்..


அப்போது தான் உண்மையாக ஊழல் ஒழிந்ததாக பொருள்.


அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் நோக்கி "ஊழல்" என்று ஒரு விரலை நாம் நீட்டும் போது மற்ற மூன்று விரல்கள் நம்மை சுட்டிக் காட்டி கொண்டிருப்பதை மறவாதிருப்போமாக.



1 மறுமொழிகள்:

  1. மாயன்,

    நன்றி, உங்களைப்போலவே இன்னொரு மாயனும் பதிவில் இருக்கார்ப்போல, அவர்ப்பதிவில் போய் நான் பின்னூட்டம் இட்டால் வருவதே இல்லை :-))

    சரி புரோபைல் மூலம் வந்து பார்ப்போமே என்று வந்தேன்!

    அப்புறம், அன்னா ஹாசாரே,(அவரே ஒரு டுபாக்கூர்) இங்கே நிலவும் ஊழல் பற்றி எல்லாம் பொதுவாக மக்கள் தான் காரணம் னு சொல்லலாம், ஆனால் கொடுக்க மாட்டேன் என்று சொன்னால் சிக்கி சின்னா பின்னம் ஆவோம், அனுபவத்தில் சொல்றேன்.

    போராடனும் சொல்வீங்க , எவ்வளவூ நேரம் உயிர் போக 1/2 மணி நேரம் தான் இருக்கு , போய் போராடி வருவிங்களா, போர உயிர லஞ்சம் கொடுத்து காப்பாத்துவிங்களா?

    பதிலளிநீக்கு


உலகப் பொதுமறை

யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.

காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள் தான் அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்.
-திருவள்ளுவர் -(அதி: நாணுத் துறவுரைத்தல்)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

LinkWithin

Related Posts with Thumbnails

Amazon Contextual Product Ads

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..