ஹூம்.. பஸ் டிக்கட் விலை ஏற்றம் எப்படி எல்லாம் நம்மை பாதிக்கிறது
------------------------------------------------------------------------------------------
பொண்ணு வீடு பெரிய இடம்னு சொல்றீங்களே எப்படி நம்பறது
பொண்ணு வீட்டுக்காரங்க எல்லாரும் ஆபீஸ், கடைக்கு இப்படி எங்க போனாலும் பஸ்ல தான் போவாங்களாம்...
------------------------------------------------------------------------------------------
சிக்கனம் சிங்காரம் - பஸ்சுல டிக்கெட் எடுத்து மாளலை... அதனால இப்போ எல்லாம் சிம்பிளா ஆட்டோவில் போயிட்டு வந்துடறேன்...
------------------------------------------------------------------------------------------
பையன் நிறைய பணம் புழங்குற இடத்தில வேலை செய்யறான்னு சொல்றீங்களே? எங்க ரிசர்வ் பாங்க்ல வேலை செய்யறனா...
இல்லைங்க கவர்மெண்ட் பஸ்ல கண்டக்டரா இருக்கான்...
-------------------------------------------------------------------------------------------
அந்தாளு ஆளுங்கட்சி காரன்னு எப்படி சொல்ற
பஸ் விலையை ஏத்தாம பஸ் டிக்கட் விலையை மட்டும் ஏத்தி இருக்கங்களேன்னு சந்தோஷப்படுங்கன்னு சொல்லிட்டு போறாரு
--------------------------------------------------------------------------------------------
ஏன்டா பஸ் டிக்கட் விலை ஏறிடுச்சுன்னு ஊரே பரபரப்பா இருக்கு நீ மட்டும் கவலை இல்லாம இருக்கியே எப்படி
நாம எல்லாம் என்னைக்கு மச்சி பஸ்ல டிக்கட் எடுத்திருக்கோம்... விலை ஏத்தினா நமக்கு என்ன இறக்கினா நமக்கு என்ன
--------------------------------------------------------------------------------------------
பஸ் டிக்கட் விலை ஏறிடுச்சுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ என்னடான்னா கடவுளுக்கு நன்றி சொல்ற?
நல்ல வேளை.. ரயில்வே டிபார்ட்மென்ட் சென்ட்ரல் கவர்ன்மென்ட் கண்ட்ரோல்ல இருக்கேன்னு நினைச்சு தேங்க்ஸ் சொல்றேன்டா
---------------------------------------------------------------------------------------------
இப்படி ஒரு மாயன் இருப்பது தெரியாமல் நானும் மாயன் என்றே எழுத ஆரம்பித்துவிட்டேன். ஆனால் 'அகமும் புறமும் மாயன்' என்றே எழுதுகிறேன்.
பதிலளிநீக்குhttp://ahamumpuramum.blogspot.com/
கலக்குங்க மாயன்...
பதிலளிநீக்குஎனக்கு எப்படி நான் அந்த பெயரை தேர்ந்தெடுத்தேன் என்பது நினைவில்லை...
நீங்கள் எதற்காக அந்த பெயரை தேர்ந்தெடுத்தீர்கள்