உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

புதன், ஆகஸ்ட் 08, 2012

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா...


கையில காசு வாயில தோசைன்னா என்னன்னு தெரியுமா?

இதை படிச்சுப் பாருங்க புரியும்...

**********************************************************************

புதுடில்லி : ஜூலை 11,2012,09:54 IST

மீண்டும் நிதியமைச்சராகிறார் சிதம்பரம்?

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் மத்திய நிதியமைச்சர் உள்ளிட்ட பல்‌வேறு பொறுப்புகளில் இருந்த பிரணாப் முகர்ஜி தன்னுடைய எல்லா பதவிகளையும் ராஜினாமா செய்தார். இதனால் பிரணாப் வகித்த நிதியமைச்சர் பொறுப்பு இப்போதைக்கு தற்காலிகமாக பிரதமர் மன்மோகன் சிங்கே கவனித்து வருகிறார்...

நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் சிதம்பரம்,

"நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையை போக்க வருவாயை அதிகரிக்கவும், தேவையில்லாத செலவினங்களை குறைக்கவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்."

சிதம்பரத்தின் இந்த பேச்சால் மீண்டும் அவர் நிதியமைச்சர் பொறுப்பு ஏற்க கூடும் என்றும், பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாகவே பிரதமர் மன்மோகன் சிங், சிதம்பரத்தை நிதியமைச்சராக பொறுப்பேற்க சொல்வார் என்று டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....

************************************************************************
 இவ்வளவு அக்கறையாக நாட்டின் நிதி நிலைமை குறித்து தலைவர் பேசிய பிறகும் 15 நாட்களாக எதிர்ப்பார்த்தபடி ஒன்றுமே நடக்கவில்லை...

பிறகு ஒரு நாள்.......

************************************************************************

புதுடில்லி: ஜூலை 29,2012,00:51 IST
ராகுல் திறமையானவர்: சிதம்பரம் பாராட்டு
""காங்கிரஸ் கட்சியிலும், மத்திய அரசிலும், எந்த பதவியை கொடுத்தாலும், ராகுல், அதை திறமையாகச் செய்வார்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

மலையாள "டிவி' சேனலுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அளித்த பேட்டி: லோக்சபா, மத்திய அரசு, காங்கிரஸ் கட்சி என, இந்த மூன்றில், எந்த பதவியை கொடுத்தாலும், ராகுல், அதை திறமையாக செய்வார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும், ராகுலுக்கு எந்த பதவி கொடுப்பது என்பது குறித்து காங்., தலைவர் சோனியா, பிரதமருடன் ஆலோசனை நடத்துவார். அதேநேரத்தில், ராகுலுக்கு என்ன பதவி கொடுத்தாலும், அதை நான் வரவேற்கிறேன். கட்சியிலோ, ஆட்சியிலோ, மிகப்பெரிய பொறுப்பு ராகுலுக்கு வழங்கப்பட வேண்டும்....... இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

************************************************************************




2 நாட்களுக்கு பின்.....

 புதுடில்லி: ஜூலை 31,2012,08:23 IST

ப.சிதம்பரம்: மீண்டும் நிதி அமைச்சர்

இதுவரை உள்துறை அமைச்சர் பொறுப்பினை வகித்த ப.சிதம்பரம் மீண்டும் நிதி அமைச்சர் பொறுப்பினை ஏற்கிறார்.

***********************************************************************

மேற்கண்ட 3 செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை... தொடர்பு இருப்பதாக யாரவது நினைத்தால் அது அவர்களின் சொந்த கற்பனையே ஆகும்.. அதற்கு நிர்வாகம் எந்த பொறுப்பும் ஏற்காது என்பதை தெரிவித்து கொள்கிறோம்....

புதன், ஆகஸ்ட் 01, 2012

சாம் சைல்டர்ஸ் - சமூகத்தின் இருள் ஒளி விடும் கதை



தெருவில் ஒரு குழந்தை தாய், தந்தை அல்லது யாராலோ அடித்து துன்புறுத்த படுவதை பார்க்கும் போது நமக்கு என்ன தோன்றும்?

அதை தடுக்க.. இல்லை தடுக்க நினைக்க தோன்றும்.. துன்புறுத்த நினைக்கும் ஆளை தடுத்து 2 அறை கொடுக்க தோன்றும்...

நம்மில் சிலர் அதை செய்வதும் உண்டு.. ஆனால் பெரும்பாலானோர் நமக்கேன் வம்பு என்று தான் செல்வோம்.. நாம் இல்லை என்று சொன்னாலும் அது தான் உண்மை...

கசப்பான உண்மை..

ஒரு ஜனநாயக நாட்டில், குழந்தை தெய்வம் என்று நமக்கு கற்றுத் தரக்கூடிய நாட்டிலேயே குழந்தை துன்புறுத்தப் படக்கூடும் என்றால்...

ஏழ்மையின் பிடியிலும், உள்நாட்டு போரினாலும், அதனால் ஏற்பட்ட பஞ்சத்தினாலும் துயரப்படும் நாட்டில், குழந்தைகளின் கதி என்ன என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை...

அவர்களுக்காக துப்பாக்கி தூக்கிய ஒருவனின் கதை இது.. திரைப்படத்தில் நம் கதாநாயகர்கள் செய்யவதாக காட்டப்படும் அதே ஹீரோயிசம் தான்.. ஆனால் சாம் சைல்டர்ஸ் ரத்தமும் சதையுமாக நம் கண் முன் அதை இன்னும் செய்துக் காட்டி கொண்டு விஸ்வரூபம் எடுத்து நின்று கொண்டிருக்கிறார்... மனசாட்சி உள்ள அனைவரும் இந்த உலகத்துக்கு நான் என்ன செய்திருக்கிறேன் என்று வெட்கப்பட வைப்பதற்காகவே பிறந்தவர் போல் சாம் அந்த குழந்தைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்..

நம் நாட்டிலும் வெளி நாடுகளிலும் எவ்வளவோ பேர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவளித்து கொண்டிருக்கிறார்கள்.. அவர்களுக்கு எல்லாம் அந்தந்த நாடுகளில் அமைதியான வாழ்வும், நிலையான பாதுகாப்பும் இருக்கிறது..

உள்நாட்டு போரில் துப்பாக்கி தோட்டாக்கள் இடைவிடாது மனித ரத்தம் குடித்துக் கொண்டிருக்கும் இடத்தில், போருக்கு குழந்தைகளை சண்டையிட வைப்பதற்கு அவர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும் கொலைவெறி ஓநாய் கூட்டத்துக்கு நடுவே கூடாரம் அடித்து சிங்கம் போல் இன்றும் கர்ஜித்து கொண்டிருக்கும் ஒரு மனிதனின் கதை இது..

சாம் சைல்டர்ஸ்

ஒரு கட்டிடத் தொழிலாளியின் கடைக்குட்டி மகனாக அமேரிக்காவின் வட தகோடா மாநிலத்தில் 1962 - ம் ஆண்டு பிறந்தார். தன்னுடைய 14 வது வயதில் மேனிலை பள்ளி படிக்கும் போதே போதைப் பொருள் , மது என அனைத்துக்கும் பழகி விட்ட சாம், ஒரு கட்டத்தில் போதைப் பொருள் விற்கவும், போதை கடத்தலுக்கு உடந்தையாகவும் செயல்பட்டார்...

சட்டத்தை மீறி செயல்ப்படும் பைக் குழுவிலும் இருந்த சைல்டர்ஸ், மோட்டார் சைக்கிள்களின் மேல் பெரும் காதல் கொண்டிருந்தார்... லின் என்ற காபரே நடனக் காரியை மணந்துக் கொண்டிருந்த சாம் தன்னுடைய 30 வயதிற்குள் பல முறை சிறை சென்று வந்து இருந்தார்.. போதை பொருள் கடத்தலுக்க்காகவும் கடத்தல்காரர்களின் பாதுகாப்புக்கும் துப்பாக்கி தூக்க ஆரம்பித்த சைல்டர்ஸ் இணையில்லாத துப்பாக்கி வீரரும் கூட... பைக்குகள் அவருக்கு முதல் காதலி என்றால் துப்பாக்கிகள் இரண்டாவது காதலி

தறிக்கெட்டு ஓடிக் கொண்டிருந்த சாமின் வாழ்க்கையின் திருப்புமுனை அவர் மனைவியாலேயே அவருக்கு வந்தது.. கிருத்துவ மதத்தில் நம்பிக்கை கொண்டவராக மாறி தனது காபரே தொழிலை விட்டு வேறு வேலை பார்க்க ஆரம்பித்திருந்த லின், சாமிற்கும் கிருத்துவ மதத்திலும் மனித சேவையிலும் ஈடுபாடு உண்டாகும் படி செய்தார்.. தன்னுடைய 30 - வது வயதில் முதன் முறையாக கிருத்துவ சபைக்கு வந்த சாம், மனம் திருந்தி போதை தொழிலை கைவிட்டு, கட்டிட தொழிலில் இறங்கினார்..

ஆறு வருடத்தில் கட்டிட தொழிலில் பெரும் செல்வம் ஈட்ட ஆரம்பித்தார்.. வாழ்கையை மேலும் மேலும் அர்த்தம் உள்ளதாக சாம் மாற்றி கொண்டிருந்த சமயத்தில்.. 1998 - ல் சாம் வழிப்பட செல்லும் திருச்சபையில் அவர் வாழ்கையை மாற்றிய அந்த சம்பவம் நிகழ்ந்தது... மத்திய ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருந்த ஒரு பாதிரியாரின் பேச்சினால் கவரப்பட்ட சாம், அங்கே வீடின்றி வாழ வழியின்றி தவிக்கும் மக்களுக்கு சிறிது காலம் சேவை செய்வதுஅதாவது ஆப்பிரிக்காவிற்கு சென்று ஏழைகளுக்கு இலவசமாக வீடுக் கட்டி தந்து சேவை செய்வது என்று முடிவு செய்தார்...

அதற்காக உள்நாட்டு போரில் பாதிக்கப் பட்டிருந்த தெற்கு சூடான் நாட்டிற்கு அதே வருடம் வந்து சேர்ந்தார்...

-தொடரும்