கையில காசு வாயில தோசைன்னா என்னன்னு தெரியுமா?
இதை படிச்சுப் பாருங்க புரியும்...
**********************************************************************
புதுடில்லி : ஜூலை 11,2012,09:54 IST
மீண்டும் நிதியமைச்சராகிறார் சிதம்பரம்?
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் மத்திய நிதியமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்த பிரணாப் முகர்ஜி தன்னுடைய எல்லா பதவிகளையும் ராஜினாமா செய்தார். இதனால் பிரணாப் வகித்த நிதியமைச்சர் பொறுப்பு இப்போதைக்கு தற்காலிகமாக பிரதமர் மன்மோகன் சிங்கே கவனித்து வருகிறார்...
நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் சிதம்பரம்,
"நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையை போக்க வருவாயை அதிகரிக்கவும், தேவையில்லாத செலவினங்களை குறைக்கவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்."
சிதம்பரத்தின் இந்த பேச்சால் மீண்டும் அவர் நிதியமைச்சர் பொறுப்பு ஏற்க கூடும் என்றும், பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாகவே பிரதமர் மன்மோகன் சிங், சிதம்பரத்தை நிதியமைச்சராக பொறுப்பேற்க சொல்வார் என்று டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....
************************************************************************
இவ்வளவு அக்கறையாக நாட்டின் நிதி நிலைமை குறித்து தலைவர் பேசிய பிறகும் 15 நாட்களாக எதிர்ப்பார்த்தபடி ஒன்றுமே நடக்கவில்லை...
பிறகு ஒரு நாள்.......
************************************************************************
புதுடில்லி: ஜூலை 29,2012,00:51 IST
புதுடில்லி: ஜூலை 29,2012,00:51 IST
ராகுல் திறமையானவர்: சிதம்பரம் பாராட்டு
மலையாள "டிவி' சேனலுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அளித்த பேட்டி: லோக்சபா, மத்திய அரசு, காங்கிரஸ் கட்சி என, இந்த மூன்றில், எந்த பதவியை கொடுத்தாலும், ராகுல், அதை திறமையாக செய்வார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும், ராகுலுக்கு எந்த பதவி கொடுப்பது என்பது குறித்து காங்., தலைவர் சோனியா, பிரதமருடன் ஆலோசனை நடத்துவார். அதேநேரத்தில், ராகுலுக்கு என்ன பதவி கொடுத்தாலும், அதை நான் வரவேற்கிறேன். கட்சியிலோ, ஆட்சியிலோ, மிகப்பெரிய பொறுப்பு ராகுலுக்கு வழங்கப்பட வேண்டும்....... இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
************************************************************************
2 நாட்களுக்கு பின்.....
புதுடில்லி: ஜூலை 31,2012,08:23 IST
ப.சிதம்பரம்: மீண்டும் நிதி அமைச்சர்
இதுவரை உள்துறை அமைச்சர் பொறுப்பினை வகித்த ப.சிதம்பரம் மீண்டும் நிதி அமைச்சர் பொறுப்பினை ஏற்கிறார்.
***********************************************************************
மேற்கண்ட 3 செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை... தொடர்பு இருப்பதாக யாரவது நினைத்தால் அது அவர்களின் சொந்த கற்பனையே ஆகும்.. அதற்கு நிர்வாகம் எந்த பொறுப்பும் ஏற்காது என்பதை தெரிவித்து கொள்கிறோம்....
இதெல்லாம் அரசியல் உள்விவகாரம்...
பதிலளிநீக்கு///மேற்கண்ட 3 செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை... தொடர்பு இருப்பதாக யாரவது நினைத்தால் அது அவர்களின் சொந்த கற்பனையே ஆகும்.. அதற்கு நிர்வாகம் எந்த பொறுப்பும் ஏற்காது என்பதை தெரிவித்து கொள்கிறோம்....///
பதிலளிநீக்குஆமா ஆமா எந்த சம்பந்தமும் இல்லை
குடியரசு நடக்குதா முடியரசு நடக்குதான்னு தெரியல... கொள்ளு தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, மகன்-னு வம்ச பாரம்பரியமா நாட்டை ஆள பார்க்கிறாங்க.. நேரு, இந்திரா இவங்களுக்கும் சுதந்திர போராட்டதில பங்கெடுத்தவங்கன்னு ஒரு தகுதி இருக்கு.. ரத்த சம்மந்தம் தவிர மத்தவங்களுக்கு என்ன தகுதி இருக்குன்னு சத்தியமா புரியலை...
பதிலளிநீக்குநன்றி சௌந்தர், ஹைதர் அலி