உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

பந்த் தேவையா?

தமிழகத்தில் இன்று(02-ஏப்ரல்-07) நடைபெறும் திடீர் முழு அடைப்பால் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம்.

விஷயம் எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முழு அடைப்பு ஒன்று தான் ஒரே வழியா?...

ஒரு வகையில் நடைபெறும் அத்தனைப் போராட்டங்களுமே மக்கள் நன்மைக் குறித்தே நடத்தப் படுவதாக நடத்துபவர்கள் கூறிக்கொண்டாலும், அத்தகையப் போராட்டங்களிலேயே மக்கள் நலன் கேள்விக்குறியாவது தான் பெரிய வேதனை...

அதுவும் முன்னறிவிப்பு இன்றி நடத்தப்படும் இத்தகைய முழு அடைப்புகளால் நமது மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வேற்று மாநிலத்தவரும் பாதிக்கப்படுகிறார்கள். மாண்புமிகு முதல்வர் கலைஞர்அவர்கள் நல்ல ஒரு தலைவர். ஆதரவு கட்சிகளின் வற்புறுத்தலின் பேரிலேயே இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது...

எது எப்படி ஆயினும் இத்தகைய முழு அடைப்பு போராட்டங்கள், வளரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் மேம்பாட்டிற்கும் ஒரு பின்னடைவாகும்.

அதுவும் முன்னறிவிப்பு இன்றி ரெயில்கள், பேருந்துகள் ஆகியவற்றை நிறுத்துவது நிச்சயம் ஒரு மக்கள் விரோத செயலாக தான் மக்கள் பார்ப்பார்கள்.

இது போன்ற செயல்கள் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமன்றி போராட்டத்தின் காரணமான உண்மையான பிரச்சினையின் முக்கியத்துவத்தை குறைப்பதாக அமையும்.

0 மறுமொழிகள்:

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..