அதுவும் கடல் மேல் இல்லை... கடல் உள்ளே...
இது என்ன உளறல்னு யோசிக்கிறீங்களா... கார் கடல் உள்ளே போகுமான்னா?
ஜேம்ஸ் பாண்ட் பட ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான கார் இது.

The Spy who loved me படத்தில் ஜேம்ஸ் பாண்ட் பயன் படுத்தும் LOTUS ESPRIT என்ற கற்பனை காரின் உண்மை வடிவமாக ஒரு கார் தயாரிக்கப்பட்டுள்ளது...

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரின்ஸ்பீடு(Rinspeed) என்னும் கார் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் Frank M Rinderknecht என்னும் தயாரிப்பாளர் உருவாக்கியிருக்கும் ஸ்கூபா (sQuba) என்னும் கார் தான் அது.....

இந்த அற்புதமான காரை பற்றி சில தகவல்கள்...
• Amphibious convertible - (நீரிலும் நிலத்திலும் ஓடக்கூடிய) வகையை சேர்ந்த கார் இது...

• இந்த வகையை சேர்ந்த மற்ற தனி நபர் வாகனங்களான Amphicar, Gibbs Aquada, Gibbs Humdinga, ஆகிய கார்கள் நீரின் மேலே செல்லும் தன்மை கொண்டவை... ஸ்கூபா மட்டுமே தண்ணீரின் அடியில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது...

• நீருக்கு அடியில் சென்று ஆழ்கடல் காட்சிகளை காணும் விளையாட்டிற்கு, ஸ்கூபா டைவிங் என்று பெயர்... அதிலிருந்து ஸ்கூபா என்பது எடுக்கப்பட்டு காருக்கு பெயரிடப்பட்டிருக்கிறது....

• self-contained underwater breathing apparatus - என்னும் வார்த்தையின் சுருக்கமே SCUBA

• இது மூன்று மின்சக்தியால் இயங்கும் மின்விசைகளால் ஓடக்கூடியது... பின் பக்கம் இருக்கக்கூடிய ஒரு விசையின் உதவியால் தரையிலும், நீர் நிரப்பி நீரில் அமிழ்ந்த பின், 2 சக்தி வாய்ந்த ப்ரொப்பல்லர்கள் உதவியுடன் முன்னோக்கி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது...

• 10 மீட்டர் ஆழத்தில் செல்லக்கூடிய இந்த காரில், Lithium Ion ரீச்சார்ஜபிள் மின்கலன்கள் பயன் படுத்த படுவதால், நீர் மாசுப்பாடு என்பது முற்றிலுமாக தடுக்கப்படுகிறது...

• தரையில் 120 கி.மீ வேகத்திலும், தண்ணீரின் மேற்பரப்பில் 6 கி.மீ வேகத்திலும், நீருக்கு அடியில் 3 கி.மீ வேகத்திலும் செல்லக்கூடிய திறன் படைத்தது....

• நீரின் அடியில் பயணிக்கும் போது காரில் சேமிக்கப்பட்டிருக்கும் பிராண வாயுவை சுவாசித்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது...

• இது தவிர சக்தி வாய்ந்த 2 நீர் நிரப்பிகளும் உண்டு. இவை வாகனத்தை மூழ்க வைக்க நீரை நிரப்பவும், வாகனம் நீரில் இருந்து வெளியே வரும் போது நீரை வெளியேற்றவும், வாகனம் நீரினுள்ளே செல்லும் போது வழி நடத்தவும் உதவுகின்றன...

• லேசர் சென்சார் தொழில்நுட்பத்தில் இது நீரின் அடியில் தானாகவும் இயங்கக்கூடிய வல்லமையும் பெற்றுள்ளது...

• பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கூரையற்றதாக இந்த கார் வடிவமைக்கப் பட்டிருக்கிறது...

• இதன் தயாரிப்பாளர் இந்த காரைப் பற்றிக் குறிப்பிடும் போது "இது பணக்காரர்களுக்கான ஒரு விளையாட்டுப்பொருள்" என்கிறார்...

• ஜெனீவாவில் 2008, மார்ச் 13ந் தேதி நடந்த கார் கண்காட்சியில் அறிமுகபடுத்தப் பட்ட இந்த காரின் வணிக ரீதியிலான தயாரிப்பு எப்போது துவஙும் என்பது உறுதி செய்யப்படவில்லை... ஆனால் விற்பனைக்கு வந்தால் ரோல்ஸ் ராய்ஸை விட குறைவான விலையில் இந்த காரை வாங்க முடியும் என்று தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவிக்கிறார்...

• அப்படின்னா நிச்சயம் நம்மூர் அரசியல்வாதிங்களோட வாரிசில யாரோ ஒருத்தரோ, இல்லை சினிமா கதாநாயகன் யாரோ ஒருத்தரோ இதை வாங்கிடுவாங்க... அப்ப இதை பெசண்ட் பீச்சுல பார்க்கலாம்ல?
(நாம எல்லாம் பார்க்க தான் முடியும்...இதை வாங்கனும்னா சம்பாதிச்சா பத்தாது.. கொள்ளை அடிக்கணும்... சினிமா, அரசியல், பன்னாட்டு கம்பெனி இப்படி ஏதாவது பண்ணி மறைமுக கொள்ளை அடிச்சா தான் வாங்க முடியும்..)
அட்டகாசம் போங்க.
பதிலளிநீக்குஇன்னிக்குத்தான் ஒரு கார் விளம்பரம்
தொலைக்காட்சியில் பார்த்தேன்.
(தினமும் வருது போல. நாளைய வெதர் ரிப்போர்ட்க்காக அந்தப் பக்கம் தலையைத் திருப்புனேன்)
நிஸ்ஸான் 4x4
வண்டு, பாம்பு, முதலை, டைனோ, ன்னு பாதைக்குத் தகுந்தபடி விதவிதமா உருமாறிக்கிட்டேப் போகுது:-)
அருமை !!!
பதிலளிநீக்குநன்றி துளசி கோபால், தமிழ்க்குழந்தை...
பதிலளிநீக்குஇது குறித்தான இன்னொரு பதிவும் வெளியிட்டுள்ளேன்... பாருங்கள்..
நல்ல தகவல்கள். நன்றி.
பதிலளிநீக்குநான் எழுதிய அறிவியல் புனைகதை ஒன்றில் இது போன்ற ஒரு கற்பனை வருகிறது.
தந்தமும் சந்தனமும்"