உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

ஸ்கூபா கார்- தயாராகும் தமிழகம்


சென்ற இடுகையில் ஸ்கூபா காரைப் பற்றி சில விவரங்களை தெரிவித்து இருந்தோம்... இந்த இடுகையில் மேலும் சில தகவல்கள் உங்களுக்காக....

ஒரு வேளை இந்த காரை இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வர்றாங்கன்னு வெச்சுப்போம்... அந்த காரை வெச்சு யார் யார் என்ன என்ன பண்ணுவாங்கன்னு ஒரு சின்ன கற்பனை....

ரஜினிகாந்த் உடம்பில் மோட்டாரைக் கட்டி கொண்டு நீரில் குதித்து ஏற்கனவே மூழ்கிய காரை மூழ்கடித்து எதிரிகளை அழித்து கதாநாயகியையும் அவரின் கொள்ளுப் பாட்டியையும் காப்பாற்றுவார்.... இந்த படத்தின் வசூல் பெங்களூர் தமிழர்களுக்கும், நதிநீர் திட்டத்துக்கும் பிரித்து கொடுக்கப் படும்...

விஜயகாந்த் இந்த காரில் தப்பிச்செல்லும் எதிரியின் திட்டத்தை முறியடிப்பதோடு, எதிரி நாட்டு வில்லனை நடுக்கடலில் நிற்க வைத்து தமிழிலேயே நாற்பது பக்கத்துக்கு நாக்கை பிடுங்கி கொள்கிற மாதிரி கேள்வி கேட்பார்... அவரின் உச்சரிப்பை பார்த்து பீதியில் மிரண்டு போய் செயலற்று நிற்கும் எதிரியை பேக் கிக் அடித்து வீழ்த்து தூக்கி கொண்டே கடலில் 20 மைல் நடந்து வந்து கரையேறுவார்... படம் பார்க்கும் அனைவரும் சீட்டியடித்து சீட்டை பிறாண்டுவார்கள்...

ஷங்கர் அருமையான ஒரு டூயட் காட்சியை நீருக்கு அடியில் எடுப்பார்.... கிராபிக்ஸ் எஃபக்டில் கார் கப்பலாய் மாறும் காட்சி கட்டாயம் இடம் பெறும்... இளிச்சவாய் தயாரிப்பாளர் பட்ஜட்டை கேட்ட உடனே பணத்தையும் போட்டு விட்டு படம் ஜெயிக்க வேண்டுமே என்று திருப்பதிக்கு போய் மொட்டையும் போடுவார்(குடும்பம் மொத்தத்துக்கும்)

மணிரத்னம் யாருக்கும் புரியாத கோணத்தில் திரைக்கதை அமைத்து படம் எடுப்பார்... கடலுக்கு அடியில் சந்தித்து காதலிக்கும் காதலர்கள் பற்றி... படத்தில் ஒரு வில்லனும் உண்டு... அனைவரும் பேசிக்கொள்வது நீருக்கு அடியிலேயே நேரடியாக விஷேச மைக் வைத்து பதிவு செய்யப்படும்... ஹீரோவாக அபிஷேக் பச்சனும், ஹீரோயினாக ஐஸ்வர்யாவும் ஏகமனதாக தேர்வு செய்ய படுவார்கள்..(அபிஷேக்கை வாங்கினால் ஐஸ் இலவசம் போல...)
ஒரு பத்து பேராவது படத்தை பார்த்து விட்டு வாழப்பிடிக்காமல் அந்த கார் போலவே தண்ணீருக்குள் போய் விடுவார்கள்... திரும்பி வரவே மாட்டார்கள்...

அந்த காரின் விஷேச தன்மைகளை பற்றியும் அதை மணிரத்னமும், ஷங்கரும் படமாய் எடுத்த விதம் பற்றியும், கமல் சன் TVக்கு ஒரு பிரத்யேக பேட்டியளிப்பார்... படம் புரியாமல் போயும் மனசை தேத்தி கொண்டு விளிம்பு நிலையில் நின்ற சிலர் இந்த பேட்டியை பார்த்தவுடன் உடனடியாக கடலுக்கு போய் விடுவார்கள்...

இதே போன்ற காரை ஒண்ணே முக்கால் லட்சத்துக்கு விற்பனை செய்ய போவதாக TATA அறிவிக்கும்... ஆனால் உண்மையான விலை இரண்டே முக்கால் லட்சத்து முப்பத்து மூன்று ரூபாய் மூணு பைசாவாக இருக்கும்...

இந்த மாதிரி ஏராளமான கார்களை வாங்கி அதில் நகை, பணம் நிரப்பி கடலுக்கு அடியில் மறைத்து வைத்திருப்பதாக கட்சித்த்லைவர்கள் ஒருவர் மேல் ஒருவர் குற்றஞ்சாட்டி அறிக்கை விடுவார்கள்...

இந்தியா இந்த கார்களில் வந்து தங்கள் துறைமுகங்களை வேவு பார்ப்பதாக பாகிஸ்தான் ஐ.நா சபையில் புகார் கொடுக்கும்...

இந்த காரை வாங்க, ஓட்ட கடும் கட்டுப்பாடுகளை சென்னை போக்குவரத்து காவல் துறை விதிக்கும்... (பின்னே கடல் உள்ளே போய் கட்டிங் வாங்க முடியாதே.. அந்த கடுப்பு தான்)

எல்லவற்றையும் விட பெரிய ஹைலைட்டாக இந்த கார் தயாரிப்புக்கு பின் புலத்தில் CIA இருப்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதோடு மட்டுமல்லாமல் விஜயகாந்துக்கும் இந்த கார் தயாரிப்பு கம்பெனியில் கணிசமான பங்கு இருக்கிறது என்பதும், இதை பற்றி வருமான வரித்துறைக்கு தான் எழுதியுள்ளதாகவும் சுப்பிரமணியம் சாமி விடும் அறிக்கையில் அமெரிக்கா, தே.தி.மு.க இரண்டுமே கலகலத்து போகும்....

3 மறுமொழிகள்:

மங்களூர் சிவா சொன்னது…

/

இந்த மாதிரி ஏராளமான கார்களை வாங்கி அதில் நகை, பணம் நிரப்பி கடலுக்கு அடியில் மறைத்து வைத்திருப்பதாக கட்சித்த்லைவர்கள் ஒருவர் மேல் ஒருவர் குற்றஞ்சாட்டி அறிக்கை விடுவார்கள்...

இந்தியா இந்த கார்களில் வந்து தங்கள் துறைமுகங்களை வேவு பார்ப்பதாக பாகிஸ்தான் ஐ.நா சபையில் புகார் கொடுக்கும்...
/

:)))))))))))

பிரேம்ஜி சொன்னது…

//விஜயகாந்த் இந்த காரில் தப்பிச்செல்லும் எதிரியின் திட்டத்தை முறியடிப்பதோடு, எதிரி நாட்டு வில்லனை நடுக்கடலில் நிற்க வைத்து தமிழிலேயே நாற்பது பக்கத்துக்கு நாக்கை பிடுங்கி கொள்கிற மாதிரி கேள்வி கேட்பார்... அவரின் உச்சரிப்பை பார்த்து பீதியில் மிரண்டு போய் செயலற்று நிற்கும் எதிரியை பேக் கிக் அடித்து வீழ்த்து தூக்கி கொண்டே கடலில் 20 மைல் நடந்து வந்து கரையேறுவார்... படம் பார்க்கும் அனைவரும் சீட்டியடித்து சீட்டை பிறாண்டுவார்கள்...//

:-))))))))))))

மாயன் சொன்னது…

நன்றி பிரேம்ஜி

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..