இன்று ஒரு தமிழ் நாளிதழ் ஒன்றின் தலைப்புச் செய்தியைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டேன்...
பத்திரிகையில் இன்று என்ன முக்கியமான நிகழ்வை கவர் செய்துள்ளார்கள் என்று தெரியப்படுத்தி பொதுஜனத்தை தினசரியை வாங்க வைக்க கடைகளில் தொங்க விடுவார்களே அந்த தலையங்க பக்கத்தில்,
"2 மணி நேரம் கழிவறையில் சிக்கித் தவித்த நடிகர்" என்றுச் சுடச் சுட அறிவிப்பு கொடுத்து அசத்தியிருந்தார்கள்.
அதுவும் எதன் கீழே... ஹிமாச்சல பிரதேசத்தில் நெரிசலில் சிக்கி 130 பேர் பலி என்ற செய்தியின் கீழே...
ஆஹா பிரமாதம் என்று நீங்கள் புகழ்வது கேட்கிறது...
மக்கள் யாரந்த நடிகர் என்று ஆர்வமாக பத்திரிகையை வாங்கி படித்து விடுவார்களாம்... சேல்ஸ் பிய்த்து கொண்டு போகுமாம்... இது தான் அந்த தலையங்கத்தின் நோக்கமாக இருக்க கூடும்...
மக்களின் ரசனையை உருவாக்குவதில் பெரும் பங்கு இது போன்ற தினசரிகளுக்கு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது...
இறந்த வாலிபரின் ஜட்டி அம்பு குறியிட்டு காட்டப்படுவதில் தொடங்கி... கள்ளக் காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை வரை சுவாரசியமாக விவரிக்கும் இன்றைய தினசரிகள் அதில் பாதி சிரத்தையைக் கூட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கு தருவதில்லை...
அமெரிக்காவுடன் ஆன அணு ஒப்பந்தம், அது குறித்தான சர்ச்சைகள், விலைவாசி உயர்வு, பொருளாதார பின்னடைவுக்கான காரணம், உலக மயமாக்கல், உலகம் வெப்பமடைதல், புவிச்சுற்றும் வேகம் குறைதல், ஒஸோன் படலம், உலக நிகழ்வுகள் இப்படிப் பட்ட விஷயங்களை பற்றி உண்மையான சிரத்தையோடு செய்திகளையோ, விவாதங்களையோ முன் வைத்தது உண்டா?
மிஞ்சி போனால் வருடத்தில் ஒரு முறை ஆர்ட்டிக்கிள் ஒன்று எழுதி விடுவார்கள் அல்லது ஒரு சப்ளிமென்ட் போட்டு விடுவார்கள்...
எதிர்மறை விளைவுகளை சமூகத்தில் உண்டாக்கும் செய்திகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை குறைத்து.. பாஸிட்டாவான விஷயங்களுக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பது என் தனிப்பட்ட தாழ்மையான கருத்து...
நடிகர் ஸ்ரீமன் கேரவன் கழிவறையில் மாட்டிக்கொண்டதை தெரிந்து தெளிவு பெறுவதை காட்டிலும் நம் மக்கள் தெளிவு பெற இன்னும் நிறைய செய்திகள் இருக்க கூடும்...
நயன்தாராவுக்கு ஏற்பட்ட இடுப்பு சுளுக்கையும், ரஜினிகாந்த் அடித்துக் கொண்ட மொட்டையையும், கமல்ஹாசன் வைத்துக்கொண்டிருக்கும் புது சிகை அலங்காரத்தையும், சினிமா பத்திரிகைகள் எழுதட்டும்... தினசரிகள் ஏன் மெனக்கெட்டு தலையங்கம் எழுத வேண்டும்?
சமுதாயப் பொறுப்புணர்வு என்பது அவரவர்கட்கு வர வேண்டும்.. நாம சொல்லி திருந்தி விடப் போகிறார்களா என்ன?
தனி மனித ஒழுக்கம் என்பது நாம் சார்ந்துள்ள சமூகத்தினால் தான் தீர்மானிக்கப் படுகிறது.. அத்தகைய சமூகம் எதை கேட்க வேண்டும், எதைப் பார்க்க வேண்டும் என்று தீர்மாணிக்கும் அதிகாரத்தில் உள்ள தினசரிகள், தொலைக்காட்சிகள், வானொலிகள், வார மாத பத்திரிகைகள் போன்ற வெகுசன ஊடகங்கள் தத்தம் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
உண்மைதான் நண்பரே. நிஜமா கண்டிக்க வேண்டிய விடயம்.ஆனா இன்று எல்லாமே வியாபாரமயமாகியதில் நமது ஆதங்கத்தை பிரசுரிக்கவும் காசு குடுக்கணும்.
பதிலளிநீக்குசுபாஷ்.
http://hisubash.wordpress.com
பதிலளிநீக்குThanks dear dude..
donot consider the paper headings.
They are always doing the same thing.
Ore Kuttai Ore Mattai.
சுபாஷ், விஜய் பாலாஜி வருகைக்கும், கருத்துக்கும் நன்றி
பதிலளிநீக்குநான் அலுவலகம் முடிந்து Guindy ரயில்வே ஸ்டேஷனில் தினமும் பார்க்கிறேன். பேப்பர் கடையின் ஒரு ஓரத்தில் அனைத்து மாலை தினசரிகளின் முக்கிய செய்திகள் தொங்கிக்கொண்டிருக்கும். அதை பார்த்தபடி ஒரு கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கும். அதை படிப்பதில் ஒரு குறுகுறுப்பு இருக்கிறது போலும்!! ஏன் என்றால் அதில் வரும் செய்திகள் எல்லாம் some sort of Crime related. கொலை, கற்பழிப்பு, பூகம்பம், ஆட்சி கவிழ்ப்பு, திட்டு, பதவிநீக்கம்.. இப்படி... நீங்கள் செய்திதாள் உரிமையாளரை கேட்டீர்களேயானால், இப்படி போட்டால் தான் விற்பனை நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள். நம் மக்களிடையே ஒரு விதமான Toleration வளர்ந்துக்கொண்டிருக்கிறது. எதை பற்றியும் கவலை படுவது இல்லை. தான், தன் மனைவி, பிள்ளைகள் இதுகளுக்கு மட்டுமே கவலை பட முடியும்.
பதிலளிநீக்குவேண்டுகோள்: தயவு செய்து பொது இடங்களில் துப்புகிறவர்களை அவ்வாறு செய்யவேண்டாம் என்று அறிவுறுத்துங்கள். அவர்கள் உங்களுடைய உறவினரோ, நண்பராகவோ இருந்தால் தாராளமாக இந்த வேண்டுகோள் வைக்கலாம். சுத்தமான தமிழ்நாட்டிற்காக பாடுபடுவோம்.
//எதிர்மறை விளைவுகளை சமூகத்தில் உண்டாக்கும் செய்திகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை குறைத்து.. பாஸிட்டாவான விஷயங்களுக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பது என் தனிப்பட்ட தாழ்மையான கருத்து...
பதிலளிநீக்குஉண்மை .வரவேற்கிறேன்
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
அமுதன், கோவை விஜய்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி