உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வெள்ளி, ஏப்ரல் 02, 2010

இசை- எண்ணங்கள்


வாசிப்பு மட்டுமே கட்டுடைத்தலை நிகழ்த்தும் என்பதில்லை.. இசையும் பல சமயங்களில் கட்டுடைப்பை நிகழ்த்துகிறது...

கேட்கும் ஒவ்வொரு முறையும் புது புது உலகங்களை திறந்து விடக் கூடிய பாடல்கள் சாத்தியம் தான்...

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வரும் "மன்னிப்பாயா" பாடலைக் கேட்டு பாருங்கள்..

***********************

எனது தமிழய்யா தான் இசைக் கேட்கும் ஆர்வத்தை எனக்கு தூண்டியவர்.. நான் பள்ளிப் போகும் காலத்தில் பண்பலை வரிசை இருந்ததோ இல்லையோ எனக்கு தெரியாது.. ஆனால் பண்பலை வரிசையில் இயங்கும் திறன் பெற்ற வானொலி பெட்டிகளை நான் கல்லூரி போகும் வயது வரை பார்த்ததே இல்லை

அப்போதெல்லாம் விவித்பாரதியில் இரவு 11 மணிக்கு பழைய பாடல்கள் ஒலிபரப்பு செய்வார்களாம்.. அதை மெலிதான சத்தத்தில் வைத்துக் கேட்டப் படியே உறங்க செல்வது வழக்கம் எனத் தமிழய்யா சொல்ல கேட்டு அதே போல் நானும் முயற்சித்து பார்க்க இசை என் வாழ்க்கையில் நுழைந்தது.

*************************

நிறைய பேர் சொல்லக் கேட்டிருப்போம்.. காலையில் எழுந்து பக்தி பாடல்கள் கேட்டால் மனம் அமைதியாகும்... கஜல் கேளுங்கள் மனம் லேசாகும்.. என்றெல்லாம் உங்களுக்கு ஏதோ ஒரு சமயத்தில் யாரேனும் சொல்லியிருக்க கூடும்.. அத்தனையும் உண்மை. அவரவரை பொருத்தவரை.

எந்த மாதிரி இசையை கேட்டால் உங்கள் மனம் அமைதி அடைகிறதோ.. அது தான் உங்களுக்கு உற்சாமூட்டி.. அது திரையிசை பாடல்களாயிருக்கலாம், கர்நாடக சங்கீதமாயிருக்கலாம், மேனாட்டு ராக் இசையாக இருக்கலாம்.. நமக்கு எது மன அமைதிக் கொடுக்கிறதோ அதுவே நமக்கு பக்திப் பாடல், கஜல் எல்லாம்.

*************************

உலகில் இரண்டே விஷயங்களுக்கு தான் நம் வாழ்க்கையில் நடந்த பழைய சம்பவங்களை நினைவுப் படுத்தி அப்படியே அதே கணத்தில் மீண்டும் சில நிமிடங்கள் வாழ்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தி உண்டு...

1. இசை / ஒலி
2. மணம்

குண்டுகள் விழுந்த பின்பு அவற்றின் விளைவை குறைப்பதற்காக ஜெர்மானிய ராணுவம் ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுத்தப்படுத்துமாம். இரண்டாம் உலகப் போருக்கு பின் ப்ளீச்சிங் பவுடர் மணத்தை நுகர்ந்தாலே பழைய போர் நினைவுகள் வந்து விடுமாம் ஜெர்மானிய மக்களுக்கு..

அதே போல இசை.. நம் வாழ்வின் முக்கியமான தருனங்கள் ஏதோ ஒரு ஒலியுடனோ, இசையினுடனோ தொடர்புக் கொண்டிருக்கும்... பள்ளியில் கேட்ட மணிச் சத்தம், பள்ளிக்கு போகையில் காலை நேரத்தில் கேட்ட பாடல்.. பக்கத்துக் கோவில் திருவிழா சமயத்தில் கேட்ட திருவிளையாடல் ஒலிச்சித்திரம்... இப்படி

************************************

5 கருத்துகள்:

  1. //அதே போல இசை.. நம் வாழ்வின் முக்கியமான தருனங்கள் ஏதோ ஒரு ஒலியுடனோ, இசையினுடனோ தொடர்புக் கொண்டிருக்கும்... பள்ளியில் கேட்ட மணிச் சத்தம், பள்ளிக்கு போகையில் காலை நேரத்தில் கேட்ட பாடல்.. பக்கத்துக் கோவில் திருவிழா சமயத்தில் கேட்ட திருவிளையாடல் ஒலிச்சித்திரம்... இப்படி//

    சரியாகச் சொன்னீர்கள்.

    இசைத் தொடர்பான என் பதிவுகள் பார்க்க:


    http://raviaditya.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE

    இல்லாவிட்டால் என் “இளையராஜா” லேபிளை கிளிக் செய்து பார்க்கவும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் சொன்னபிறகு 'மன்னிப்பாயா'பாடலை மீண்டும் ஒரு முறை கேட்டேன்-இப்போது மிக்க ரசனை உடையதாய் இருந்தது.

    இப்படி உங்கள் இசை ஆர்வத்தை தூண்டிய தமிழையா பெயரை குறிப்பிட்டிருக்கலாமே!

    //நம் வாழ்வின் முக்கியமான தருனங்கள் ஏதோ ஒரு ஒலியுடனோ, இசையினுடனோ தொடர்புக் கொண்டிருக்கும்...//
    அப்பட்டமான உண்மை.

    இளமுருகன்
    நைஜீரியா.

    பதிலளிநீக்கு
  3. ரவி,

    என் வாழ்வின் சோகங்கள், இருண்ட பக்கங்கள் என் மனதில் இருந்து நீங்கி விட்டாலும், சில பாடல்களில் இன்னும் வாழ்கிறது.. அந்த பாடல்களை நான் கேட்க விரும்பவே மாட்டேன்... கேட்டு விட்டால் அந்த நாளே கெட்டு விடும்..

    நன்றி இளமுருகன்..

    என் தமிழய்யா பெயர் புலவர் ராசேந்திரன்.. திருக்குறள் போன்றவர்... :-)

    பதிலளிநீக்கு
  4. இளமுருகன்

    நைஜீரியா பற்றி ஜெயமோகன் அவர்கள் எழுதிய பதிவைப் படித்தீர்களா? தங்கள் எதிர்வினை என்ன என்று அறியலாமா?

    பதிலளிநீக்கு
  5. நண்பர் மாயன்

    நைஜீரியா பற்றி ஜெயமோகன் அவர்கள் எழுதிய பதிவைப் படித்தேன்.உண்மையில் எனக்கு அது ஒரு தகவலே.எதிர் வினை ஆற்றும் அளவு நான் இன்னும் வளரவில்லை.

    உங்கள் விருப்பம் போல் என் profile போட்டோ மாற்றிவிட்டேன். அக்கறைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு