முதலில் அரசியலை விளையாட்டாக்கி விட்டு விளையாட்டுகளில் அரசியல் செய்ய முயலும் ஆட்களை அண்ட விடாமல் செய்ய வேண்டும்.
வீரர்களுக்கு விளம்பரங்களில் வரும் வருமானத்தில் பெரும் பகுதியை அரசாங்கம் எடுத்து கொண்டு அதை கிராமபுறங்களில் விளையாட்டுத் துறை வளர உதவ வேண்டும்.
ஒப்பந்தம் செய்யப் பட்ட வீரர்கள் எப்பொதும் கண்காணிப்பில் வைக்க பட வேண்டும்.(சூதாட்டம், பாதுகாப்பு, அநாவசிய பொழுது போக்கு எல்லாம் இதில் தடுக்க படும்)
முக்கியமான வீரர்கள் மாநிலத்துக்கு மாநிலம் இனம் காணப்பட்டு கட்டாய பயிற்சிகள் தினந்தோறும் நடத்தப்பட வெண்டும்.போதிய பயிற்சியெடுக்காத வீரர்களை போட்டியில் சேர்க்கக் கூடாது.
வீரர்களுக்கு நட்சத்திர அந்தஸ்த்து விளையாட்டால் தான் கிடைக்க வேண்டும்.. விளம்பரத்தால் அல்ல. கிடைக்கும் விளம்பரங்களின் வருமானத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்டு... வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும்... மற்றும் சம்பளமும் வழங்க வேண்டும். இது வீரர்களுக்கு மத்தியில் அநாவசியமான பொறாமைகளை தவிர்ப்பதோடு எல்லா வீரர்களுக்கும் சமமான பயிற்சியும் ஊக்கமும் கிடைக்கும்.
எல்லா விதமன பிட்ச்களும் அமைக்கப் பட வேண்டும். அதில் பயிற்சிகள் மேற்கொள்ள பட வேண்டும். வீரர்களின் பலம் மற்றும் பலவீனங்கள் கண்டறியப்பட்டு அதற்கேற்ப்ப பயிற்சி அமைய வேண்டியது அவசியம். உடல் ரீதியாக மட்டுமன்றி மனரீதியாகவும் பயிற்சி அளிக்க பட வேண்டும்.. இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக ஆட உளவியல் பயிற்சி மிக முக்கியம்.
வங்காளதேச அணியிடம் நாம் அடைந்த தோல்வி குறித்து நண்பர்களொடு விவாதித்த போது வந்து விழுந்த விஷயங்கள் இவை.