உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

சஞ்சய்தத்தின் தண்டனை

சஞ்சய் தத்துக்கு ஜெயில் தண்டனை கிடைத்தாலும் கிடைத்தது.. ஆளாளுக்கு ஜெயிலில் வசதி அப்படி இருக்குமாம், இப்படி இருக்குமாம்.. என்று ஒரே அளப்பறை..

போதாததற்கு பத்திரிகைகள் வேறு.. 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டுமாம்.. 6.15கு உடற்பயிற்சி பண்ண வேண்டுமாம்.. 7 ம்ணிக்கு வெளிக்கு போக வேண்டுமாம் என்று கட்டம் கட்டி செய்திகள் வெளியிட்டு மக்களை கவலையில் ஆழ்த்த முயற்சி செய்கின்றன..

எனக்கு ஒன்றே ஒன்று தான் தோன்றியது.. அவர் என்ன வெள்ளையர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் ஈடுப்பட்டா ஜெயிலுக்கு போகிறார்... ? இல்லை மக்கள் பிரச்சினைக்காக போராட்டத்தில் ஈடுப்பட்டு ஜெயிலுக்கு போகிறாரா...

ஏன் இவ்வளவு கரிசனம்...

6 மறுமொழிகள்:

Boochandi சொன்னது…

அந்த குண்டு வெடிப்பில் இறந்து போனவர்களின் உறவினர்களிடம் பேட்டி காணுமா இந்த ஊடகங்கள்? அப்போதுதான் தெரியும் அது எப்படிப்பட்ட சோகம் என்பதும், சஞ்சய் செய்தது எப்படிப்பட்ட குற்றம் என்பதும்.. அதை விட்டுவிட்டு, சஞ்சய் ஏதோ ஒன்றுமே தெரியாத பாப்பா போல சித்தரிக்கப்படுவது ரொம்ப கொடுமை.

மாயன் சொன்னது…

//சஞ்சய் ஏதோ ஒன்றுமே தெரியாத பாப்பா போல சித்தரிக்கப்படுவது ரொம்ப கொடுமை. //

மிகவும் சரி..

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இவனுக்கெல்லாம் மரண தண்டனையே தகும்.

Boston Bala சொன்னது…

---6 மணிக்கு எழுந்திருக்க வேண்டுமாம்..---

சினிமாவில் ரஜினி (சிவாஜி) சொன்னால் ரசிகர்கள் உணர்ச்சிவசப்படுவதில்லையா...

'காலில் செருப்பில்லாம நடந்திருக்கேன்...
பஸ்ஸில போயிருக்கேன்'

;))

வவ்வால் சொன்னது…

மாயன்,

சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள் , மீடியாவை விடுங்கள் , காற்றுள்ளபோதே தூற்றும் வணிககூட்டம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மத்திய அமைச்சர் சஞ்சய்க்கு நாம் எல்லாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டுள்ளாரே என்னவென்று சொல்ல அதை!

மாயன் சொன்னது…

அட அவங்க அப்படி தான் பேசுவாங்க.. ஏன்னா எல்லா இந்தி நடிகர்களுக்கும் மும்பை மாஃபியாவோட லிங்க் இருக்கு இது ஊரரிஞ்ச ரகசியம்.. அமெரிக்கா தாவூத்தை பத்தி பாகிஸ்தான்ல விசாரிக்கறத்துக்கு பதிலா இவங்க கிட்ட விசாரிச்சா ஈசியா அவனை பிடிச்சுடலாம்..

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..