உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

விஜய் TVயின் ஜோடி நம்.1 நிகழ்ச்சி...

விஜய் TVயின் ஜோடி நம்.1 நிகழ்ச்சி...

பிரபலங்களின் ஒரு நடனப்போட்டி என்பதில் இருந்து, அமெரிக்க தொலைக்கட்சிகள் நடத்தும் ரியாலிடி கேம் ஷோ போல மாறிக்கொண்டு வருகிறது...

ஒரு போட்டியாளர் எப்படி தன்னை போட்டிக்கு தயார் படுத்திக்கொள்கிறார் என்பதில் ஆரம்பித்து அவர்களின் ஓய்வறை வரைச் சென்று வெற்றி தோல்விகளை எப்படி எதிர்க்கொள்கிறார்கள் என்பது வரை காண்பிப்பது தான் ரியாலிட்டி கேம் ஷொக்கள்...

வித்தியாசமான இந்த முயற்சிகள் வரவேற்கத்தக்கதே ஆனாலும் பரபரப்பை கூட்டி TRP புள்ளிகளை அதிகப்படுத்த முயற்சிப்பதை வரவேற்க முடியவில்லை...

ஒரு போட்டியாளரின் தாயார் கூச்சல் போட்டதையும், சிம்பு-பப்லு (பிருதிவிராஜ்) மோதலை அப்படியே ஒளிபரப்பு செய்ததும், அதற்காக சிம்புவின் ரசிகர்கள், அவரின் குடும்பம், மக்கள் என அனைவரையும் பப்லுவிற்கு எதிராக பேச விட்டு ஒளிப்பரப்புவதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான்...

"அவனை விடக்கூடாது..அவனை என்ன பண்ணட்டும் சொல்லுங்க.. " என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டதாகவும் ஒன்றும் செய்ய வேண்டாம் என்று பெரிய மனதுடன் தாங்கள் சொன்னதாகவும் சிம்புவின் சித்தப்பா... கூறியதைக்கூட தணிக்கை செய்யாமல் அப்படியே ஒளிப்பரப்பியது பப்லுவிற்கு எதிராக வன்முறையை தூண்டுவதைப்போல இருந்தது.....

விஜய் TV தன்னுடைய எல்லா போட்டிகளிலும் இந்த பாணியை நுழைத்து வருகிறது..

இது எங்கே கொண்டு போய் விட போகிறதோ...

3 மறுமொழிகள்:

பெயரில்லா சொன்னது…

என்னங்க ஒரே குழப்பமா இருக்குது. குமுதம் ஜோடிநம்பர்1 பக்கத்தில் பப்லு ஆடுகிறார். சிநேகாவுக்கு பூங்கொத்து கொடுக்கிறார்.

முரளி கண்ணன் சொன்னது…

இவற்றை புறக்கணிப்பது தான் நல்லது. சன் டிவி ஒரு மாதிரி முட்டாளக்கினால் இவர்கள் வேறுமாதிரி ஆக்குகிறர்கள்.
வைகோவுக்கு ஏற்ற டிவி இதுதான்.
super singer,challaenge ena ore pallavi

பெயரில்லா சொன்னது…

"ஒரு போட்டியாளரின் தாயார் கூச்சல் போட்டதையும், சிம்பு-பப்லு (பிருதிவிராஜ்) மோதலை அப்படியே ஒளிபரப்பு செய்ததும், அதற்காக சிம்புவின் ரசிகர்கள், அவரின் குடும்பம், மக்கள் என அனைவரையும் பப்லுவிற்கு எதிராக பேச விட்டு ஒளிப்பரப்புவதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான்..."

கொஞ்சம் இல்லிங்க ரொம்பவே ஒவர்.எனக்கும் சிம்புவை பிடிக்கும் ஆனால் அன்று ரொம்ப பில்டப் கொடுத்தது டூமச்...

விஜய் டிவியும் சன் டிவியாக மாறி வருகிறதோ?

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..