உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வியாழன், ஏப்ரல் 03, 2008

மக்கு மேலாளரும் ஒரு புதிய லேப்டாப்பும்

இந்த ஆளை எல்லாம் எப்படிய்யா வேலைக்கு எடுத்தாங்க என்று சிலரை பார்க்கும் போது நம்மில் பலருக்கு தோன்றியிருக்கும்....

ஒவ்வொரு நிறுவனத்திலும் இது போன்ற ஆட்கள் பொறுப்பான பதவியில் உட்கார்ந்து கொண்டு அடிக்கும் லூட்டிகள் சொல்லி மாளாது...

நண்பர்கள் அபூர்வமாய் ஒன்றாய் கூடும் தருணங்களில் இது போன்ற விஷயங்கள் பல பரிமாறிக்கொள்ளப்படும்...

இதை கேளுங்கள்...

என் நண்பரின் அலுவலகதில் ஒரு மேலாளர் பற்றிய ஒரு நகைச்சுவைச் சம்பவம்...

அந்த அலுவலகத்தில் மேலாளர்களுக்கு மட்டும் லேப்டாப் வசதி உண்டு...

அவருக்கும் புதிதாக ஒரு லேப்டாப் வந்து சேர்ந்தது...

1 நாளாயிற்று, 2 நாளாயிற்று, 1 வாரம் ஆனது... அவர் லேப்டாப் உபயோகிக்கிற வழியைக்காணோம்...

ஏற்கனவே கஞ்ச தனங்களுக்கு பெயர்ப்போனவர் அந்த மேலாளர் என்பதால் சக ஊழியர்களுக்கு ஒரு சந்தேகம்.. ஏன் இவர் லேப்டாப் கிடைத்தும் உபயோகிப்பதில்லை என்று...

உடனே அனைவரும் சீட்டு குலுக்கி போட்டு ஒரு பலியாட்டை தேர்வு செய்து அவரிடம் இதைப்பற்றி பேச வைப்பது என முடிவு செய்தார்கள்....

ஏன் பலியாடு என்கிறீர்களா? மனிதர் செம மொக்கை.. பேசப் போனால் காது அறுபடாமல் மீண்டு வருவது கடினம்... காய்கறிகாரன் ஏமாற்றிய 50 பைசாவிலிருந்து, பஸ் கண்டெக்டர் ஏமாற்றிய 50 பைசா வரை புலம்பித் தள்ளி விடுவார்...(யெஸ் யுவர் ஆனர்.. பஸ்ஸில் தான் ஆபீஸ் வருவார்.. சம்பளம் எவ்வளவு என்று கேட்கிறீர்களா? ஆண்டுக்கு ஒரு 12 லட்சம் பக்கம் வரும்).....

ஒரு நல்ல நாளான வெள்ளிக்கிழமையாக பார்த்து, தலைக்கு குளிக்க வைத்து, பொட்டு வைத்து, மாலைப் போட்டு பலியாட்டை தயார் செய்து அனுப்பி வைத்தனர்...

மேலாளர், கேபின் வாசலில் தயங்கி தயங்கி வந்து நின்ற நம் பலியாட்டு நண்பரை பார்த்ததும் சந்தோஷம் பொங்கியவராக... "வாய்யா.." என்று ஆரம்பித்தவர் தான்... பலியாடு அப்படியும் இப்படியும் நகர்ந்து தவித்து துடித்தும்.... படுக்க வைத்து, உட்கார வைத்து, நிற்க வைத்து ரத்தம் வர வர காது கழுத்து எல்லாம் அறுத்து தள்ளி விட்டார் ...

கடைசியாக அவர் ஓய்ந்த ஒரு சிறு இடைவெளியில் நண்பர் புகுந்து விட்டார்..
"என்ன சார் லேப்டாப்பை யூஸ் பண்ணாம வெச்சிருக்கீங்க... நல்ல நாளுக்காக வெயிட் பண்றீங்களா?" என்று மெதுவாக பிட்டை போட்டார்...

மேலாளர் மெதுவாக தலையை உயர்த்தி, " வர வர நம்ம IT டீம் சரியில்லைப்பா... மானிட்டர், கீ பேடு, மௌஸ் எல்லாம் கொடுத்துட்டாங்க... CPU இன்னும் தரவேயில்லைப்பா... இன்னைக்கு தான் மெயில் போடலாம்னு இருக்கேன் " என்றாரே பார்க்கலாம்...

(விஷயத்தை கேள்விப்பட்ட சக அலுவலர்கள் மீட்டிங் ரூமில் கதவை சாத்திக் கொண்டு லாஃபிங் தெரபி அளவுக்கு சிரித்தது தனிக்கதை...)

7 கருத்துகள்:

  1. நெசமாவா? நம்புற மாதிரியே இல்லியே..

    பதிலளிநீக்கு
  2. இளா... நீங்கன்னு இல்லை பொதுவா யாருமே நம்ப மாட்டுறாங்க... ஆனா சினிமாவை மிஞ்சுற காமெடி சீனெல்லாம் நிஜ வாழ்க்கையில தான் நடக்குது...

    பதிலளிநீக்கு
  3. நல்லவேளை மௌஸ்-ன்னு சொல்லி ஒரு பிளாஸ்டிக் டப்பாவ குடுத்து ஏமாததிடானுங்க-ன்னு சொல்லாம விட்டாரே

    வால்பையன்

    பதிலளிநீக்கு
  4. வால்பையன், முரளிக்கண்ணன்

    அவரோட இன்னொரு காமெடியும் இருக்கு... இன்னொரு பதிவுல சொல்றேன்...

    பதிலளிநீக்கு