உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வெள்ளி, ஜனவரி 30, 2009

குரல் கொடுங்கள், உயிரைக் கொடுக்காதீர்கள்

முத்துகுமார் செய்த உணர்ச்சிவயப்பட்ட செயலை யாரும் இனி செய்ய வேண்டாம்.

அப்படி செய்தால் தமிழர் ஆதரவு குரலில் ஒன்று குறைந்து போகுமே தவிர, பெரிய பயன் ஏதும் இராது... அஞ்சலி செலுத்திய அரசியல்வாதிகள் அனைவருக்கும் இன்று அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சியும் அவர்களின் ஒரு அன்றாட அலுவலாக தான் இருக்க போகிறது..

பத்திரிகை நண்பர்கள் எரிக்க வேண்டியது பொய்களையும், புனைச் செய்திகளையும்.


அவர்களின் தலையாய பணி, எந்த பிரச்சினைக்கும் பத்திரிகைகள் தரக்கூடிய, தர வேண்டிய ஆதரவு - மக்களுக்கு தெரிய வேண்டிய உண்மைகளை யாருடைய நிர்ப்பந்தத்துக்கும் பணியாமல் அப்படியே உண்மையாக வெளியிடுவது தான். தன்னை தானே எரித்துக் கொள்வது அல்ல.

இலங்கையில் என்ன பிரச்சினை என்றே தெரியாமல் அறிக்கை மேல் அறிக்கை விடும் திடீர் அரசியல்வாதிகளும், என்ன பிரச்சினை அதற்கு என்ன தீர்வு என்று நன்றாக தெரிந்தும் அரசியல், சுய லாபம் கருதி வாளாவிருக்கும் சுயநல அரசியல் தலைவர்களும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு போகும் போது, நம்மை போன்ற பொது மக்கள் செய்வதற்கு அதிகம் ஏதுமிருக்காது... கடவுளிடம் பிரார்த்தனை செய்வதையும், முடிந்த நிவாரண நிதி அளிப்பதையும் தவிர்த்து.

அவர் குடும்பத்துக்கும், தமிழ் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும், தீக்குளிப்பு போராட்டங்களுக்கு எதிரான கண்டனங்களையும் பதிவு செய்து கொள்கிறேன்.

அவரின் உணர்ச்சி வயப்பட்ட செயலுக்கு வருந்தும் அதே நேரத்தில் அவரின் தமிழ் உணர்வுக்கு தலை வணங்கியே தீர வேண்டும்.



ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

(ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாக தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே இறந்தாலும் உயிர் வாழ்பவன் எனக் கருதப்படுவான். அதற்கு மாறானவர்கள் இருந்தும் இறந்தவர்களுக்கு சமம்.)

-திருவள்ளுவர் -(அதி: ஒப்புரவறிதல்- Duty To Society)

3 கருத்துகள்:

  1. I totally agree with your view. It is really absurd doing his. I believe in staying alive and fight for the rights rather than killing their own self. He should have used his pen as his weapon. I salute to him, but at the same time, I feel this should not have been happened, because I am from Ilangai and I have seen deaths, even in my family

    பதிலளிநீக்கு
  2. நாங்கள் வசதியாக இருந்துக் கொண்டிருக்கிறோம்..

    இழப்பின் வலி எங்கள் தலைமுறைக்கு அவ்வளவு எளிதில் புரியாது... சொந்த இடத்தில் அடிமையாய் வாழ்தலின் வேதனை தெரியாது... ஆனால் அது தாங்கவியலாத வலியாக இருக்கும் என்பது மட்டும் புரிகிறது...

    தங்கள் குடும்பத்திலும், வாழ்க்கையிலும் ஏற்பட்ட இழப்புகளுக்கு வருத்தம் மட்டும் தெரிவிக்கக் கூடிய துர்பாக்கியமான நிலையில் இருக்கும் கோடிக்கணக்கான சகோதர தமிழ் மக்களில் யானும் ஒருவன்...

    பதிலளிநீக்கு
  3. I am in no position to judge whether Muthukumar's act was right or wrong.
    But I am aware that as he fuelled himself to the fire, he fuelled thousand others to a least glimpse of the injustice in Sri Lanka.
    May he rest peacefully

    பதிலளிநீக்கு