உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

புதன், மார்ச் 03, 2010

போலிச் சாமியாராக எளிய வழிகள் எட்டு


எவ்வளவோ தொழில்களைக் கற்றுக் கொடுப்பதற்கு பள்ளிகளும், கல்லூரிகளும் பட்டறைகளும் இருக்கின்றன..

ஆனா இந்த எழவெடுத்த சாமியார் தொழிலுக்கு மட்டும் பயிற்சிக் கூடமோ, ட்ரெயினிங் ஸ்கூலோ, காலேஜோ இல்லை...
அதனால எவ்வளவோ பேர் எவ்வளவோ தெறம இருந்தும் அதை மத்தவங்களுக்கு காட்டமுடியாம கஷ்டப் படுறாங்க..
அந்தக் குறையை நம்மால ஆன வரை தீர்த்து வைக்கலாமேன்னு இந்த பதிவை எழுதறேன்...

எட்டு விஷயங்களை சொல்றேன். சாமியாராகி ஜல்ஸா பண்ணனும்னு ஆசப் படற மகா ஜனங்க அப்படியே ஃபாலோ பண்ணி அவங்கவங்க ரூட்ல பிக்கப் ஆயிக்கங்க.. பிற்காலத்துல ஆசிரமம், சிஷ்யை, வீடியோ வெளக்கெண்ணைன்னு செட்டில் ஆகும் போது நம்மளை கொஞ்சம் கவனிச்சுக்கோங்க...

முதல் விஷயம்.. சாமியார்னா ஒரு அடையாளம் வேணும்.. மண்டையில ஒரு கொண்டை, நெஞ்சு வரை, முடிஞ்சா வயிறு வரை நீளமா பெரிய வெள்ளை தாடி, இல்லைன்னா பரட்டை முடி (வழுக்கைத் தலை அன்பர்களே... கவலையை விடுங்க மொட்டை போட்டு வேற கெட்டப் போட்டுக்கலாம்..), நெத்தில ஆரம்பிச்சு கழுத்து தொப்புள் வரை கலர் கலரா விபூதி குங்குமம் இப்படி ஏதாவது கெட்டப் கண்டிப்பா வேணும்.. முகத்துல கரும்புள்ளி, செம்புள்ளி ரேஞ்ச்சுக்கு
ரவுண்டு, சதுரம், செவ்வகம், முக்கோணம் இப்படி எல்லா டைப்புலயும் பொட்டு வெச்சுக்கிட்டா.. கிட்டத்துல பார்க்கிற பக்த கோடிகள் கலவரமாகி நோண்டி நோண்டி கேள்வி கேட்க மாட்டாய்ங்க...

கெட்டப் நமக்கு கம்ப்ளீட்டா செட் ஆச்சா இல்லையான்னு கண்டுப்பிடிக்க சில வழிகள் இருக்கு..

கெட்டப்போட ஏதவாது ஒரு குழந்தை கிட்ட போய் பேசுங்க.. உங்களைப் பார்த்த உடனே "அய்யோ..பூச்சாண்டி"ன்னு கத்தி, கதறி கூப்பாடு போட்டு கொலைவெறியோடு குதிச்சு ஓடுதா?? கையை கொடுங்க.. உங்களுக்கு கெட்டப் அபாரமா செட்டப் ஆயிடுச்சு...

அதைவிட முக்கியமா பார்க்கிறவங்க கண்ணுக்கு காவி ட்ரெஸ் போட்ட ஒரு காட்டெருமை, கழுதைப்புலி ரேஞ்சுக்கு தெரியணும்..... காட்டுப்பன்னி மாதிரி தெரிஞ்சா இன்னும் செறப்பு..

ரெண்டாவது விஷயம்... யூனிபார்ம்..
காவி, கருப்பு, சிவப்பு, வெள்ளை இப்படி எந்த கலர்ல வேணா யூனிபார்ம் இருக்கலாம்.
ஆனா அதை போடற மெத்தட் ரொம்ப முக்கியம்.. தலப்பா கட்டலாம், முக்காடு மாதிரி போட்டுக்கலாம்... எப்ப வேணா சுளுவா கழட்டுற மாதிரி இருக்கிறது நல்லது.. ஹி..ஹி
அதுக்காக கோமணத்தை மட்டும் கட்டிக்கிட்டா போறும்னு அப்டீயே கிளம்பிறாதீங்க..TVல காட்டும் போது சென்ஸார் பிரச்சினை வரும்.. அதனால அந்த வெஷ பரீட்சை வேணாம்..

ஈஸியான வழி என்னன்னு பாத்தீங்கன்னா... ஆப்பரேஷன் தியேட்டர்ல நோயாளிங்களுக்கு போடற கவுன் மாதிரி இருக்கிற பச்சை ட்ரெஸ்ஸை காவி சாயம் தோய்ச்சு போட்டுக்கிட்டா விஷேசமா இருக்கும்... உள்ள எதுவும் போட வேணாம்.. அப்டியே ஜிலு ஜிலுன்னு காத்து வரும்...

மூணாவது விஷயம்.. உபகரணங்கள்.. யூனிபார்ம் போட்டா ஆச்சா? கூட மேட்சிங்கா உபகரணம் இருக்கணும். உத்திராட்சம், சூடுக்கொட்டை, ஸ்படிகம், கேமல் கம், தங்கம், வெள்ளி, ஈயம் பித்தளை ஏதோ ஒண்ணு கழுத்து காது எல்லா இடத்துலயும் அலங்காரமா தொங்கணும்...
தங்கத்துல போட்டா ஒரு வீட்டு விஷேசம் அட்டெண்ட் பண்றதுக்கான ரேட் கூட்டி கேக்கலாம்... அப்பப்ப ஜீன்ஸ் ஷூ, கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தா கம்ப்யூட்டர் கம்பெனியில வேலை பாக்குறவன் பூரா மிரண்டு போய் சிஷ்ய புள்ளை ஆகிறுவானுங்க... ஒரு யோகா செஷனுக்கு 5000, 10000ம்னு கோடிக்கணக்குல காசு பாத்துடலாம்

குச்சி, கமண்டலம், தடி, பொடி, துடப்பம், புலித்தோல், எலித் தோல், எலிப்புழுக்கை இப்படி ஏதாவது கையில சப்போர்ட்டுக்கு வெச்சுக்கணும்.. போதை கொஞ்சம் ஓவரயிட்ட ஆதாரத்துக்கு ஏதாவது பிடிச்சிட்டு நடக்கணும்ல? அதுக்கு தான்..


அப்புறம் நாலாவதா ராஜ கீதம், ஸாரி ராஜ யோகம், யோகா, மாந்தரீகம், தாந்தரீகம், குண்டலினி (குண்டு எளநீ இல்லைங்க.. குண்டலினி), 6 சக்கரம், டயர், டியூப் இப்படி ஏதாவது கோர்வையா பேசக் கத்துக்கணும்... பேசும் போது அரைக்கண்ல பேசுனா தான் ஞானதிருஷ்டியில பேசுற மாதிரி இருக்கும்... அதனால ஒரு குவார்ட்டர் இல்லைன்னா ஒரு ரவுண்டு டோப் வளிச்சுட்டு பேசுறது செறப்பு...

தியானம், பஜனை பாட்டு, கச்சேரி, கதா காலட்சேபம், கர்னாடக சங்கீதம், கானா பாட்டு, களரி, கராத்தே, ஒப்பாரி இதெல்லாம் தெரிஞ்சா ஆடட் அட்வான்டேஜ். நீங்க உளர்ரது யாருக்கும் தெரியக் கூடாதுன்னா கொங்கிணி, இனான்ய பாஷை, இட்ல பாஷை, ஆப்பிரிக்கன் மாம்பூ பாஷை இதெல்லாம் பேசக் கத்துக்கிட்டு மொக்கை ஃபிகரா ஒண்ணை பிடிச்சு, தமிழ் ட்ரான்ஸ்லேட்டரா வெச்சுக்கலாம்.

அஞ்சாவதா எப்படியாவது பிட்டைப் போட்டு ஒரு அரசியல்வாதியையோ, தொழிலதிபரையோ ஸ்பான்ஸர் பிடிச்சுட்டோம்னா... சின்னதா ஒரு ஆசிரமம் ஆரம்பிச்சுடணும்.. அப்புறம் ஊருக்கு ஊர் பிராஞ்ச் ஓபன் பண்ணிக்கலாம்
அப்படியே அட்டகாசமா ஒரு வெப்சைட்... உங்க கையில இருந்து ஒளி வர மாதிரி, தலையை சுத்தி ஆரா ஒளி வட்டம் இருக்கிற மாதிரி கிராபிக்ஸ் எல்லாம் இருக்கணும்... அதுல உங்க பால்ய பிரயாத்துலயே எப்படி நீங்க குண்டலினி பாம்பை தட்டி எழுப்பினீங்கன்னு எக்ஸ்ப்ளெயின் பண்றது நல்லது.. போன ஜென்மத்துல நீங்க என்னவாயிருந்தீங்க... இந்த அவதாரம் எதுக்காக எல்லாம் அங்கே அப்டேட்டடா இருக்கணும்... முடிஞ்சா கல்கி அவதாரத்துக்கு அப்புறம் உள்ள குமுதம், கல்கண்டு இல்லைன்னா நக்கீரன் அவதாரம்னு ரெலவண்டா சொல்லிக்கிட்டா லாஜிக்கா இருக்கும்….

அப்புறம் ஆன்லைன்லயே டொனேஷன் வாங்கிக்கலாம், பூஜை சாமான், லட்டு, ஜிலேபி, கஞ்சா, அபின் எல்லாம் வித்துக்கலாம்..

ஆசிரமத்துல வெளிநாட்டு பக்தர்கள் இருக்கிறது தான் வெயிட்... அதனால அங்கங்க பக்கி, பனாதையா வாழ்க்கையை வெறுத்து திரியிற ஹிப்பி டைப் வெள்ளைக்காரங்களை பிடிச்சு கொண்டாந்து இட்லியும் சாம்பாரும், சர்க்கரை பொங்கலும் கொண்டைக்கடலையும் 3 வேளையும் போட்டோம்னா.. அல்சர்,அமீபியாஸிஸ் எல்லாம் வந்து, அடிவயத்தை கலக்கி ஆசிரமத்துலயே செட்டில் ஆயிடுவாய்ங்க... கர்ண கொடூரமா அவனுங்க பஜனைப் பாடுறதை லைவா ரெக்கார்டு பண்ணி TVல காண்பிச்சு ஜனங்களுக்கு டர்ர கெளப்பலாம்...

ஆறாவது TVல அடிக்கடி அருள் பாலிக்கணும்.. லிங்கம் எடுக்கிறது, லிப்ஸ்டிக் எடுக்கிறது, நைட் சரக்கடிச்சுட்டு வாந்தி எடுக்கிறது இந்த மாதிரி மேஜிக்கெல்லாம் நேர்ல மட்டும் தான் பண்ணனும். TVல பண்ணா ஆக்ஷன் ரீப்ளே பண்ணி பார்த்து, நீங்க டம்மி பீசுன்னு ஈசியா கண்டு பிடிச்சுடுவானுங்க...
நடு நடுல சுலோகம் எல்லாம் சொல்லி வெளக்கம் சொல்லணும்... எவனாவது டவுட் கேட்டா இன்னும் சுகுரா வெளக்கி அவன் டவுசர கிழிக்கணும்...

ஜென் கதைகள், பன் கதைகள், சூஃபி கதைகள், காபி கதைகள், குட்டிக் கதைகள், ஜட்டி கதைகள் எல்லாத்தையும் படிச்சு வெச்சுக்கணும்..     சில ஆர்வக்கோளாறு பிடிச்ச பயலுவ நம்மளை பெரிய ஞானப்பழம்னு நெனச்சுக்கிட்டு நம்மக்கிட்ட மடக்கிற மாதிரி கேள்வி கேட்கும் போது... நமக்கே புரியாத ஒரு கதையை நச்சுன்னு நடுமண்டையில அடிச்ச மாதிரி சொல்லி பீதியை கெளப்பலாம்……… கேள்வி கெட்டவன் வயத்தால போய் உங்க வழிக்கே வரமாட்டான்...

ஏழாவதா முக்கியமா ஏதாவது வார இதழ்ல அதிரடியா ஒரு ஆன்மீக தொடர் எழுதணும்.. கடைக்கோடி இளிச்சவாய் பக்த கோடிக்கிட்ட நம்மளை கொண்டு போய் சேர்க்கறது இது தான்..

கதவை திற, ஜன்னலை திற காத்து வரும், கொல்லைக் கதவை திற, வாத்து வரும்.. இப்படியெல்லாம் தலைப்பு வெச்சா விஷேசம்..

குளோசப்புல நீங்க டிசைன் டிசைனா சிந்திக்கிற மாதிரி, சிரிக்கிற மாதிரி, நடக்கிற மாதிரி போட்டோ போட்டு ஜனங்களுக்கு ஜன்னி வரவழைக்கலாம்..

அதுலயே அப்படியே ஆசிரம அட்ரெஸ் கொடுத்து டொனேஷன் கேக்க வசதியா இருக்கும்...

கட்ட கடேசியா அல்லாத்தையும் விட முக்கியமா பேரு.. நல்ல பேரா செலக்ட் பண்ணி நமக்கு நாமே திட்டத்துல வெச்சுக்கணும்..

ஆனந்தான்னு முடியற மாதிரி பேர் கிடைக்குதான்னு பாருங்க.. பீரானந்தா, மோரானந்தா, பியாரனந்தா... இப்படி ஏதாவது. கூட பரமஹிம்சா சாரி பரமஹம்சா, சுவாமி, அடிகளார், பொடிகளார், பாபா, பூபா, முனிவர், முனைவர் இப்படி ஏதாவது அடைமொழி வெச்சுக்கணும்...


சாமியார்கள் செய்யக் கூடாதவை

1. எவனாவது உங்களையும் இன்னொரு சாமியாரையும் ஒண்ணா பேட்டி எடுக்கிறேன்னு கூப்பிட்டா கண்டிப்பா பொயிடாதீங்க

2. எந்த நடிகை கூட வேணா ஜல்ஸா பண்ணுங்க.. ஆனா ரூம்புக்குள்ளார போறதுக்கு முன்னாடியே லைட்டை ஆஃப் பண்ணிருங்க.. எந்த புத்துல எந்த கேமிரா இருக்குமோ

3. வீடியோ கேமிராவை எங்கியாச்சும் பார்த்தாக்கா தலைதெறிக்க ஓடிருங்க...

4. முடிஞ்சா இந்த மாதிரி சமாஜாரத்துக்கெல்லாம் ருத்ரா பட பாக்கியராஜ் மாதிரி பபூன் வேஷம் பொட்டுகிட்டு போனீங்கன்னா யாரும் உங்களை அடையாளம் கண்டு பிடிக்க முடியாது

2 கருத்துகள்:

  1. இதுக்குக் காப்பிரைட்டுப் போட்டு வச்சிக்கிங்க. இல்லேன்னா IIM-ல பாடதிட்டத்துல சேத்துருவாங்க

    பதிலளிநீக்கு
  2. ஹா ஹா

    IIM-ல சாமியார் கோர்ஸ் ஆரம்பிச்சா அதுல சேர எல்லா பெரிய எடத்து பசங்களும் க்யூ கட்டிடுவானுங்க... OC சோறு, AC காத்து, நடிகை, சுத்தி புகழறதுக்கு கூட்டம், ஆசிரமம், சுவிஸ் பாங்க்... இப்படி தனி தனியா அரசியல்வாதி, சினிமாக்காரங்க, தொழிலதிபருங்க பண்றதை ஒரு பவர்புல் சாமியாரு ஒண்டியாளா பண்ணிடலாம்...

    கருத்துக்கு நன்றி..

    பதிலளிநீக்கு