உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

ஞாயிறு, மார்ச் 14, 2010

ஒரு காஷ்மீரத்து காதல். - தொடர்கதை பாகம்-2

 பாகம்-1ஒரு காஷ்மீரத்து காதல். - தொடர்கதை 


வீட்டுக்கு லெட்டர் எழுதிய கையோடு அதை எடுத்து போஸ்ட் பாக்ஸில் சேர்க்க எண்ணி இதோ கிளம்பி கொண்டிருக்கிறேன்.

குளிக்க எண்ணி எலிமெண்ட் வைத்து தண்ணீர் சூடு செய்து கொண்டிருந்தேன்.
என்னவாயிற்றோ?

அட்டாச்ட் பாத்ரூமில் வந்து பார்த்தால், தண்ணீர் சுட்டிருக்கிறது.
அதிர்ஷ்டம் தான்.

இங்கே கரண்ட் என்பது அதனிஷ்டத்துக்கு செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கிறது.அதுவாக வரும், அதுவாக போகும். கேள்வியே கிடையாது.

உணவு பண்டங்களும் நிச்சயமில்லை.

வாழ்வே நிச்சயமில்லை என்றால்? உணவு பண்டங்களா?

ஆனால் இந்த ஹஸாரிகா பாருங்கள்
காஷ்மீர் என்றவுடன் சிலிர்த்து விடுவாள். சிலாகித்து பேசுவாள். அதன் இயற்கையை வியந்து அழகான இந்தியில் பேசுவாள்.அவள் பேசும் ஹிந்தி ஒரு அற்புதம்.

மருஉ மொழியாக இல்லாமல், அழுத்தமான உச்சரிப்போடு கூடிய சுத்தமான ஹிந்தி.
மரியதை பொங்கி வழியும் மொழி. அவளுக்கு காஷ்மீர் என்றால் கற்கணடு. தேன்.

ஒரு நாள் அதன் அழகை எனக்கு சுற்றிக் காண்பிப்பதாக வாக்களித்து இருக்கிறாள்.
செர்ரி பழங்கள், ப்ளம் பழங்கள் அர்ச்சனைக்கு வேண்டிய புஷ்ப வகைகள், சிலவற்றை எடுக்க காட்டு பகுதிக்கு செல்வாளாம். அப்போது என்னை அழைத்து போவதாக கூறியிருக்கிறாள்.
கசக்குமா என்ன?

ஒப்புக் கொண்டேன். நான் இருக்கும் இந்த் சோட்டா பூஞ்ச் பகுதியின், இந்த கோவிலை பற்றி ஒரு கட்டுரை எழுதி எங்கள் பத்திரிகையில் வெளியிட கேட்டிருந்தேன். ஞாயிறு அன்று அது வெளி வந்திருக்கும்.
அந்த புத்தகதையும், பத்திரிகையையும் பெற திங்கள் இன்று வரை காத்திருக்கிறேன். ஏனோ நேற்று அது வரவில்லை.

என்ன விஷேசம் என்கிறீர்களா?

ஹஸாரிகாவை படமெடுத்து அனுப்பியிருக்கிறேன். பஜார் வீதியில் ஒரு கடையில் வியாபாரம் செய்யும் பெண் என்ற தலைப்பில் அனுப்பியிருக்கிறேன்.

அவளுக்கே தெரியாமல் அவளிடம் இதைக் காட்டி ஆச்சரியப் படுத்த வேண்டும்.
என்னிடம் பலரும் கேட்டிருக்கிறார்கள். என்னை ஒரு படமெடுங்கள் என்று. ஏனோ ஹஸாரிகா கேட்டதில்லை. அதனால் தான் அவளை படம் எடுத்திருந்தேன்.

இப்போது லெட்டர் போடுவதாய் சொன்னேனே அது கூட அவளால் தான். வீட்டில் போன முறை கோபித்துக் கொண்டு வந்து விட்டேன். காரணம் பெண் பார்த்திருந்தனர். அப்புறம் ஹஸாரிகா என்னை சமாதானப்படுத்தி பதில் போடுங்க எனவும் எழுதுகிறேன்.

இது தான் என் தனிப்பட்ட விஷயத்தில் ஹஸாரிகா தலையிடும் முதல் முறை.
காரணம் நான் அவளிடம் வீட்டிலுள்ளவர்களை பற்றி முறையிட்டது தான்.அட! அதற்குள் குளித்து முடித்திருக்கிறேன்.
கிளம்ப வேண்டியது தான்.

உள்ளுக்குள் வசதியான, வெளியே நெரிசலான அந்த மேன்ஷனை விட்டு, சிலரது ஹலோக்களுக்கும், ஹரே கஹா... விக்கி ... என்ற விளிப்புகளுக்கும் சிரிப்பை தந்த படி நடந்து வந்தேன்.
குண்டும் குழியுமாய் எங்கோ பள்ளத்திற்குள் இருந்து ஏறி வந்து காத்திருந்த சாலையில் மூச்சைப் ப்டித்து ஏறினேன்.

சமப்படுத்தப் பட்டு கட்டிடங்கள் சிரமமாய் நின்றிருந்தன. மெயின் ரோட்டில் நடந்து எதிர்சாரியில் இறங்கினால், பஜார் வீதி.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பஜார் வீதியில், மாலை மூன்று மணி கூட்டம் சிறிது அதிகமாக இருந்தது.
ஆனால் நெரிசல் எல்லாம் இல்லை.

சில பழக்கமான ஆட்கள், சிநேகமாய் சிரித்தனர். எஸ்.டி.டி பூத் காரர் கையாட்டுகிறார்.
பஜார் வீதி பரவாயில்லை. நேராகவே இருந்தது. வீடுகளின் கூரை மேல், கடைகளின் தளத்துக்கு மேல் பனியின் ஈரம் தெரிந்தது.

கிடைத்த சிறு இடைவெளியில் பின்னனியான பள்ளத்தாக்கு சரிவுகள் தெரிந்தன.

கோவிலுக்கு 200 மீட்டர் தூரத்தில் இடதுபுறத்தில் ஒரு மத்தியதரமான கடை ஹஸாரிகாவினுடையது.
கடையை அழகாக எளிமையாக அலங்கரித்து இருப்பாள். அழகாக பரமரிக்கிறாள்.
கடையை சிறு துடிப்பு பெருக்கலின் உதவியோடு நெருங்கினேன். எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் ஹஸாரிகா இருந்தாள்.

"வாருங்கள்.. நிருபர் அவர்களே" என்றாள் கிண்டலாக.

திரும்பி உள்ளே எட்டி ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டாள். புன்னகைத்தப்படி நுழைந்தேன். அவளையும், அவளின் ஒரே தம்பியையும் தவிர அநேகமாக கடைக்குள் நுழைந்து அமரும் ஒரே நபர் நான் தான்.

"என்ன ஸாரிகா வேலை அதிகமோ?" என்றேன், சிரிக்கிறாள்.

"நமக்கு வேலைக்கு என்ன பஞ்சம் விக்கி! நீ கேட்ட பத்திரிகை வந்து விட்டது!"

என்றபடி மடக்கி சொருகி வைத்திருந்த அந்த பத்திரிகையை எடுத்து கொடுத்தாள்.
வாங்கினேன்.

"சாரங் எங்கே?"

"எங்கேயோ பொயிருக்கிறான்! வீட்டுக்கு கடிதம் எழுதினாயா?" என்றாள், வெளியே வேடிக்கை பார்த்தபடி.
நான் மௌன சிரிப்போடு, தேடினேன்.

அனுப்பிய கட்டுரை 3-வது பக்கத்தில் பிரசுரமாயிருந்தது. ஹஸாரிகாவின் பளிச்சென்ற வண்ண புகைப்படத்துடன்.

"ஏய் ஸாரிகா?"

"என்ன?"

"இதைப் பார்! இவளை எங்கோயோ பார்த்த மாதிரி இல்லை?"

ஆர்வமில்லாமல் வாங்கி பார்த்தாள். பார்த்தவளின், விழிகள் திடீரென ஆச்சர்யத்தையும், வெட்கத்தையும், பூசிக்கொண்டன.

"ஏய் விக்கி! என் படம்! உன் வேலை தான? அய்யோ..." என்று சந்தோஷமாக பதறினாள்.
பார்க்க அழகாக இருந்தது. பார்த்து கொண்டேயிருந்தேன்.

"நன்றாக வந்திருக்கு விக்கி! நன்றி... எப்போது எடுத்தாய்! சரியான திருட்டு பயல் நீ! ஒளிந்திருந்து தானே எடுத்தாய்?" என்றெல்லாம் கேட்டாள்.. கொஞ்ச நேரம் பேசினாள்.

"இதை நானே வைத்துக் கொள்ளவா?" என்றாள் ஏக்கமாக.

"அது எதுக்கு? படமே தருகிறேன்!" என்றவுடன் உற்சாகமானாள்.

சிறிது நேரம், என்னையும் படத்தையும், மாற்றி மாற்றி சந்தோஷமாக பார்த்து கொண்டேயிருந்தாள்.
அந்த சந்தோஷத்தின் பின்னே தான் எத்தனை எதிர்பார்ப்பு! எத்தனை உணர்ச்சிகள்!

"வீட்டுக்கு கடிதம் எழுதினாயா விக்கி?"

"ம்! அனுப்பி விட்டு தான் வருகிறேன் தாயே!" என்றேன் கிண்டலாக.

"பாவம் விக்கி உன் தாயார்! உன் மேல் பாசம் அதிகம் வைத்திருக்கிறாள்! இல்லாவிட்டால் வாரத்துக்கு ஒரு கடிதம் அனுப்புவாரா? சிறிய பையன் தான் செல்ல பிள்ளைபோலிருக்கிறது...”
என்னவோ கேட்ட ஒரு ஆசாமியுடன் வியாபாரத்தை கவனித்தபடி பேசினாள்.

"அதெல்லாம் இல்லை! ஸாரிகா! அக்காவுக்கு திருமணம் ஆகிவிட்டது! இனி நான் தானே எல்லாம்?"
"அதுவும் சரிதான்!" அவள் சொல்லும் போதே,

நான்கு பெண்கள் கடந்து கொண்டிருந்தனர். கேலி சிரிப்புகளோடு,
"ஏய் ஹஸாரிகா..." என்று ஆரம்பித்து என்னவோ காஷ்மீரியில் களபுளவென்றாள் ஒருத்தி. எட்டிப் பார்த்து சிரித்தனர் மற்றவர்கள்.

ஸாரிகா ஒரு பேப்பர் கசங்கலை எடுத்து வீசி விரட்டினாள் போலிக் கோபத்துடன்.

"என்னவாம்?"

"உன்னைப் பற்றி தான்!" என்ன்வென்று அவள் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை.

1 கருத்து:

  1. Hello Friend,  Hope everything is fine.
    I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

     
    Meharunnisha
    Doctoral Candidate
    Dept of Psychology
    Bharathiar University
    Coimbatore - 641046
    Tamil Nadu, India
    meharun@gmail.com
     
     

    (Pls ignore if you get this mail already)

    பதிலளிநீக்கு