பத்திரிகைகளுக்கு ஒரு இப்படி தான் செய்திகளை தர வேண்டும் ஒரு தார்மீக பொறுப்பு உள்ளது... அல்லது உள்ளதாக நினைத்துக் கொள்கின்றன... அதன் அடிப்படையில் நாகரீகம் என்று தங்களுக்கு படுவதை செய்திகளாக வெளியிடுகிறது..
அங்கே ஒரு எடிட்டர் இருப்பார், பப்ளிஷர் இருப்பார் ஒரு கொள்கை இருக்கும், கட்சி சார்பு இருக்கும், மக்களிடம் பெயரை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கும்... இவை எல்லாம் சேர்ந்தோ, தனி தனியாகவோ இருக்கும்... இருந்தே தீரும்.. ஒரு எழுத்தாளர் தான் நினைத்ததை அப்படியே எழுதி வெளியிட முடியாது... இந்த கட்டுக்குள் அடங்கியே தீர வேண்டும்...
ஆனால் வலைப்பதிவுகள் அப்படி அல்ல... அது ஒரு தனிப்பட்ட மனிதரால் எழுதப்படுவது... எண்ணங்களின் பிரவகங்களை அப்படியே எழுத முடியும்...யாரும் கட்டுப்படுத்த முடியாது... கிட்டத்தட்ட லாபநோக்கு இல்லாத ஒரு சிற்றிதழ் போல.. அது அப்படி உணர்ச்சி பூர்வமாக தான் இருக்கும்...
பத்திரிகைகளில் எப்படி குமுதம், விகடன், தந்தி, நக்கீரன், தராசு, நெற்றிக்கண், ஹிந்து என்று ஆரம்பித்து, வார மாத தினசரி, காலாண்டு, தேசிய, மாநில, மொழி வாரியாக, பொருளாதரம், அரசியல், நடப்பு, ஆட்டோமொபைல், கணினி என்று வகை வாரியாக நல்ல இதழ்களிருக்கிறதொ, அதே போல சரோஜாதேவி போன்ற வேறு விதமான பத்திரிகைகளும் வருவதில்லையா...?
அய்யோ கெட்ட பத்திரிகைகள் வருகிறதே நான் பத்திரிகையே படிக்க மாட்டேன் என்பது அறிவீனம் இல்லையா?
அப்படி தான் வலைப்பதிவும்... நல்லதும் கெட்டதும் நிறைந்து இருக்கும்.. ஆன்மீகமா அய்யா இருக்கு, நாத்திகமா அதுவும் இருக்கு, நகைச்சுவையா, நையாண்டியா? நாட்டுநடப்பா, அரசியலா, பொதுஅறிவா பொருளாதாரமா? எல்லாமே இலவசங்க... மெனக்கெட்டு தேடி தேடி பதிவுகள் எழுதி தமிழ் கட்டுரைகள் வளர்க்க பாடு படறாங்க... பொத்தாம் பொதுவில வலையுலகை குறை சொல்வதை நான் ஒத்து கொள்ள மாட்டேன்...
மாலன் அய்யா நல்ல கருத்துக்கள் பலவும் சொல்லியிருக்கார்.. ஆனால் வலையுலகில் கெட்டதும், பின்னூட்ட கயமைகளும் மட்டும் நடப்பது போல ஒரு தோற்றம் உண்டாக்குவதை ஒப்புக்கொள்ள இயலாது...
பதிவர்கள் பலர் தாங்கள் நம்பும் கருத்தை நேசிக்கறாங்க அய்யா... அதை ஒருத்தர் மறுக்கும் போது தாங்கிக்க முடியாம தனிமனித தாக்குதல்ல இறங்கிடறாங்க... பத்திரிகை உலகத்துல கூட இது நடக்குங்க..... மாத்திப்பாங்க.. அதையும் மீறி அப்படி தொடர்ச்சியா தனிமனித தாக்குதல்ல ஈடுபடறவங்க தானாவே மற்றவர்களால் ஒதுக்கப்பட்டுருவாங்க....
//தனிநபர் புகழ்ச்சி, தனிந்பர் தாக்குதல் இல்லாமல் பதிவுகளை எழுதுவேன். பின்னூட்டம் இடுவேன், பின்னூட்டங்களைப் பிரசுரிப்பேன்.//
ஒப்புகொள்கிறேன்...
//எழுதப்பட்ட பொருளுக்குத் தொடர்பற்ற பின்னூட்டங்களை அனுமதியேன்//
கும்மியடிக்கும் மக்கள் பாவம்ங்க... ஆபாசம் இல்லைன்னா அனுமதிக்கறதுல என்ன தப்பு? அது என் பதிவை ஒருத்தர் படிச்சிருக்கார் அப்படிங்கறது ஒரு அங்கீகாரம்ங்க... மனிதன் உணர்ச்சிகளால் ஆனவன்... என்ன செய்ய?
//மாற்றுக் கருத்துக்களை பொறுமையுடனும், சமனுடனும் அணுக முயற்சிப்பேன்;//
நிச்சயமாக முயற்சி பண்றேன்..
//ஒருவரது கருத்துக்களை மறுப்ப்தையோ, நிராகரிப்பதையோ, தரவுகளின் அடிப்படையில் செய்வேன்
தான் சார்ந்துள்ள ஜாதி, மதம், அரசியல் கட்சி, அரசியல் தலைவர், சினிமா நட்சத்திரம் இவற்றை மற்றவர்கள் மீது திணிக்கும் வன்முறையை
அனுமதியேன்.//
வன்முறை என்று எதை சொல்கிறீர்கள்.. ரத்த களரியாக பத்திரிகைகளிலும் TVயிலும் நடக்கும் விமரிசனங்களை என்ன செய்ய முடிகிறது? தான் சார்ந்துள்ள ஜாதி அடிப்படையில் சாதகமான ஒரு விமரிசனம் வரும் போது சாதி அடிப்படையில் தான் எதிர்வினையும் இருக்கும்.. நியாயப்படுத்தவில்லை.. சமூகத்தில் மலிந்து கிடக்கும் விஷயங்கள் பதிவுலகிலும் எதிரொலிக்கிறது... பதிவர்கள் வானத்தில் இருந்து வந்தவர்கள் அல்லவே?.. நம்ம மக்கள் தானேய்யா? காலம் கனியும்ங்க
//வெறும் பரபரப்பிற்காக்வோ, கவனம் பெறவோ, எழுதுவதையும் அப்படி எழுதுவதையே தங்கள் இயல்பாகக் கொண்டவர்களையும் தவிர்ப்பேன்//
பரபரப்பான தலைப்புகளை எழுதினால் தான் உங்களால் பத்திரிகையே விற்க முடிகிறது... பல சமயம் அவர்களும் நல்ல கருத்துக்களையும் எழுதுகிறார்கள்... இடுகைகளை ஒதுக்கலாமே தவிர பதிவர்களை அல்ல... நல்லதை எடுத்து கொண்டு கெட்டதை விட்டால் போச்சு... உங்கள் பதிவில் செய்தது போல...
எழுத்தார்வமிக்க எல்லோரும் அவ்வளவு எளிதாக பத்திரிகையில் எழுதி விட முடியாது... தங்கள் எழுத்தார்வத்துக்கு ஒரு வடிகாலாக தான் வலைப்பதிவை பயன்படுத்துகிறார்கள்...
சில சமயம் பத்திரிகைகளில் வெளியிடப்படும் செய்திகளை விடவும், கவர் ஸ்டோரிகளை விடவும் வலைப்பதிவுகள் சுவாரசியமாக இருக்கின்றன என்பதை மாலன் கூட மறுக்க மாட்டார் என்று நம்புவோமாக...
வலையுலகில் இல்லாவிட்டால் மாலனுடனும் மற்றும் பல மூத்த எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர்களோடு பேசக்கூடிய வாய்ப்பு எங்களுக்கு கிடைக்குமா? அதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி கூறி.. அய்யா எழுதுங்க.. அம்மா எழுதுங்கன்னு.. கேட்டுக்கறேன்...
மாலன் நிச்சயம் என்கட்டுரையை தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார் என்ற நம்பிக்கையில்தான் அதை எழுதினேன். அவர் என் நண்பர் பாமரனை திரயுலமே திரண்டுவந்து எதிர்த்தபோதும் எழுத்துச்சுதந்திரத்திற்கு மதிப்பளித்து வாதாடியவர்! Hope he will never mind some of my overtones in that article! lol!
பதிலளிநீக்குவணக்கம் மாயன். நீங்கள் சொல்ல வருவதை ஓரளவு ஒத்துக்கொள்கிறேன். மாறுபட்டவைகளை மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குபத்திரிக்கைகளிலேயே அப்படித்தான், அதனால் இதில் இப்படி இருப்பதும் சகஜம் என்பது போன்ற வாதங்களை என்னால் ஒத்துக்கொள்ள முடிய வில்லை.
ஒரு தவறுக்கு இன்னொரு தவறை காரணமாகச் சொல்லி சால்ஜாப்பு சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை.
//மாலன் அய்யா நல்ல கருத்துக்கள் பலவும் சொல்லியிருக்கார்.. ஆனால் வலையுலகில் கெட்டதும், பின்னூட்ட கயமைகளும் மட்டும் நடப்பது போல ஒரு தோற்றம் உண்டாக்குவதை ஒப்புக்கொள்ள இயலாது...//
எனக்கென்னமோ அவர் இப்படி ஒரு தோற்றத்தை உருவாக்க நினைத்ததாய் தெரிய வில்லை. பதிவுலகம் இப்படி இருக்கிறதே என்ற ஆதங்கத்தை சொன்னதாய்தான் பார்க்கிறேன்.
//பதிவர்கள் பலர் தாங்கள் நம்பும் கருத்தை நேசிக்கறாங்க அய்யா... அதை ஒருத்தர் மறுக்கும் போது தாங்கிக்க முடியாம தனிமனித தாக்குதல்ல இறங்கிடறாங்க... //
என்னங்க கருத்தை நேசிச்சா தப்பா பேசிடுவீங்களா.
//பத்திரிகை உலகத்துல கூட இது நடக்குங்க.....//
எங்க நடந்தாலும் தப்பு தப்புதான்.
//அதையும் மீறி அப்படி தொடர்ச்சியா தனிமனித தாக்குதல்ல ஈடுபடறவங்க தானாவே மற்றவர்களால் ஒதுக்கப்பட்டுருவாங்க....//
சத்தியமா எனக்கு தோணலை. பல பிரபல பதிவர்கள் அசாதாரண வார்த்திகளை சொல்லி வசைபாடுவதன் மூலமே தம்மை இன்னும் பிரபலப்படுத்திக் கொண்டுதானிருக்கின்றனர்.
////எழுதப்பட்ட பொருளுக்குத் தொடர்பற்ற பின்னூட்டங்களை அனுமதியேன்//
அவர் கும்மி பதிவுகளைப்பற்றியே சொல்லலீங்க மாயன். அதில் நகைச்சுவைக்காக இப்படி வருவதில் ஒரு பிரச்சினையுமில்லை. பல பதிவுகளில் அனானியாய் வந்து மட்டமான வார்த்தைப் பிரயோகங்களும், பதிவிற்கு சம்பந்தமேயில்லாமல் அங்கு அதற்கு முன்பு கமெண்ட் போட்ட யாராவது ஒருத்தரை திட்டுவது போன்ற கமெண்டுகளையும் அனுமதிப்பது இன்னும் இது போன்ற விஷயங்களைத்தான் சொல்லியிருப்பது போல் தோன்றியது.
//சமூகத்தில் மலிந்து கிடக்கும் விஷயங்கள் பதிவுலகிலும் எதிரொலிக்கிறது... பதிவர்கள் வானத்தில் இருந்து வந்தவர்கள் அல்லவே?.. நம்ம மக்கள் தானேய்யா? காலம் கனியும்ங்க//
சரிங்க காலம் அதுவா கனியும்னு உட்கார்ந்து கொண்டிருக்க வேணாமேன்னுதான், இப்படி நடந்து கொண்டால் நன்றாக இருக்குமே என்று கேட்கிறார். சரிதானே?
செல்லா
பதிலளிநீக்குநாகரீகமான கருத்து மோதல்கள் நிச்சயம் வரவேற்கப்படும்... மாலன் சார் நிச்சயம் தொடர்ந்து எழுதணும்.. அதான் எல்லார் ஆசையும்...
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி
நந்தா
பதிலளிநீக்குஉங்க கருத்துகளுக்கு நன்றி..
//சத்தியமா எனக்கு தோணலை. பல பிரபல பதிவர்கள் அசாதாரண வார்த்திகளை சொல்லி வசைபாடுவதன் மூலமே தம்மை இன்னும் பிரபலப்படுத்திக் கொண்டுதானிருக்கின்றனர்//
உண்மை.. பாருங்கள் வலைப்பதிவர்கள் செய்யும் எவ்வளவோ நல்ல விஷயங்களை நான் சொல்லியிருக்கேன்.. ஆனா Controversies-அ தானே உங்களுக்கு விமரிசனம் பண்ண தோணுது?
//பதிவர்கள் பலர் தாங்கள் நம்பும் கருத்தை நேசிக்கறாங்க அய்யா... அதை ஒருத்தர் மறுக்கும் போது தாங்கிக்க முடியாம தனிமனித தாக்குதல்ல இறங்கிடறாங்க... //
அது தான் நந்தா யதார்த்தம்
//பத்திரிக்கைகளிலேயே அப்படித்தான், அதனால் இதில் இப்படி இருப்பதும் சகஜம் என்பது போன்ற வாதங்களை என்னால் ஒத்துக்கொள்ள முடிய வில்லை.//
வெளியே எல்லாம் அப்படி தான் இருக்கும்.. பதிவுலகம் மட்டும் சுத்தமா இருக்கணும்ங்கிறது ஆசையா வேணா இருக்க முடியும்... உண்மையா ஆக முடியாது.. உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கேன்...மிகைப்படுத்தலை...
மாலன் சார் சொன்ன அதே கருத்துக்கள் தான் நாமும் பேசறோம்.. அவர் சொல்லாத விளக்கங்கள்... விட்ட நல்ல விஷயங்களையும் சேர்த்து சொல்றோம்... அந்த பதிவோட பின்னூட்டங்களை பாருங்க.. எவ்வளவு கவலையான மொழிகள்... அத மாதிரி நிறைய பேரு Fed-up ஆயிட கூடாது அவ்வளவு தான் நோக்கம்...
//அத மாதிரி நிறைய பேரு Fed-up ஆயிட கூடாது அவ்வளவு தான் நோக்கம்...//
பதிலளிநீக்குWell Said. உங்களுடைய இந்த நோக்கத்தை நான் முதலிலேயே புரிந்து கொண்டேன். அதனால்தான் என்னுடைய மாறு பட்ட கருத்துக்களை மட்டும் பதிவு செய்தேன். மற்ற படி இதை நான் நல்ல புரிதலை ஏற்படுத்தும் பதிவாய்தான் முதலிலிருந்து பார்க்கிறேன்.
//ஆனா Controversies-அ தானே உங்களுக்கு விமரிசனம் பண்ண தோணுது?//
இல்லைங்க தவறுகளைத்தானே சொல்லி திருத்த முயல முடியும். மற்ற படி வலைப்பதிவர்கள் எழுதும் நல்ல பதிவுகளிற்குதான் போய் நல்ல பதிவு , Excellent போன்ற இன்னும் பல வகையான பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறோமே. எப்படி நல்ல விஷயங்களை பாராட்டுகிறோமோ, அது போன்று தவறான விஷயங்களை ஒதுக்கித்தள்ள நினைக்கிறோம் அல்லது மாற்ற நினைக்கிறோம். அப்படி மாற்ற நினைப்பதே தவறு என்கிறீர்களா??
//அது தான் நந்தா யதார்த்தம்//
சாதியினடிப்படியில் மனிதனை தரம் தாழ்த்தி நடத்துவதும், இன்னும் பல இடங்களில் யதார்த்தமாகவே உள்ளது. அதற்காக அதை ஏற்றுக்கொள்ள முடியுமாங்க?
//வெளியே எல்லாம் அப்படி தான் இருக்கும்.. பதிவுலகம் மட்டும் சுத்தமா இருக்கணும்ங்கிறது ஆசையா வேணா இருக்க முடியும்... உண்மையா ஆக முடியாது.. உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கேன்...மிகைப்படுத்தலை...//
ஒரு சிறு தவறுகள் கூட செய்யத தளத்தையோ அல்லது சமுதாயத்தையோ எங்கேயும் எப்போதும் காண இயலாதுதான். ஆனால் அதே சமயம், கண்முன்னெ தெரிந்தே நடக்கும் ஒரு சில தவறுகளை கூட சுட்டிக்காட்டக் கூடாதா?
இப்போ பாருங்க நீங்க உங்க கருத்துக்களை சொல்றீங்க. நான் என்னுடையதை சொல்றேன். கருத்துப்பரிமாற்றம் ஓரளவு நல்ல புரிதலுடன் நடைபெறுவதால் இப்பதிவின் நோக்கம் வெற்றி பெறுகிறது.
அதை விடுத்து நானோ நீங்களோ மாற்று கருத்தை சொன்னதற்காக மாற்றி மாற்றி திட்ட ஆரம்பித்திருந்தால், உங்கள் பதிவின் நோக்கம் சுத்தமாக வீண் ஆகியிருக்கும், உங்களிற்கு ஒரு எதிரியும் கிடைத்திருப்பான்.
யதார்த்தம், சுற்றிலும் அப்படித்தான் என்று பல காரணங்களைச் சொன்னாலும், இது நல்ல பழக்கம்தானே, கடைபிடித்தால் கெட்டா போயிடுவோம் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
காலம் ஒரு நாள் மாறும் நம்
பதிலளிநீக்குகவலைகள் எல்லாம் தீரும்
வருவதை எண்ணிச் சிரிக்கின்றேன்
வந்தவையெண்ணி அழுகின்றேன்
இந்தப்பாட்டு ரொம்பப் பொருத்தமா இருக்குங்க.
நந்தா, யாதார்த்தம் இணையத்தில் பிரதிபலிக்கிறது என்று சொல்வதற்கும் யதார்த்தம் தான் பிரதிபலிக்கவேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நாங்கள் முன்னதைச் சொன்னோம்.
பதிலளிநீக்குமேலும் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நல்லது கெட்டது சேர்ந்தே இருக்கும் இணையத்தில். விவேகானந்தர் பூமியில் அப்படித்தான் இருக்கும் என்கிறார் ஆன்மீக ரீதியாக. முடியாத ஒன்றை முயற்சிப்பது அதுவும் இணையம் போன்ற மாபெரும் கண்டுபிடிப்பை, பில்கேட்சின் பில்லியன்களுக்கு கூட கட்டுப்படாத கண்டுபிடிப்பை மட்டுறுத்த வேண்டும், ரெகுலரைஸ் பண்ணவேண்டும் என்றெல்லாம் எழுதுவது அறிவுப்பஞ்சத்தையே காட்டுகிறது.
//மேலும் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நல்லது கெட்டது சேர்ந்தே இருக்கும் இணையத்தில். விவேகானந்தர் பூமியில் அப்படித்தான் இருக்கும் என்கிறார் ஆன்மீக ரீதியாக. முடியாத ஒன்றை முயற்சிப்பது அதுவும் இணையம் போன்ற மாபெரும் கண்டுபிடிப்பை, பில்கேட்சின் பில்லியன்களுக்கு கூட கட்டுப்படாத கண்டுபிடிப்பை மட்டுறுத்த வேண்டும், ரெகுலரைஸ் பண்ணவேண்டும் என்றெல்லாம் எழுதுவது அறிவுப்பஞ்சத்தையே காட்டுகிறது. //
பதிலளிநீக்குஇதற்குதான் செல்லா ஏற்கனவே சொல்லி இருந்தேன்.
"ஒரு சிறு தவறுகள் கூட செய்யத தளத்தையோ அல்லது சமுதாயத்தையோ எங்கேயும் எப்போதும் காண இயலாதுதான். ஆனால் அதே சமயம், கண்முன்னெ தெரிந்தே நடக்கும் ஒரு சில தவறுகளை கூட சுட்டிக்காட்டக் கூடாதா?"
சரி விடுங்க. மாயனே சொன்ன மாதிரி காலம் கனியும் காத்திருப்போம். ஓ.கேவா?