உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

அரசியல்வாதிகளும் குரங்குக்கூட்டமும்

ஒரு நாளு ஒரு தொப்பி வியாபாரி காட்டு வழியே தனியா நடந்து போய்கிட்டு இருந்தான்.. ஊர் விட்டு ஊர் போய் தொப்பி விக்கிறது அவன் வேலை. அது மாதிரியே ஒரு நாள் போகும் போது வெயில் அதிகமாக இருந்ததுன்னு அப்படியே அசதியா காட்டுல இருந்த மரத்தடியில் கட்டய சாச்சுட்டான். எழுந்து பார்த்தா கூடையில இருந்த தொப்பில ஒண்ணை கூட காணோம்... அட இது என்னட சோதனைன்னு பரபரன்னு தேடி பாத்தான்..

குர்ரு.. குர்ருன்னு ஒரே சத்தம்.. செம சவுண்டு.. என்னடன்னு அண்ணாந்து பாத்தாக்கா.. நம்ம மூதாதையருங்க எல்லாம் சாலியா காலை ஆட்டிக்கிட்டு ஆளுக்கு 3-4 தொப்பிய மாட்டிக்கிட்டு ஒரே குஜால்ஸ் தான்..

விட்டா இவனுக்கே தொப்பிய விக்கற மூட்ல இருக்காங்க.. இருக்கிற அத்தனை பல்லையும் காட்டி பழிப்பு வேற... நம்மாளுக்கு வேற மரம் ஏற தெரியாதா... என்ன பண்றதுன்னு முழிக்கிறான்..

ஏய் சூ சூ.. அப்படின்னு விரட்டறான்.. குரங்குகளும் அப்படியே.. எகிறி எகிறி எட்டி புடிக்க குதிக்கறான்.. நம்ம மரத்து ஆளுங்களும் அப்படியே குதிச்சு அவனை வெறுப்பேத்தறாங்க...

உடனே நம்மாளுக்கு ஒரு ஐடியா.. தலையில இருக்கிற தொப்பிய தூக்கி அடிக்கிறான்... குரங்குங்க ஒரு தடவ ஒண்ண ஒண்ணு பாத்துக்கிடுச்சு.. உடனே தொப்பிய அவன மாதிரியே தூக்கி வீசிட்டு அப்படி ஒரே எக்காளம்.. நம்மளுக்கு சந்தோஷம் பிடிபடலை.. அட முட்டாப்பய குரங்குகளான்னு சிரிச்சுட்டே எல்லத்தையும் பொறுக்கிக்கிட்டு ஒரே ஓட்டமா ஓடி போயிட்டான்..

காலம் வேகமா போச்சு.. விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறுச்சு..

ஆனா நம்மாளுங்க என்னைக்கு முன்னேறி இருக்காங்க..

முதல்ல போன அந்த தொப்பிக்காரனோட பையனும் அதே வேலை பண்ணிட்டு, அவனோட மகனும் அதே வேலைக்கு வந்துட்டான்...

அதே காட்டு பாதை... அதே மரம்.. அதே வெயில்.. அதே மாதிரி இவனுக்கும் தூக்கம் வந்துடுச்சு... என்ன செய்ய அப்படியே தொப்பி கூடையை ஓரமா வெச்சுட்டு இவனும் கட்டையை சாச்சுக்கிட்டான்...

அதே குரங்குக்கூட்டம்.. அழகா இறங்கி வந்து எல்லா தொப்பியையும் எடுத்து போட்டுக்கிட்டு மரத்து மேல போய் உக்காந்துக்குச்சு...

நம்மாளு கனவுல நமீதா கூட டூயட் பாடிட்டு பொறுமையா எந்திரிச்சு பாத்தா தொப்பியை காணோம்.. திக்குனு ஆயிடுச்சு...
மரத்து மேல ஒரே கூச்சல்.. அண்ணாந்து பாத்தாக்கா குரங்கு எல்லாம் இவனோட தொப்பிய ஆளுக்கு 2-3ன்னு போட்டுக்கிட்டு ஒரே அலம்பல்..

இவன் அசரலை.. என்ன பண்றதுன்னு யோசிச்சான்..


அட நம்ம தாத்தா தான் சொல்லியிருக்காறே?.. இதே மாதிரி அவருக்கு நடந்தப்ப என்ன பண்ணாருன்னு...

உடனே ஆ ஊன்னு கத்தி குரங்கும் திருப்பி பண்ணுதான்னு செக்கெல்லாம் பண்ணாம சட்டு புட்டுன்னு தலையில இருந்த தொப்பிய தூக்கி வீசியெறிஞ்சான்...

மேல கூட்டத்துல மயான அமைதி.. என்னடா ரியாக்சனே காணோம்.. அப்படின்னு டென்ஷனா பாத்துக்கிட்டு இருக்கும் போதே.. ஒரு குரங்கு.. ஸ்லோ மோஷன்ல இறங்கி வந்துது... தலைவன் குரங்கு போல.. நேரா போய் அவன் வீசி எறிஞ்ச தொப்பிய எடுத்துக்கிட்டு மரத்து மேல உக்காந்துக்குச்சு...

இது என்னடா புதுசா இருக்குன்னு நம்ம பய ஆடி போயிட்டான்.. மரத்து மேல இருந்து ஒரு குரல்..

"டேய் உனக்கு மட்டும் தான் தாத்தா இருக்காரா.. எங்களுக்கும் இருக்காரு.. போடா"

என்னடா இந்த கதை இப்ப எதுக்குன்னு பாக்கறீங்களா?

நம்ம அரசியல்வாதிங்களும் இப்படி தான் பாட்டன் பூட்டன் காலத்து தந்திரமெல்லாம் மக்கள் கிட்ட ட்ரை பண்ணிட்டு இருக்காங்க.. குரங்கு கூட்டம் மாதிரி நம்ம மக்கள் என்னைக்கு முழிச்சிக்க போறாங்கன்னு தெரியலை...

4 மறுமொழிகள்:

Boochandi சொன்னது…

ஹலோ, இப்போ இருக்கறவங்களே எல்லாம் தாத்தா/பாட்டீதானே!!! அப்போ அவர்களுடைய தாத்தா/பாட்டீ காலத்து திட்டங்களா... அப்படீன்னா, கடவுளே...இந்தியாவை காப்பாத்துப்பா!!!

Thekkikattan|தெகா சொன்னது…

this is not related with this post...

மாயன்,

இந்த படத்தில் வரும் மாயன்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.. :-) //

உங்க பெயரை படிக்கும் பொழுதெல்லாம் தென் அமெரிக்கா மாயன்களை பற்றி நினைவுக்கு வருவதில்லை, மாறாக உங்களுக்கு பிடித்த நம்ம நடிகர் நாசர் நடித்து வெளி வந்த அவதாரம் படத்தின் நாயகன் பெயரான "மாயன்" தான் என் ஞாபத்திற்கு வரும்.. . :-))))

நன்றி மாயன் :-P

மாயன் சொன்னது…

எனக்கு நாசரை பிடிக்காது என்று எப்போதுமே நான் சொன்னதில்லையே தெகா.. அவருடைய ஒரு கருத்துக்கு நான் மாற்று கருத்து கொண்டிருக்கிறேன்.. அவ்வளவு தான்..

இந்த வர்க்க போராட்டங்கள்.. அமெரிக்க குடியேற்றங்கள் பற்றின படங்களில் ஒன்றை நான் விமரிசனம் செய்திருக்கிறேன் தெகா..

இந்த படத்தை பார்த்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்களேன்..

மாயன் சொன்னது…

//அப்போ அவர்களுடைய தாத்தா/பாட்டீ காலத்து திட்டங்களா.//

:-))

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..