உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

புதன், ஜூலை 04, 2007

ஏழைகளின் நட்சத்திர கலை விழா...

இன்னைக்கு செய்தித்தாள் பார்த்தீங்களா?.. நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடடம் கட்டுறதுக்காக நட்சத்திர கலை விழா நடத்த போறாங்களாம்...

இது என்ன அன்றாடங்காய்ச்சி தொழிலாளர்கள் சங்கமா? இல்லை அடுத்த வேளை சோற்றுக்கு அவதிப்படும் காண்டிராக்டு ஊழியர் சங்கமா...

கோடி கோடியாய் சம்பாதிக்கும் வர்க்கம் தானே? பெரிய-சிறிய நடிகர், நடிகைகளிடம் ஒரு லட்சமோ, 2 லட்சமோ வாங்கும் சம்பளத்துக்கு ஏற்ப நன்கொடை வாங்கி அந்த கட்டிடத்தை நடிகர் சங்கமே கட்டி கொள்ள கூடாதா?

அதற்கு ஒரு கலை விழா ஏற்பாடு செய்து அதற்கு டிக்கெட் போட்டு வசூலித்து தான் கட்டிடம் கட்ட வேண்டுமா?

அதற்கும் ரசிகர்கள் என்ற ஏமாளிகள் தலையில் தான் கைவைக்க வேண்டுமா?

என்னமோ மனசுல பட்டுச்சு...

2 கருத்துகள்:

  1. என்னாங்க மாயன் அதான் நம்மாளுங்க விவரமா ஏழை ரசிகன் தலைல கைவைக்காம அயல்நாட்டு பணக்கார ரசிகர்களிடம் வசூலிக்க போராங்களே! இதுவும் ஒரு வகையில அன்னிய செலவாணிய கொண்டு வரும் வித்தையா இருக்கும் போல ! :-))

    பதிலளிநீக்கு
  2. //இதுவும் ஒரு வகையில அன்னிய செலவாணிய கொண்டு வரும் வித்தையா இருக்கும் போல//

    உள்ளூர்ல கலை விழா நடத்தினா அஞ்சோ, பத்தோ தான் கிடைக்கும்... அங்கே போனா.. ஆயிரம், ரெண்டாயிரம்னு சுருட்டலாமே...

    பதிலளிநீக்கு