உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

புதன், ஜூன் 18, 2008

தசாவதாரம் பேசும் ஒழுங்கின்மைக் கோட்பாடு


தசாவதாரம் குறித்து சலிக்க சலிக்க விமரிசனங்கள் பார்த்தாயிற்று...

தசாவதாரம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்கள், தசாவதாரம் பேசும் ஒழுங்கின்மைக் கோட்பாடு பற்றி மட்டும் சில கருத்துக்கள்

மதங்கள் எவ்வாறு தான் வாழும் காலத்தில் தன்னை சுற்றியிருந்த சிறு மதங்களையும், நம்பிக்கைகளையும் வாரி சுருட்டி தன்னகத்தே கொண்டு வளர்ந்திருக்கின்றன என்பதை இப்படம் தெளிவாக உணர்த்துகிறது...

ஒரு காலத்தில் ஒன்றுக்கொன்று பெரும் சவாலாய் இருந்த சைவம், வைணவம் என்ற இரு பெரும் மாற்று மதங்களை ஒன்றாக இணைத்து தழைத்தோங்கி நம்முன் நிற்கிறது இன்றைய இந்து மதம்... ராமானுஜர், நம்பி(?), அப்பர் போன்றோர் அவரவர் மதத்துக்கு செய்த தியாகங்கள் விழுங்கி ஏப்பம் விடப்பட்டு இருக்கிறது...

என் மதம் தான் சிறந்தது.. பிற மதத்துக்கு தலை சாய்க்க மாட்டேன் என்று முழங்கி அவர்கள் தங்கள் மதத்துக்கு செய்த தியாகம், கலகம், போராட்டம்….. இன்று வைணவம், சைவம், ஜைனம் எல்லாம் ஒன்றாகி ஒரே இந்து மதமானதில் காணாமல் போய் விட்டது அல்லவா?

ஒரு வேளை எதிர்காலத்தில் வேற்று கிரகத்து உயிரினங்கள் கண்டுபிடிக்கப் பட்டு பிரபஞ்சம் ஒரே குடையின் கீழ் வரும் போது, இந்து, இசுலாம், கிருத்துவம் எல்லாம் கலந்து விடக்கூடும்... என் மதம் என் மதம் என்று ஏன் இந்த அர்த்தமற்ற மோதல்கள் நமக்குள்...

ஒழுங்கற்ற தன்மையோடு இருக்கும் தொடர் செயல்களில் ஒரு ஒழுங்கை தேடும் நிலை தான் ஒழுங்கின்மை கோட்பாடு. (Chaos Theory). (கிட்டத்தட்ட)

பிரபஞ்சமே ஒரு ஒழுங்கான நிலையில் இருந்து, ஒரு ஒழுங்கற்ற நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது...

ஒழுங்கின்மை கோட்பாடு, வண்ணத்துப்பூச்சி விளைவு ஒரு அறிமுகம்...

ஒழுங்கற்ற ஒரு அமைப்பிலோ, ஒரு தொடர் செயற்பாட்டிலோ ஒரு ஒழுங்கை தேடும் இயலை பற்றி விவரிப்பது தான் இந்த ஒழுங்கின்மைச் சித்தாந்தம் (Chaos Theory).

ஆரம்ப கட்ட சூழ்நிலைகளில் மேல் நுண்-உணர்வினை கொண்டுள்ள எந்த ஒரு அமைப்பையும், இந்த சித்தாந்ததின் கீழ் வகை படுத்த முடியும்.

உதாரணத்திற்கு, ஒரு நாள் நீங்கள் தங்கள் நண்பரிடம் சற்று மாறுபட்ட வகையில் நடந்து கொள்வதாக வைத்துக்கொள்ளுங்கள். அவர் சொன்ன யோசனைக்கு "சரி" என்று கூறுவதற்க்கு பதிலாக "சரி. எனக்கு தெரியும்" என சொல்லிவிட்டீர்கள். அதை அவர் மனதில் வைத்துக்கொண்டு மெல்ல மெல்ல உங்களை பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்.
ஒரு 20- 25 வருடம் கழித்து உங்களுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் 10 கோடி ருபாய் பணம் தேவைப்படுகிறது. அது உங்கள் நண்பரிடம் இருக்கிறது. நீங்கள் அவரிடம் சென்று கேட்கின்றிர்கள். தங்கள் மேலுள்ள தவரான எண்ணத்தால் அவர் அதை தர மறுக்கின்றார். சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியாத்தால் உங்கள் தொழிற்சாலை மூடப்படுகிறது...இதன் விளைவாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. ..
நீங்கள் அவ்வாறு 20 வருடத்திற்க்கு முன் "சரி" என்று மட்டும் சொல்லியிருந்தால், இன்று 10 கோடி உங்கள் கையிலே. இவ்வகைப்பட்ட உங்கள் நண்பனின் செயல்பாட்டை இந்த சித்தாந்ததின் கீழ் வகைப்படுத்தலாம்.

இவ்வகை விளைவினை விஞ்ஞானிகள் வண்ணதுப்பூச்சி விளைவு என அழைக்கின்றனர்.
அதாவது, மயிலாபூரில் பறந்து கொண்டிருந்த வண்ணத்துபூச்சியின் சிறகினால் அசையப்பெற்ற காற்றானது, காற்றுமண்டலத்தில் மிகச்சிறு மாறுதல் ஒன்றை ஏற்படுத்துகிறது., இது படிபடியாக பிற மாற்றங்களை ஏற்படுத்தியதன் விளைவாக, 6 மாதம் கழித்து ஒரிசாவில் ஏற்படவிருந்த புயல் ஏற்படவில்லை.

சுருங்கச் சொன்னால், ஆரம்ப கட்ட சூழ்நிலைகளில் மேல் நுண்-உணர்வினை கொண்டுள்ள தன்மை.
”( நன்றி - sivam - agarathai.blogspot.com

தசாவதாரம் படம் பார்த்த பலர் மனதிலுள்ள ஒரு கேள்வி..... முதலில் காட்டப்படும் 12-ம் நூற்றாண்டு ரங்கராஜன் நம்பி கடலில் வீசபடும் கதைக்கும், 21-ம் நூற்றாண்டில் நடக்கும் கதைக்கும் என்ன சம்மந்தம்?

அங்கே தான் ஒழுங்கின்மை கோட்பாட்டியல் வருகிறது.......

12-ம் நூற்றாண்டில் கடலில் எறியப்படும் கருங்கல்லால் ஆன பெரிய சிலை கடலில் ஏற்படுத்தும் சிறு பாதிப்பு பல நூற்றாண்டுகளாய் தொடர்ந்து நடக்கும் பல தொடர் விளைவுகளுக்கு காரணமாகி 21-ம் நூற்றாண்டில் ஏற்படும் சுனாமிக்கு வழிவகுத்து அதன் மூலம் மனித குலத்துக்கு ஏற்படவிருந்த பேராபத்தை நீக்குகிறது...

அன்று அந்த சிலை எறியப்படாமல் போயிருந்தால், சுனாமி இல்லை... சுனாமி இல்லையென்றால் புதிய கிருமி ஆயுதத்தால் மனித குலம் கூண்டோடு அழிந்து பொயிருக்கும்.. என்பதே தசாவதாரத்தில் காட்டப்படும் பட்டர்பிளை எஃபக்ட்...

ஒழுங்கின்மை கோட்பாட்டை மறைத்து அண்டம் என்ற ஒரு ஒழுங்கற்றத் தன்மைக்கு இறைவன் என்ற பெயரில் ஒரு ஒழுங்கு வடிவம் கொடுக்க முயலும் ஆன்மீகம்... அதில் ஆரம்பித்து, ஒழுங்கின்மை கோட்பாட்டை விளக்க முயலும் விஞ்ஞானத்தில் கொண்டு வந்து முடிக்கிறார்கள்...

ரொம்ப ஹெவியான ஒரு விஷயத்தை ஜனரஞ்சகமாக சொல்ல முயலும் போது திரைக்கதையில் பல குழப்பங்கள் நிகழ வாய்ப்புண்டு... குழப்பங்களை தவிர்த்து தெளிவான திரைக்கதை அமைந்ததில் தான் படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது....

எனக்கென்னவோ இந்தியன் படத்தில் மேக்கப் நன்றாக பொருந்தியது போல தசாவதாரம் படத்தில் மேக்கப் பொருந்தவில்லையோ என்று படுகிறது....


8 கருத்துகள்:

  1. this is one of the good reviews i've read regarding this movie when everyone has missed this Chaos Theory underneath this story..

    >>> ரொம்ப ஹெவியான ஒரு விஷயத்தை ஜனரஞ்சகமாக சொல்ல முயலும் போது திரைக்கதையில் பல குழப்பங்கள் நிகழ வாய்ப்புண்டு... குழப்பங்களை தவிர்த்து தெளிவான திரைக்கதை அமைந்ததில் தான் படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது <<<


    thats true.. here when it means screenplay, kamal has tried to balance between normal people & the so called people who start comparing with the hollywood movies they've watched. one cannot 100% satisfy both the crowd.. all the hype of playing 10 roles etc.. is to sell the movie i guess ..

    பதிலளிநீக்கு
  2. சூப்பர்.
    இதே அடிப்படையில் தமிழில் வந்த எல்லா படங்களுமே ஒழுங்கின்மைக் கோட்பாட்டின் கீழ் வந்தவை என்றே கூறலாம். வினையும் எதிர்வினையும். வில்லனின் வினையும் ஹீரோவின் எதிர்வினையும்.

    'அந்த சாலையில் நீவந்து சேராமல் ஆறு டிகிரியில் என் பார்வை சாயாமல் நின்று போயிருந்தால் தொல்லை இல்லை..' பல காதல் படங்களும் இல்லாமல் போயிருக்கும்.

    முதலில் வெறும் உப்பைக் கொண்டு அழித்துவிடக் கூடிய ஒரு வைரசை எந்த தீவிரவாதியாவது வாங்குவானா தெரியவில்லை. அப்படி சாதாரணமாக அழிக்கப்படும் ஒன்று ஒரு ஆயுதமா?

    கடைசியில் துப்புரவுத் தொழிலாளர்கள் அவ்வளவு உப்பை உடம்பில் பூசிக்கொள்ளும்போது அவகளிடமிருந்து கொஞ்சம் உப்பை வாங்கி அதில் Vialஐ வைக்க முடியாதா?

    இது வேறுமாதிரி Chaos (குழப்பம்)..

    ஆயினும் ஒழுங்கின்மைக் கோட்பாட்டை முன்வைத்து படம் செய்ய வேண்டும் என நினைத்து செய்யப்பட்டிருக்குமானால் பாராட்டப்படவேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  3. சிறில்..

    கமல் அதை யோசிக்காமல் இருப்பாரா?.. எவ்வளவு உப்பு தேவைப்படும்... டன் டன்னா தேவை என்று பாத்திரங்களுக்குள் நடக்கும் உரையாடலில் வெளிப்படுத்துவார்... அதற்காக தான் அதை கடலில் விட்டெறிய கடற்கரைக்கு வருவார்...

    பதிலளிநீக்கு
  4. யாத்திரீகன்...

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  5. மாயன்,
    //டன் கணக்கில் உப்பு..//

    சரிதான். பின்னிட்டீங்க போங்க. :)

    பதிலளிநீக்கு
  6. >>எனக்கென்னவோ இந்தியன் படத்தில் மேக்கப் நன்றாக பொருந்தியது போல தசாவதாரம் படத்தில் மேக்கப் பொருந்தவில்லையோ என்று படுகிறது.... <<

    அதே அதே !! மைக்கேல் வெஸ்ட்மோர் தவிர ஹாலிவுட்டில் கமலுக்கு வேறு ஒப்பனை நிபுணர்களா கிடைக்கவில்லை ?

    மட்டுமல்ல ...

    Though he has done justice to all the characters, he has not justified them all. Just my 2 cents.

    அன்புடன்
    முத்து

    பதிலளிநீக்கு
  7. சிறில்,

    அந்த உப்பு லாஜிக்கில் சிறிய அளவில் ஓட்டை இருப்பது ஒப்புக் கொள்ளவேண்டியது தான்...
    இருந்தாலும் கமல் என்ற ஒப்பற்ற கலைஞனுக்காக அதை மன்னித்து விடலாமே....

    பதிலளிநீக்கு
  8. நான் படித்த தசாவதார திறனாய்வுகளில் தங்களுடயது மாறுபட்டது. படத்தின் உட்பொருளை அடையாளங்கண்டு நன்றாக எழுதியுள்ளீர்கள். ஒழுங்கின்மைக் கோட்பாடு தொடர்பில் உங்களின் விளக்கம் மிக நன்று. இந்த ஒழுங்கின்மை அடிப்படையில் ஏற்கனவே பல படங்கள் வந்திருந்தாலும், அவை ஒழுங்கின்மைக் கோட்பாட்டைக் கருவாக கொண்டவை அல்ல. அந்தப் படங்களில் நாம்தான் ஒழுங்கின்மைக் கோட்பாட்டைத் தேடி கண்டுபிடிக்கலாமே தவிர, அவை தசாவதாரம் போல் ஒழுங்கின்மைக் கோட்பாட்டை வலியுறுத்தும் படங்கள் அல்ல.

    தசாவதாரம் பற்றி என்னுடைய பார்வையை எனது வலைப்பதிவில் பதிவாக்கியுள்ளேன். வாய்ப்பு இருப்பின் படித்து மறுமொழி இடவும்.

    பதிலளிநீக்கு