உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

கேபிள் கனெக்ஷனும் கேணப்பய மக்களும்

என்னடா பக்கதுக்கு ஒண்ணா ஹால்ல மூணு TV வெச்சு பாத்துட்டிருக்கே? எந்த சீரியல் பார்க்கிறதுன்னு உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் ஏதாவது பிரச்சினையா?

அட நீ ஒண்ணு... வேற வேற கட்சி கேபிள்காரங்க மிரட்டி ஆளுக்கு ஒரு செட் டாப் பாக்ஸ் கொண்டு வந்து வெச்சுட்டு பொயிட்டாங்க.. எப்படி சந்தா கட்டரதுன்னு தெரியாம முழி பிதுங்கி உக்காந்திருக்கேன்...
உங்க வீட்டுல எதுக்குடா ரெண்டு கேபிள் கனெக்ஷன் வாங்கியிருக்க?..

ஒண்ணுத்துல சன் TV தவிர எல்லா சேனலும் வரும்... அடுத்ததுல சன் TV மட்டும் வரும்....
ஏங்க ரெண்டு நாளா கேபிள் கட் ஆயிருக்கே... கேபிள் ஆபிஸுல புகார் கொடுத்தீங்களா? இல்லையா?

அடி போடி... அவனுக்கே யார்ட்ட இருந்து கனெக்ஷன் வருதுன்னு தெரியலையாம்... நாலஞ்சு MSO-க்கு சொல்லி விட்டிருக்கானாம்... பார்க்கலாம்...
கேபிளை அரசு ஏற்று நடத்தும் அரசு ஏற்று நடத்தும்னு தலைவர் அறிக்கை விட்டதை நம்பி ஏமாந்துட்டேங்க...

ஏன் என்னாச்சு....

அரசு ஏற்று நடத்தும்னு பார்த்தா கடைசியா தலைவரோட அக்கா பையன் அரசு கேபிளை ஏற்று நடத்தறான்...
ஒரு பேரன் சினிமா எடுக்கிறார்... ஒருத்தர் புதுசா கேபிள் நடத்தறேன்னு உயிரை எடுக்கிறார்... ஒரு பேத்தி மாநாட்டுல அரசியல் வாதியா அவதாரம் எடுக்கிறார்...
எக்ஸ் பேரன் மறுபடி அமைச்சராக முடியுமான்னு தாத்தா வீட்டுக்கு படை எடுக்கிறார்... மக்கள் என்னயா பண்றது?

வழக்கம் போல பிச்சை எடுக்க வேண்டியது தான்...
சார் என் வீட்டுல TV இல்லை... உங்களுக்கு வீட்டுக்கு ஒரு இணைப்பு கண்டிப்பா கொடுக்கனும்னு ரேடியோவுக்கு கேபிள் கனெக்ஷன் கொடுத்துட்டு காசு கேட்டு மிரட்டுறது நல்லாயில்லை...
1 கோடி ரூபாய்க்கு இன்ஸ்யூர் பண்ணியிருக்காரா யார் அவரு? ஸ்டண்ட் மேனா?

இல்லைங்க.. அதுக்கும் மேல ரிஸ்கான தொழில் பண்றார்... கேபிள் TV நடத்தறார்...
எங்கிட்ட ஏற்கனவே செட் டாப் பாக்ஸ் இருக்குங்க...ஏன்யா இப்படி மிரட்டி இன்னொரு செட் டாப் பாக்ஸ் வாங்கிக்க சொல்றீங்க இது நியாயமா?

அந்தம்மா ஆட்சிக்கு வந்தா TVயும் சேர்த்து வாங்கிக்க சொல்லும்.... அய்யாவுக்கு எப்படி வசதி?
ஏங்க உங்க அய்யாவை பத்தி உயர்வா அந்த வெளிநாட்டு நியூஸ் TVல காட்டிட்டாங்கிறதுக்காக எல்லா சேனல்லயும் அதே TV-ய காமிக்கிறது கொஞ்சம் கூட நல்லாயில்லைங்க.....
ஏம்பா நல்ல வருமானம் வர்ற முக்கியமான தொழில்(கேபிள், சாராயம், மணல் எடுத்தல்) எல்லாத்தையும் அரசாங்கமே ஏத்து நடத்துது?

முன்னாடியெல்லாம் அரசாங்கம்னு சொன்னா கட்சின்னு அர்த்தம்... இப்ப எல்லாம் அரசாங்கம்னா குடும்பம்னு அர்த்தம்டா... அதான்...
இன்றைய பஞ்ச்

எப்படி தலைவர்கள் எல்லாம் கோடி கோடியாக சேர்க்கிறார்கள் என்று ஒரு தொண்டனுமே கேள்வி கேட்பதில்லை... அவன் பங்கு பத்து ரூபாய் ஒட்டு போடும் போதே அவனுக்கு கிடைத்து விடுகிறதே......


8 மறுமொழிகள்:

siva சொன்னது…

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னை தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளை பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.

ச்சின்னப் பையன் சொன்னது…

அட்றா சக்கை... அட்றா சக்கை... சூப்பரா சொன்னீங்க...

தனித்தனிப் பதிவா போடற அளவுக்கு இருக்கிற பெரிய பெரிய மேட்டரை ஜோக்கா ஒரே பதிவுலே போட்டு தாக்கிட்டீங்க....

மாயன் சொன்னது…

சிவா

இதை என்னை சுட்டிக்காட்ட சொல்லியிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்

மாயன் சொன்னது…

ச்சின்னப்பையன்

பெரிய பெரிய மேட்டர்கள் தான் இன்றைய சூழ்நிலையில் சிரிப்பாய் சிரிக்கிறது...

அணு ஆயுத ஒப்பந்தம், பெட்ரோல் விலை உயர்வு, நிதியமைச்சரின் கண்மூடித்தனமான பொருளாதார கொள்கை... இப்படி இன்னும் பல மேட்டர்கள் இருக்கிறது

மங்களூர் சிவா சொன்னது…

/
ஒரு பேரன் சினிமா எடுக்கிறார்... ஒருத்தர் புதுசா கேபிள் நடத்தறேன்னு உயிரை எடுக்கிறார்... ஒரு பேத்தி மாநாட்டுல அரசியல் வாதியா அவதாரம் எடுக்கிறார்...
எக்ஸ் பேரன் மறுபடி அமைச்சராக முடியுமான்னு தாத்தா வீட்டுக்கு படை எடுக்கிறார்... மக்கள் என்னயா பண்றது?

வழக்கம் போல பிச்சை எடுக்க வேண்டியது தான்...
/

ROTFL

:))))))))))))))))


எல்லா ஜோக்குகளும் மிக அருமை!

வெண்பூ சொன்னது…

போட்டுத் தாக்குறீங்க மாயன்..... ரொம்ப நொந்து நூலாயிட்டீங்க போல..

பெயரில்லா சொன்னது…

இப்படித்தான் தமிழன் நெலமை சிரிப்பாய் சிரிக்குது!

மாயன் சொன்னது…

வெண்பூ

வைதேகி காத்திருந்தாள் படத்துல கவுண்டமணிகிட்ட பெட்டர்மாக்ஸ் லைட் வாங்கிட்டு போன ஒருத்தர் புலம்புவார்...

"நிஜமாவே எரிலீங்களா?"

"ராத்திரி பூரா இருட்டுல உக்காந்திருந்தது எனக்கு தான்டா தெரியும்"

கேபிள் கட் ஆயிட்டு பொண்டாட்டி கிட்ட கையாலாகதவன் பட்டம் வாங்கினவங்களை கேட்டு பாருங்க....

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..