உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

க்ரெடிட் கார்டும் கிரகம் பிடிச்ச ஏஜெண்டுகளும்

நீங்கள் உலக மகா முக்கியத்துவம் வாய்ந்த ஏதாவது வேலையில் மூழ்கி இருக்கும் போது க்ரெடிட் கார்டு, இன்சூரன்ஸ், பெர்ஸனல் லோன், க்ளப் மெம்பர்ஷிப் இப்படி தமிங்கலத்தில் பேசி உங்களை திணறடிக்கும் அழைப்புகளின் போது உங்களுக்கு என்ன தோன்றும்?

உங்கள் தெள்ளுத்தமிழ் பெயரை பிய்த்து காக்காய்க்கு போட்டு அழைத்து, உங்களை அலைபேசியில் விடாமல் துரத்தும் குரல்களை கேட்கும் போது என்ன தோன்றும்?

வெவ்வேறு சந்தர்ப்பத்தில் இந்த அழைப்புகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதைப் பற்றி ஒரு கற்பனை...


ஹலோ....
சார் நாங்க XXX பேங்கல இருந்து கால் பண்றோம்...
உங்களுக்கு க்ரெடிட் கார்டு ஆஃபர் பண்ணியிருக்காங்க...

அப்படியா? நொ ப்ராப்ளம்...உடனே அனுப்பி வைங்க... யூஸ் பண்ணிக்கறேன்...பில்லை நீங்களும், உங்க மேனேஜரும் சேர்ந்து கட்டிடுங்க....
சார் நாங்க.. XXX பேங்க்ல இருந்து பேசறோம்... உங்களுக்கு லோன் ஏதாவது தேவைப்படுதா?

ஆமா தேவைபடுது... அட்ரஸ் தரேன்.. உடனே மணியார்டர் பண்ணிடுங்க....
சார் தேவநாதன் சாருங்களா?

இல்லை... அவரோட ஒண்ணு விட்ட சித்தப்பாவோட மச்சினி புருஷனோட சகலபாடி பேசறேன்... என்ன விஷயம்னு சொல்லுங்க...
சார் கிருஸ்ணன் சார் இருக்காருங்களா?

இல்லைங்க... அவன் பக்கத்து வூட்டுக்காரன் பொண்டாட்டிய கூட்டிட்டு ஓடி போயிட்டான்... போற அவசரத்துல செல்லை விட்டுட்டு போயிட்டான்.. சொல்லுமா என்ன வேணும்?
சார் புது இன்சூரன்ஸ் ஸ்கீம் ஒண்ணு வந்திருக்கு... அதை பத்தி உங்கக்கிட்ட ஒரு 5 நிமிஷம் பேசலாமா?

அந்த நாயோட ஏஜண்டா நீ? கம்முனாட்டி லேடீஸ் காலேஜ் வாசல்ல ஈவ் டீசிங்க் பண்ற நாய்க்கு இன்சூரன்ஸ் ஒரு கேடா? 15 நாள் ரிமாண்டுக்கு அப்புறம் வெளிய வந்தான்னா பேசிக்க... வை ஃபோனை....
சார் ஒரு க்ளப் மெம்பர்ஷிப் பத்தி உங்களுக்கு எக்ஸ்ப்ளெயின் பண்ணலாமா?

பண்ணுங்களேன்... உங்க க்ளப்புல, சீட்டாட்டம், காபரே இதெல்லாம் இருக்கா? காபரே பார்க்க ஃபேமிலியோட வரலாமா? குழந்தைகளுக்கு ஏதாவது டிஸ்கவுண்ட் தருவீங்களா?
உங்க க்ரெடிட் கார்டு பேஸ் பண்ணி உங்களுக்கு 1 லேக் லோன் எலிஜிபிலிட்டி கொடுத்திருக்காங்க...

1 லேக் எல்லாம் பத்தாதுமா.... என் பையன் வாங்கியிருக்கிற மார்க்குக்கு இன்ஜினியரிங் சீட் வாங்கனும்னா உங்க பேங்கை கொள்ளை தான் அடிக்கணும்... அட்ரஸ் தர்றீங்களா?
சார் உங்களுக்கு 2 லேக்ஸ்க்கு மேல லோன் வாங்கற ஐடியா இருக்கா?

இப்போதைக்கு கைமாத்தா 100 ரூபா வாங்கிர ஐடியா தான் இருக்கு... சைட் டிஷ்க்கு குறையுது... உனக்கெல்லாம் யாரும்மா நம்பர் தராங்க? ..... தண்ணியடிக்க கூட வுடாம நொய்யி நொய்யின்னு... வைம்மா?
சார்... ரஞ்சித் சாருங்களா? சார் நாங்க டீமாட் அக்கவுண்ட் ஓப்பன் பண்றோம்....

ஓ... அதுக்கு நான் ஃபைனான்ஸ் பண்ணனுமா? முன்னாடியெல்லாம் திருப்பதி உண்டியில போட பணம் கேட்டு வீட்டுக்கு நாமம் போட்டுக்கிட்டு நேரா வந்துக்கிட்டு இருந்தீங்க... இப்பல்லாம் ஷேர் மார்கெட்ல பணம் போட போன் போட்டு கலெக்ஷன் பண்றீங்களா?... வேலையைப் பார்த்துக்கினு போய்யா...
7 மறுமொழிகள்:

பிரேம்ஜி சொன்னது…

மாயன்.இந்த மாதிரி அழைப்புகளை சந்தித்து ரொம்ப வெறுப்பா இருக்கீங்க போல இருக்கு. :-))))

மங்களூர் சிவா சொன்னது…

ரொம்ப நொந்துட்டீங்களோ!?!?

:)))

/
சார் கிருஸ்ணன் சார் இருக்காருங்களா?

இல்லைங்க... அவன் பக்கத்து வூட்டுக்காரன் பொண்டாட்டிய கூட்டிட்டு ஓடி போயிட்டான்... போற அவசரத்துல செல்லை விட்டுட்டு போயிட்டான்.. சொல்லுமா என்ன வேணும்?
/

:)))

மாயன் சொன்னது…

நன்றி சிவா.. நன்றி பிரேம்ஜி...

டி.பி.ஆர் சொன்னது…

சார் கிருஸ்ணன் சார் இருக்காருங்களா?

இல்லைங்க... அவன் பக்கத்து வூட்டுக்காரன் பொண்டாட்டிய கூட்டிட்டு ஓடி போயிட்டான்... போற அவசரத்துல செல்லை விட்டுட்டு போயிட்டான்.. சொல்லுமா என்ன வேணும்?//

இது ரொம்ப நல்லாருக்கு:-)))))

சூர்யா சொன்னது…

மாயன் அண்ணே.. கலக்கீட்டீங்க போங்க...!!

கண்டிப்பா இத படிகிறவங்க அடுத்தமுறை இப்படியொரு கால் வந்தா பயன்படுத்தலாம்.

ஒவ்வொன்றும் வாய் விட்டு சிரிக்க வைத்தது.

வெண்பூ சொன்னது…

//இப்போதைக்கு கைமாத்தா 100 ரூபா வாங்கிர ஐடியா தான் இருக்கு... சைட் டிஷ்க்கு குறையுது... உனக்கெல்லாம் யாரும்மா நம்பர் தராங்க? ..... தண்ணியடிக்க கூட வுடாம நொய்யி நொய்யின்னு... வைம்மா?//

இதுதான் டாப்..

மாயன் சொன்னது…

நன்றி சூர்யா.. நன்றி வெண்பூ..

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..