உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வியாழன், ஜனவரி 07, 2010

திருட்டு விசிடியும், பத்தாயிரம் ரூபாய் அடியாளும்

நடிகர் சரத்குமாரின் ஜக்குபாய் படம் வெளிவரும் முன்பே இணையத்தில் வெளியிட்டதாக ஒருவரை கோயம்புத்தூரில் கைது செய்து இருக்கிறார்கள். அதை இணையிறக்கம் செய்து வெளியிட்டதாக இரண்டு விசிடி வியாபாரிகளை கைது செய்திருக்கிறார்கள்... சரி திரையரங்கில் வெளியாகும் முன் படம் எப்படி அவர்களுக்கு கிடைத்தது? விசாரிக்கிறார்கள். 


லேபில் யாரோ திருடி வெளியிட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுதாய் கூறுகிறார்கள்

லேபில் இருந்து வெளியிட்டவரை காப்பாற்ற முயற்சிக்கிறார்களோ என்று தோன்றுகிறது... அது மட்டும் அல்ல... மற்றொரு திரைப்பட விழாவில் பேசும் போதும் சரி, பேட்டிகளிலும் சரி திருட்டு விசிடிகளை கண்டிக்கிறார்களே தவிர பிரிண்ட் வெளியே போனது எப்படி என்பதை பற்றி பேச மறுக்கிறார்கள்...

சரி.. கூட இருப்பவரை காட்டிக் கொடுக்க மனம் வரவில்லையாக இருக்கும்..

அதை விடக் கொடுமை இயக்குனர் ஒருவரின் பேச்சு... பத்தாயிரம் சம்பளத்தில் அடியாள் வைக்க வேண்டுமாம்.. எல்லா நடிகர்களும் தங்கள் ரசிகர்கள் உதவியோடு திருட்டு விசிடியை ஒழிக்க களத்தில் குதிக்க வேண்டுமாம். பெரிய நடிகர்களின் ரசிகர்கள் திருட்டு விசிடி காரர்களை அடித்து உதைக்க வேண்டுமாம்..

ரசிகர்களுக்கு வேறு வேலை வெட்டி இல்லை போல.. இதை நடிகருக்கு செய்தால்.. அவர் கோடி கோடியாக பணத்தை வாங்கி கொண்டு சுகமாய் இருந்து கொள்வார்.. ரசிகனுக்கு என்ன கிடைக்கும்... அடுத்தவர் தோளில் சவாரி செய்வதின் உச்சக்கட்டம் தான் ரசிகர்கள், தொண்டர்கள் என்ற பெயரில் அவர்களிடம் இலவசமாய் தங்கள் சுயநலத்தை பேண வேலை வாங்குவது... 


இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு வாய் கிழிய திருட்டு தவறு என்று பேசும் இயக்குனர்கள், நடிகர்கள் ஒரு விஷயத்தை யோசிக்கிறார்களா?

திருட்டு விசிடி தவறு தான்.. ஆனால் அந்நிய மொழி படங்களின் கதை, திரைக்கதை, கான்செப்ட், இசை, காமிரா கோணம், ஸ்டண்ட், நடனம் எல்லாவற்றையும் கூச்சப்படாமல் திருடி படங்களில் உபயோகப்படுத்தும் போது.. உங்கள் மனசாட்சியை ஆணியில் மாட்டி வைத்து விடுவீர்களா? அது திருட்டு இல்லையா? உங்களை என்ன செய்யலாம்? அந்நிய மொழியில் ஒரிஜினல் படத்தை எடுத்தவன் உங்களை ஆள் வைத்து அடிக்கலாமா?

திருட்டு விசிடி என்பது நிச்சயம் ஒரு தவறு தான்.. ஆனால் திருட்டுத்தனமாய் தரமான டீத்தூள் பெயரில் போலி டீத்தூள் செய்வது போல, உணவு பொருட்களில் கலப்படம் செய்வது போல இதுவும் ஒரு வகையான சமூக குற்றம்... பாதிக்கப்படுபவர்கள் சமூகத்தில் பிரபலாமாக இருப்பதால் இதை கொலைக்குற்றம் அளவுக்கு பேசுவது தான் கடுப்பாக உள்ளது...

திருட்டு விசிடி வாங்குபவர்களையும் தண்டிக்க வேண்டும் என்று ஒரு தயாரிப்பாளர் பேசியிருக்கிறார்... ரசிகர்கள் எங்கள் தெய்வங்கள் என்று கொண்டாடும் சினிமாக்காரர்களே கேளுங்கள்... திருட்டு விசிடி வாங்குபவனும் உங்கள் சினிமா ரசிகன் தானய்யா...

என் தந்தைக்கு 4000 ரூபாய் சம்பளம் இருக்கும் போது ஒரு நல்ல தியேட்டரில் சினிமா டிக்கெட் விலை 12 ரூபாய்.. இப்போது அவருக்கு 16000 ரூபாய் சம்பளம் வரும் போது நல்ல தியேட்டரில் டிக்கெட் விலை 120 ரூபாய்.. சம்பளம் 4 மடங்கு ஏறும் போது டிக்கெட் விலை 10 மடங்கு ஏறினால் குடும்பத்தோடு படம் பார்க்க வசதியில்லாத ரசிகன் என்ன செய்வான் என்று யாருமே யோசிப்பதாக இல்லை...

திருட்டு விசிடிக்கு முக்கியமான காரணமாக நான் எண்ணுவது தியேட்டரில் போய் படம் பார்க்க முடியாத கொலைவெறி ரசிகர்கள் அதை ஆதரிப்பதே காரணம்.. ஏழை ரசிகனுக்கு குறைவான டிக்கெட்டில் படம் காண்பித்தால் ஏன் திருட்டு விசிடி வாங்க போகிறான்?

திருட்டு விசிடியை ஒழித்து விடுகிறார்கள் என்றே வைத்து கொள்வோம்...
தியேட்டரில் டிக்கெட் விலையை குறைக்க வில்லை என்றால், பெரிய படங்கள் தவிர மற்ற படங்களை ரசிகர்கள் "உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக" என்று 2 மாதத்தில் TVயில் பார்த்து விடப் போகிறார்கள்... அவ்வளவு தான்..

4 கருத்துகள்:

  1. அடிப்படையை அலசி இருக்கிறார்கள்,உண்மைதான் கைக்கு எட்டுவதை எவரும் திருட போவதில்லை

    பதிலளிநீக்கு
  2. 50- 60 ரூபாய்க்கு ரசிகனால் பெரிய திரையில் படம் பார்க்க முடியுமெனில், அவன் ஏன் திருட்டு விசிடி வாங்க போகிறான்...? புதிய படங்கள் வெளியாகும் நெரத்தில் சென்னையில் செல திரையரங்குகளில் உரிமையாளர்களே டிக்கெட்டுகளை ஆள் வைத்து ப்ளாக்கில் விற்கும் கொடுமையெல்லாம் நடக்கிறது...

    கருத்துக்கு நன்றி இளமுருகன்

    பதிலளிநீக்கு