கூகிள்
குரோமியம் OS பற்றி நண்பர் TVS50 எழுதிய அருமையான பதிவை சமீபத்தில் படிக்க நேர்ந்தது..
அவருக்கு
மறுமொழி அளிக்கலாம் என்று ஆரம்பித்து கருத்துக்கள் நீண்டு விட்டதால் தனிப்பதிவு ஆக்கி
விட்டேன்..
முதலில்
அவர் பதிவுகளுக்கு எனது மனமார்ந்த பாரட்டுக்கள்.. சிறப்பான நடையில் ரொம்பவும் மெனக்கெட்டு
நமக்கு புரியும் படி எழுதுகிறார்...
சிறப்பான
கட்டுரை
நிறைகளை
நண்பர் TVS 50 அழகாக எடுத்து சொல்லி விட்டார்.. வழக்கம் போல நாம் குறைகளை அலசுவோம்...
நிச்சயம் இது கூகிளுக்கு எதிரான
பதிவு அல்ல..
நமது தனிப்பட்ட கருத்துக்கள் அவ்வளவே...
நாம்
சில விஷயங்களை யோசித்தாக வேண்டும்
நம்முடைய
ரகசியமான ஆவணங்களை இது போல இணைய தளத்தில் வைப்பது பாதுகாப்பானதா?
இதில்
கூகிளுடைய வன்பொருள் மற்றும் மென்பொருள் மட்டுமே பயன் படுத்த முடியும்... எல்லா துறையிலும்
சிறந்த மென்பொருளையோ, வன்பொருளையோ கூகிளால் தந்து விட முடியாது என்பது நிதர்சனமான உண்மை...
கூகிள்
ஒரு பன்னாட்டு நிறுவனம்.. நிதிச்சுமை, நெருக்கடி காரணமாக அது செயல்பட முடியாத நிலை
வந்து விட்டால் நம் ஆவணங்களுக்கு என்ன ஆகும்?
இன்று
சில பல சேவைகளை இலவசமாக தரும் கூகிள், நாளை சந்தையில் அசைக்க முடியாத இடத்தை பிடித்து
போட்டியாளர்களை ஒழித்து விட்டால்.. அவர்கள் வைப்பது தான் விலையாக இருக்கும்.. இதற்கு
predatary pricing என்று பெயர்... பெப்ஸி, கொக்கோகோலா நிறூவனங்கள் பல நாடுகளில் காலூன்றுவது
இப்படி தான்…
இந்த
Information Technology யுகத்தில் ஏற்கனவே நம் தனிப்பட்ட விஷயங்களுக்கு பாதுகாப்பில்லை..
அநேகமாக நம்மை பற்றின விவரங்கள் பல கிரெடிட் கார்டு கம்பெனிகளிடமும், பல்நோக்கு நிறுவங்களிடமும்
உள்ளது... இந்த அழகில் நம் ஆவணங்களையும் வலையில் சேமித்தால் அவ்வளவு தான்...
இன்னொரு
விஷயமும் இருக்கிறது.. இணைய இணைப்பு இல்லவிட்டால் கூகிள் குரோமியம் OS-இல் ஆணியே பிடுங்க
முடியாது...
அதே
இந்த இயங்கு தளத்தில் வேகம் உங்கள் இணைய இணைப்பின் வேகத்தை சார்ந்தே இருக்கும் என்றால்
அது மிகையாகாது...
டவுண்லோடு
லிமிட் உள்ள இணைய இணைப்பு உள்ளவர்களுக்கு ஆப்பு தான்.. மளிகை பில்லை இண்டர்நெட் பில்
அன்னபோஸ்ட்டாக தோற்கடித்து விடும்...
இந்தியாவில்
இது நுழைந்து வெற்றிகரமாக செயல்பட இன்னும் 2 -3 வருடமாவது ஆகும் என்ற நிலை ஒரு புறம்
இருக்க, Cloud Computing-இன்னும் வர வேண்டியது நிறைய இருக்கிறது..
உங்க
பாஸ்வேர்டை தொலைச்சுட்டாலோ, எவனாவது உங்க அக்கௌண்டை களவாண்டுட்டாலோ முடிஞ்சது...
இது
போன்ற விஷயங்கள் நீங்கள் பயன்படுத்தப் போகிற ஒவ்வொரு மென்பொருளுக்கும் ஏற்றார் போல
மணிக்கு இவ்வளவு என்று கட்டணம் நிர்ணயித்து வசூலிப்பதில் போய் முடியும்...
பைரேட்டட்
மென்பொருள் உபயோகிக்க முடியாது.. கூகிள் செர்வர் டவுன் என்றால் முடிந்தது...
கூகிள்
வன்பொருளையே நீங்கள் உபயோகிக்க வேண்டியிருகுமானால் அதிலுள்ள வன்தட்டில் ஆவணங்களை பாதுகாக்கும்
வசதியெல்லாம் கொடுக்க மாட்டார்களாய் இருக்கும்...
போதும்
ரொம்ப பயமுறுத்தியாச்சு..
ஆனால்
நிதர்சனமான உண்மை என்னவென்றால் சேவை நோக்கில் எதுவும் யாரும் செயல்படுவதில்லை.. முக்கியமாக,
பன்னாட்டு நிறுவனங்கள்.. ஒரு பொருளை உபயொகிப்பதற்கு முன்பு அது கடனாகட்டும், கடன் அட்டையாகட்டும்,
கேபிள் கனெக்ஷனாகட்டும், வங்கி கணக்காகட்டும் பல முறை சாதக பாதகங்களை யோசித்த பின்னரே
செயல்பட வேண்டும்...
பிரிச்சு மேஞ்சு இருக்கேங்க மாயன். உங்கள் கருத்துகள் பலவற்றுடன் ஒத்து போகிறேன். விரைவில் சில நாட்களில் இந்த பாதக அம்சங்கள் குறித்து என்பார்வையில் ஒரு இடுகை இடுகிறேன்.
பதிலளிநீக்குநன்றி.
குறை கண்டுப்பிடிக்கறது ரொம்ப சுலபம்ல? அதான்.. வருகைக்கு நன்றி TVS50
பதிலளிநீக்குநீங்கள் கூறியவற்றில் சில டவுட்தான் எனக்கு வந்தது. பாதகங்களை விரிவாக அலசியுள்ளீர்கள்.
பதிலளிநீக்கு