உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வித்தியாசமான பொழுதுப் போக்குகள்


வாழ்க்கை சுவாரசியமாக இருக்க வேண்டுமென்றால் நம் எல்லோருக்கும் ஒரு பொழுது போக்கு கண்டிப்பாக தேவைப்படும்...


ஓவியம் வரைதல் (அப்படி தான் சொல்லிகணும்.. பையனுக்கோ பொண்ணுக்கோ ஸ்கூல்ல ஏதோ வரைய சொன்னாங்கன்னு ஏதாவது வரைஞ்சு கொடுத்துட்டு, அடுத்த முறை பேரண்ட்ஸ் டேக்கு முக்காடு போட்டுட்டு போற அளவுக்கு மோசமா இல்லைன்னாலும் ஏதோ ஓவியன்னு எல்லாரும் ஒத்துக்கற அளவுக்கு வரையறது),


புத்தகம் படித்தல் (நெறைய பேருக்கு தூங்கறதுக்கு இது தான் முக்கிய தூண்டுகோல். புத்தக விழாவுக்கு போயிட்டு வந்த கொலைவெறி, பின் நவீனத்துவ பதிவருங்க ரெக்கமண்ட் பண்ணின புத்தகத்தை படிச்சுட்டே தூங்கினா ஸ்பெஷல் எஃபக்ட் உண்டாம்... கனவே வர்றதில்லையாம்.. நைட்டு அதையெல்லாம் சும்மா மேலோட்டமா படிச்சுட்டு படுத்த ரெண்டு மூணு பேரு காலைல எந்திரிக்கவேயில்லைன்னு கூட கேள்விப்பட்டேன்… கம்ப ராமாயணத்தை பரம்பரை பரம்பரையா படிச்சு, இன்னும் முடிக்காத ஒரு குடும்பத்தை எனக்கு தெரியும்),


இளிச்சவாயன்னு யாராவது சொன்னாலும் சிரித்து கொண்டே இருப்பேன் என்று வெறித்தனமாக விடியற்காலை வரை விழித்திருந்து, அரைத்த மாவையே அரைக்கும் நகைச்சுவை சேனல்களை விடாமல் மாற்றி மாற்றி பார்த்தல்,


வாயும் நாக்கும் சுளுக்கும் அளவுக்கு பின், முன், சைடு நவீனத்துவங்களை நண்பர்கள் வேண்டாம், வேண்டாம் என்று கதற கதற கேட்காமல் விவாதித்தல்,


எவ்ளோ மொக்கை படமானாலும் முண்டியடித்து மொத நாள் பாத்துட்டு, ங்கொய்யாலே படமா எடுத்துருக்கான், டைரக்டர் மட்டும் என் கைல கெடச்சான் அவ்ளோ தான் என்று படம் பார்க்காத அப்பாவி நண்பர்களிடம் அகிரா குரோசவா வாரிசு போல உறுமுதல்,


சும்மா போகிறவர்களை ஆஃப் ஒன்றை வாங்கி வைத்து ஆசைக்காட்டி, குடிக்க வைத்து, தனக்கிருந்த ஒரே காதலையும், அது பெய்லியரான பீலிங்க்ஸையும் அவர் டர்ராகி வாந்தி எடுத்து வந்த வழி ஓடும் வரை புலம்பி தீர்த்தல்,


ராங் ரூட்டில் சென்ற படி லேன் மாறி போறான் கம்முனாட்டி, இவனுங்களால தான் ஆக்ஸிடெண்ட் ஜாஸ்தியாயிடுச்சு என்று ரூல்ஸ் ராமானுஜம் போல் அங்கலாய்த்தல்,


இப்படி நமக்கு பல ரெகுரலான ஹாபி, அதான் பொழுது போக்கு உண்டு என்றாலும்...


வெளிநாடுகளில், பொழுது போக்குகள் வித்தியாசமாய் இருக்கின்றன.. நம் நாட்டிலும் கூட பல நல்ல பொழுது போக்குகளில் ஈடுபடும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று இணையத்தில் மேயும் போது தெரிகிறது…


சும்மாச்சுக்கும் வித்தியாசமான சிலவற்றை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்..


Cloud watching


மேகத்தை பார்த்தல்... என்ன ஒரு ஹாபிடா சாமி....


நம்ம ஊர்லயும் கூட இவங்க இருக்காங்க..அண்ணாந்து வானத்தை பார்த்துட்டே இருப்பாங்க.. அமாவாசை பௌர்னமி அன்னைக்கு அவங்க கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்னு கூட சொல்வாங்க...


Garage Sale Shopping


ஒண்ணுமில்ல அங்கங்க அவங்க வீட்டுல இருக்கிற பழசு பட்டையெல்லாம் கார் கேரேஜுல போட்டு விப்பாங்க.. அதையெல்லாம் தேடிப் பிடிச்சு வாங்கறது ஒரு ஹாபியாம்...


நம்மூர்ல இது தொழில்ங்க..."பழைய இரும்பு சாமான் ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம்"...

People Watching 

 

மக்களை பார்த்தல்.. இது ஒரு ஹாபி.. நாம காலேஜுல படிக்கும் போது பார்க்காத மக்களா... பார்த்தது இல்லாம, விசில் அடிக்கறது, கைத்தட்டி கூப்படறது, பின்னால போறதுன்னு எல்லாம் ஹாபிக்கே எக்ஸ்ட்ரா வெயிட் கொடுத்தவங்க நாங்க அப்படிங்கறீங்களா... அதுவும் சரி தான்...


ஆனா இவங்க என்ன சொல்லாங்கன்னா.. நல்லா வசதியா ஒரு எடத்துல உக்காந்துக்கிட்டு போறவங்க வர்றவங்க எல்லாரையும் பார்க்கணுமாம், அது மட்டுமில்லாம அக்கம் பக்கத்துல உக்காந்து இருக்கிறவங்க என்ன பேசுறாங்கன்னு கேக்கணுமாம்..(தூ இது ஒரு பொழப்பான்னு எல்லாம் கேட்க கூடாது)

 

Wine Making

சாராயம் காய்ச்சறதுன்னு அர்த்தம் வந்தாலும் இது அது இல்லை.. உடனே பானை, ட்யூப், போலீஸ், மாமூல் அப்படினெல்லாம் கற்பனை பண்ணக்கூடாது... ( போலீஸ், மாமூல் ரெண்டும் எப்பயும் ஒண்ணா தான் எழுதத் தோணுது.. ஒரு வேளை ரெட்டை கிளவியா இருக்குமோ.. எதுக்கும் வைரமுத்து கிட்டயோ, வாலி கிட்டயோ கேட்போம்)

வீட்டுலயே திராட்சை பழத்தையோ இல்லை எந்த கருமத்தை வெச்சோ... வைன் தயாரிக்கிறது ஹாபி... காக்டெயில் பண்றதும் ஒரு ஹாபி தான்..( பல வகை மது பானங்களை ஒண்ணா கலந்து குடிச்சு வாந்தியெடுக்கிறதுக்கு பேரு தான் காக்டெயில்)

 

Ghost Hunting


என்ன கொடுமை சார் இது... பேயை புடிக்கறது ஒரு ஹாபியா... (ஒரு வேளை கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கிறதை சூசகமா சொல்றாங்களோன்னு கேட்டது யாரு... யாராவது பெண்ணுரிமை வாதிகள் வந்து என் பதிவுல கும்மியடிச்சுட்டு போறதுக்கா?)

 என்னத்தை சொல்ல.. மூட நம்பிக்கைனாலும் அதுலயும் நம்மளை விட அட்வான்ஸா தான் போயிட்டிருக்கானுங்க...

 animal communication

 

விலங்குகளிடம் பேசுதல்... (பேசறது என்னயா.. பாட்டு பாடி பசுமாடு கிட்ட எங்காளு பாலே கறந்து காமிச்சுட்டாரு, காளையை அடக்கி காமிச்சுட்டாரு.. என்று இடையில் சத்தம் போடும் அந்த ராமராஜன் ரசிகரை(?!) கொஞ்சம் சும்மா இருக்க சொல்லுங்கய்யா)

 

இந்த காக்கா பாஷை, குருவி பாஷை, குதிரை பாஷை இதெல்லாம் கத்துக்கிறது.. (திருவள்ளுவருக்கு தமிழ் கத்து கொடுத்ததே காக்கா சித்தர் தான்யா.. இனான்ய பாஷை தெரிஞ்ச யாகவா முனிவர் வாழ்ந்த பூமிய்யா இது அப்படின்னெல்லாம் அரசியல் வாதி ரேஞ்சுக்கு அளப்பறையெல்லாம் பண்ண கூடாது)

 

stars watching

 

நட்சத்திரத்தை பார்த்தல்...

(ஒவ்வொரு வருஷமும் மத்திய அரசு பட்ஜெட் போட்டாலும் சரி, மாநில அரசு பட்ஜெட் போட்டாலும் சரி மகனே எங்களுக்கு நட்சத்திரம் தான் தெரியுது... இப்போ லேட்டஸ்டா மின் கட்டண உயர்வுன்னு சொன்னாங்களே அப்போ கூட தெரிஞ்சதே... என்று பீதியில் உறையும் மக்களே... இது அந்த நட்சத்திரம் இல்லை.. வானத்துல ராத்திரில தெரியுமே அந்த நட்சத்திரம்...)

(சினிமா நட்சத்திரம் பாக்கிறதும் ஹாபி தாங்க.. ஆனா இது அது இல்லை... )

 

கடைசியாக


cooking zany food

காமெடியான வகையில் உணவு தயாரித்தல்...

(கொய்யாலே மத்தியான டைம்ல மெகா சீரியல் எழவ என்னைக்கு கொட்ட ஆரம்பிச்சானுங்களோ அன்னைல இருந்து எங்க வீட்டு பொம்பளைங்க இப்படி தாங்க சமைக்கிறாங்க... என்று கண்ணீர் விடும் கணவன்மார்களுக்கு இந்த ஹாபி சமர்ப்பணம்)

என்னைக்காவது ஒருநாள் செமயா சமைச்சு பொண்டாட்டிய அசத்திடலாம்னு நெனைச்சு நாம சமையல்ல இறங்குவோம்ல அன்னைக்கு இந்த ஹாபிய நாம் செயல் வடிவத்துக்கு கொண்டு வந்துட்டதா அர்த்தம்...

இவ்வளவு நேரம் பொழுது போகாம எல்லாத்தையும் பொறுமையா படிச்சுட்டு, நமக்கு பொழுதே இல்லை எங்கே போக்கறது என்று அலுத்து கொள்ளும் மகா ஜனங்களுக்கு இந்த பதிவே சமர்ப்பணம்…..

இதையும் போய் பாருங்க...

http://www.buzzle.com/

http://www.notsoboringlife.com/

http://www.hobbyideas.net/


3 மறுமொழிகள்:

Punnakku Moottai சொன்னது…

நல்லாத்தான் இருக்கு படிக்க.

maduraikaran சொன்னது…

நல்லாத்தான் இருக்கு, ஆனா இதெல்லாம் நாம ஏற்கனவே பண்றது தானே!!

இளமுருகன் சொன்னது…

ஹா...ஹா...நல்ல நக்கல்ஸ்

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..