உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

ஞாயிறு, ஜனவரி 31, 2010

ஆயிரத்தில் ஒருவன் - நானும் கொஞ்சம் திட்டிக்கறேன்

குறை சொல்வது மட்டும் தான் இந்த பதிவின் நோக்கம்...

ஆங்கிலத்தில் எப்படி எடுத்தாலும் பார்க்கிறீங்க... தமிழ்ல எடுத்தா ஏன் லாஜிக் பார்க்கறீங்க என்று புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பவர்களுக்கு...

ஆங்கில படத்துல எதை காமிச்சாலும் ஒத்துகறாங்கன்னு சொல்லாதீங்க... அவன் லாஜிக்கலா நம்பற மாதிரி காமிக்கறான்..
லாஜிக்கலா காட்சியமைப்பு வைக்கிறதுக்கும் தொழில்நுட்பத்துக்கும் சம்மந்தம் இல்லை...காதுல எவ்ளோ பூ சுத்துற விஷயத்தை கூட வாயில பேசியே லாஜிக்கலா நம்பற மாதிரி எடுக்கலாம்.. "A man from Earth" படம் பாருங்க...

உங்களுக்கே புரியும்
 ஆயிரத்தில் ஒருவன் படத்தை பொருத்தவரை கதைக்களம் அற்புதம்...

அற்புதமான செட்கள், நல்ல ஒப்பனை, சிறந்த ஒளிப்பதிவு...

தமிழ்ப்படத்துக்கான குறைந்த பட்ஜெட்டுக்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் செய்து காட்டியுள்ளார் செல்வராகவன்...

வாழ்த்துக்கள் அதற்கு மட்டும் தான்...

குறைகளும், கேள்விகளும் தான் நிறைய...
பாண்டியர்-சோழர்களுக்கான Vengeance சரியாக சொல்லப்படவில்லை... வரலாறு பாடத்தில் வீக்காக இருப்பவர்களுக்கு சரியாக புரியாமல் போகும் அபாயம் இருக்கிறது...


அந்த மாதிரி ஒரு இடத்தில் செட்டில் ஆகும் சோழன் கையை காலை வைத்துக் கொண்டு 800 ஆண்டுகள் சும்மா இருப்பான் என்றா நினைக்கிறீர்கள்? அக்கம் பக்கத்தில் உள்ள நாடுகளை எல்லாம் கொஞ்ச நாளில் பிடிப்பது மட்டுமல்ல... 10-20 வருடங்களில் பெரும் படையை திரட்டி மறுபடி தமிழகத்துக்கு கலத்தில் வந்து பாண்டியர்களின் தலைகளை கதிரறுத்து இருப்பான்...

இது சோழனுக்கு மட்டுமல்ல அனைத்து தென்னிந்திய அரசர்களுக்கும் பொருந்தும்.. நரசிம்ம பல்லவன், பராந்தக சோழன், பாண்டியன் மாறவர்மன், விக்கிரமாதித்ய சாளுக்கியன், கரிகால சோழன் இப்படி சொல்லி கொண்டே போகலாம்...

அதுவும் கடாரம், ஸ்ரீ விஜயம் எல்லாம் சோழனுக்கு தண்ணிப்பட்ட பாடு... Sea Expedition-ல் 200 வருடம் கொடிக்கட்டி பறந்தவர்கள் சோழர்கள்...
சோழர்கள் பாண்டியர்கள் என்று சொல்லாமல், வேறு ஏதோ கற்பனையான இரண்டு விரோத இனங்கள் என்று கதையை அமைத்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.. சோழனையும், அவர் வீரத்தையும் பற்றி நிறைய படித்து விட்டு... சோழன் ஒளிந்து கொண்டிருப்பான், மறைந்து வாழ்ந்து கொண்டிருப்பான் என்றால்.. மனது கேட்க மாட்டேன் என்கிறது...

உச்சக்கட்ட காட்சியில் சோழர்களை எதிர்க்கும் பாண்டியர்கள், பாண்டியர்களின் பழைய கால உடையோடு கையில் கேடயம், வாளோடு தோன்றுவது செம காமெடி.. அவர்கள் தான் சோழர்களை உயிரோடு எதிர்பார்த்திருக்க வில்லையே.. அப்புறம் அந்த உடைகளை எப்படி தயாராக வைத்திருந்தார்களோ?

சோழர்கள் ஆட்சி காலத்தில் எங்கேயும் அந்த கிளாடியேட்டர் மைதானத்தில் நடப்பது மாதிரி சண்டையெல்லாம் நடந்ததாக படித்ததாகவோ கேட்டதாகவோ நினைவில்லை... சுவாரசியத்துக்காக சேர்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்...

இவை ஒரு புறம் இருக்கட்டும்..
இந்திய ராணுவம் ஹெலிகாப்டரில் ஆட்களையும் ஆயுதங்களையும் ரீமா சென் குழுவிற்கு சப்ளை செய்யும் வரை வியட்நாமிய அரசும் சீன அரசும் பல் குத்தி கொண்டிருக்குமா?..

சரி இது Stealth ஆப்பரேஷன் ரகசியமாக செய்யபடுகிறது என்று வைத்துக் கொண்டாலும், ஹெலிகாப்டரில் சுளுவாக போக முடிகிற இடத்துக்கு எதுக்குய்யா கப்பல்ல போய், கொலைகார பயபுள்ளை மீன்கிட்ட மாட்டி, காட்டுவாசிகிட்ட மாட்டி, காட்டு வீரர்கள் கிட்ட கத்தியில வெட்டு வாங்கி.... தியேட்டர்லயே சிப்பு வந்துடுச்சு.. சிப்பு..

மறுபடியும் சொல்றேன்.. இங்கிலீஷ் படத்துல எதை காமிச்சாலும் ஒத்துகறாங்கன்னு சொல்லாதீங்க... அவன் லாஜிக்கலா நம்பற மாதிரி காமிக்கறான்.. இந்த லொகேஷனோட அட்ச-தீர்த்த ரேகையெல்லாம் தெரிஞ்சா தான் ஹெலிகாப்டர்லவர முடியும்… அதனால தான் முதல்லயே ஹெலிகாப்டர்ல வராம கப்பல்ல வந்தோம்னு ஒரு டயலாகாவது வெச்சிருந்தா டைரக்டர் புத்திசாலி...

குகைக்குள் பசியால் வாடும் மக்களாம்.. ஒரு பெரிய நகரம் வெளியே இருந்து இருக்கிறது... தங்கப் பாத்திரங்களாக இறைந்து கிடக்கும் அந்த ஊரில், வியாபாரம் செய்து மக்களின் பசியாற்றும் வியாபார வித்தை கூடவா சோழனுக்கு தெரியாது? பாண்டியனுக்கு பயந்து வளைக்குள் எலி போல் சோழன் 800 ஆண்டுகள் ஒளிந்திருப்பான் என்று நம்ப முடியவில்லை...

சோழர்களின் பொறிகள் என்றவுடன் ஏதோ விஞ்ஞானம், அறிவியல் ரீதியான புத்திசாலித்தனமான பொறிகளை காண்பிக்கப் போகிறார்கள் என்று பார்த்தால்... ஏமாற்றம்… ராமநாராயணன் படம் பார்த்தது போல் இருக்கிறது...

அநாவசியமாக எப்போதோ தமிழ்ப்பாடத்தில் படித்த கொல்லிமலை பாவையெல்லாம் நினைவுக்கு வந்து தொலைத்தது...

ரீமா முதுகில் புலி சின்னத்தை கிராஃபிக்ஸில் காட்டும் இடம்.. நடராஜர் நிழலில் மட்டும் பூமி பிளக்காத இடம்.. கடைசிக் காட்சியில் பிரடேட்டர் போல கார்த்தி மறையும் காட்சி... ராஜகுரு சம்மந்தப்பட்ட காட்சிகள்… எல்லாம் மூடநம்பிக்கைகளை ஆதரிப்பவைகளாக இருக்கிறது..

தெய்வாம்சம் பொருந்தியவர்கள், மாந்தரீகத்தில் சிறந்த சோழர்கள்.. அதை வைத்தே அத்துணை ராணுவ வீரர்களையும் பைத்தியமாக்கியிருக்க கூடாதா?... அவர்களுடன் அநாவசியமாக சண்டை போட்டு ஏன் மடிய வேண்டும்..

இதை Fantasy அட்வென்சர் படமா எடுக்கிறதா, இல்லை Real அட்வென்சர் படமா எடுக்கறதா அப்படின்னு செல்வராகவனுக்கு கடைசி வரை குழப்பமாவே இருந்திருக்கும்னு தோணுது...

கார்த்தியின் மொழியும், அவரின் நடவடிக்கைகளும் தான் ஒரிஜினல் செல்வராகவனின் டச்….

செல்வராகவன்... உங்க களம் நெத்திப் பொட்டுல அறைஞ்ச மாதிரி உணர்வுகளை சொல்ற கதைகள் தான்.. திரும்பி வந்துடுங்க...

பசிக்கொடுமை, அதிகார வர்க்கத்தின் சித்திரவதைகள், நல்லது நடக்கும், தாய் நாட்டிலிருந்து நல்ல செய்தி வரும் என்று காத்திருக்கும் பரிதாபமான மக்கள், கையறு நிலையிலுள்ள அவர்களின் தலைவன், அவர்களின் மொழி, அவர்களை பழி வாங்க துடிக்கும் ஒரு பாதிக்கப்பட்ட பெண் எல்லாரும் சந்தேகப்படறது போல எனக்கும் என்னவோ சொல்ல வர்றீங்கன்னு தான் தோணுது செல்வா... அது தான் உங்க மறைமுகமான எண்ணம்னா வெறும் வாயால சவடால் விடறவங்களுக்கு நடுவுல அதை வெளிச்சம் போட்டு காட்டுற உங்க உணர்வுக்கு நான் தலை வணங்கறேன்...

3 கருத்துகள்:

  1. பாராட்ட வேண்டியதை சரியாக பாராட்டி,திட்ட வேண்டியதை சுட்டிகாட்டி''செல்வராகவன்... உங்க களம் நெத்திப் பொட்டுல அறைஞ்ச மாதிரி உணர்வுகளை சொல்ற கதைகள் தான்.. திரும்பி வந்துடுங்க...''என்று கூறி நேர்மையாய் விமர்சித்திருக்கிறீர்கள்.
    அன்புடன்...
    இளமுருகன்
    நைஜீரியா.

    பதிலளிநீக்கு
  2. Good review. I agree with most of your comments.

    பதிலளிநீக்கு
  3. பசிக்கொடுமை, அதிகார வர்க்கத்தின் சித்திரவதைகள், நல்லது நடக்கும், தாய் நாட்டிலிருந்து நல்ல செய்தி வரும் என்று காத்திருக்கும் பரிதாபமான மக்கள், கையறு நிலையிலுள்ள அவர்களின் தலைவன், அவர்களின் மொழி, அவர்களை பழி வாங்க துடிக்கும் ஒரு பாதிக்கப்பட்ட பெண் எல்லாரும் சந்தேகப்படறது போல எனக்கும் என்னவோ சொல்ல வர்றீங்கன்னு தான் தோணுது செல்வா... அது தான் உங்க மறைமுகமான எண்ணம்னா வெறும் வாயால சவடால் விடறவங்களுக்கு நடுவுல அதை வெளிச்சம் போட்டு காட்டுற உங்க உணர்வுக்கு நான் தலை வணங்கறேன்...
    I appreciate this part.Thanks.

    பதிலளிநீக்கு