ஷாருக்கான் தன்னுடைய மை நேம் ஈஸ் கான் படத்தில், இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை செப்-11 சம்பவத்திற்கு பிறகு எப்படி மாறியது என்பதை அவர் படத்தில் பேசியுள்ளார்...
ஷாருக் அந்த படத்தில் இஸ்லாமியர்களை பற்றியும், அவர்களின் பிரச்சினைகளைப் பற்றி மட்டும் கவலைப் படுவதாகவும், இஸ்லாமிய தீவிரவாதத்தை கண்டிக்க வில்லை என்றும், ஒரு "டிபன்" பதிவில் விமரிசனம் எழுதப்பட்டுள்ளது…
அது மட்டுமல்ல தான் சார்ந்துள்ள இஸ்லாமிய மதத்துக்கு ஆதரவாக படம் எடுத்து காசாக்க முயன்றுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது…
படம் முழுக்க இஸ்லாமியர்கள் மட்டுமேபாதிக்கப்பட்டது போலவும் தீவிரவாதத்தால் உயிரிழந்தவர்கள் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவே இல்லை என்றும் விமரிசனம் செய்துள்ளனர்…
முதல் விஷயம்..
இது செப்-11 சம்பவத்திற்க்கும் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கும் கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத மக்கள் எப்படி பாதிக்கப்படார்கள் எனச் சொல்வதை கருவாக கொண்ட படம்.
அந்த கருக் கொண்ட கதையில் அவர் சொல்ல வந்ததை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார். அநாவசிமாக தீவிரவாதத்தையும் தீவிரவாதிகளையும் கண்டிக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்று புரியவில்லை...
இரண்டாவது தங்களுக்கு சற்றும் சம்மந்தமில்லாத அந்த சம்பவத்தால் இயல்பான வாழ்க்கையை இழந்த இஸ்லாமிய மக்களுக்கு தான் அந்த வலியும் வேதனையும் தெரியும்.. சற்றும் சம்மந்தமில்லாத ஒரு குண்டு வெடிப்பு, இரட்டை கோபுரம் தகர்ப்பு என்ற அந்த தீவிரவாதத்தால் இறந்தவர்களைப் போல அவர்களும் தானே பாதிக்க பட்டுள்ளனர். அதைப் பேச அவர்களுக்கு உரிமை இல்லையா?
இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எல்லா இஸ்லாமிய மக்களும் பொறுப்பு என்ற ரீதியில் கேவலாமான ஒரு அவதானிப்பு செய்யப்பட்டுள்ளது...
இறந்தவர்களில் இஸ்லாமியர்களும் இருந்திருப்பார்களே... அவர்களுக்கு இழப்பு இல்லையா? இரட்டை கோபுரத்தை தகர்த்த தீவிரவாதி அது என்ன கிறுத்துவர்களின் சர்ச் என்றா தகர்த்தான்? உள்ளே இஸ்லாமியர்கள் இருக்கக் கூடும் என்று அவனுக்கு தெரியாதா?
தீவிரவாதம் என்பது பயங்கரமானது. எந்த மதத்தின் தீவிரவாதமானாலும் அது பயப்பட வேண்டியது தான்...தீட்டிய மரத்தை கூர் பார்ப்பது போல பாகிஸ்தானில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களை யோசித்து பாருங்கள் புரியும்.
இதயம் படம் வந்த புதிதில் இயக்குநர் கதிரிடம் ஒரு கேள்வி கேட்டார்கள்.. படம் முழுக்க உங்கள் கதாநாயகன் காதல் காதல் என்றே சுற்றுவதாக வருகிறதே.. அவன் படிப்பது போல கொஞ்சமாவது காட்டக் கூடாதா என்று...
கதிர் சொன்னார்.. நான் நல்ல மாணவனை பற்றி படம் எடுக்கவில்லை.. நல்ல காதலனைப் பற்றி படம் எடுத்து இருக்கிறேன் என்று..
அதுப் போல தீவிரவாதத்தால் பாதிக்கப் பட்ட அப்பாவி இஸ்லாமியர்களின் குரலை ஒலிக்கும் படத்தில் தீவிரவாதத்தை கண்டிக்க வேண்டும் எதிர் பார்ப்பது, ஷாருக் இந்த வலியை, அப்பாவிகளின் குரலை படமாக எடுத்ததால் அவரை இஸ்லாமிய தீவிரவாதத்தை கண்டிக்காதவர் போல பேசுவது இந்துத்துவா காவாலித்தனம்.
இதே ஷாருக் தான் ஹே ராம் படத்தில் காந்தி மீது பற்று கொண்ட இஸ்லாமியராக நடித்தார் என்பது ஏன் பதிவு எழுதியவர்களுக்கு நினைவில்லை என்பது புரியவில்லை…
ஷாருக் விமான நிலையத்தில் அவமானப்பட்டார் என்பதால் இதைக் கண்டிக்கிறார் இல்லையென்றால் கண்டுக்கொள்ளாமல் விட்டிருப்பார்.. என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்.. விதண்டா வாதம் பேசுபவர்களிடம் எதையும் சொல்லி புரிய வைக்க முடியாது...
இந்து தீவிரவாதாம் வடக்கே தலை தூக்கி நிற்பதால் இந்துக்கள் எல்லாரையும் மத வெறியர்கள் என்று முத்திரைக் குத்துவதை போல உள்ளது இந்த பதிவின் நோக்கம்...