உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

காதலர் தினம் - தோழியான காதலிக்கு சில வரிகள்

விழிகள்

காதல் போராட்டம்.
அவள் 
மட்டும்
ஆயுதங்களுடன்....


உணர்விலிருந்து
உதிர்ந்து விடுவாய்
என பார்த்தால்
உணர்விலேயே
உதிர்கிறாயே !

காதல் கவிதைகள்
எனை எழுதிக்கொண்டிருக்கும்
கவிதைக்கு
நான்
எழுதுவது.
நான்
உனை
நேசிக்கிறேன் என்பது தெரியும்.
ஆனால்
ஏன் உனை மட்டும்
நேசிக்கிறேன் என்பது புரியவில்லை.


ஆறுதல்
மட்டுமல்ல....
அழுகை கூட
அவள் அண்மையில் தான்
கிடைக்கிறது.


தோழமை
துன்பத்தை மட்டும் அதன்
தூரிகைகள் வரைந்தாலும்....

இன்பத்தின் கோடுகளை
இம்மியளவு கூட
இழுக்காமல் போனாலும்....

அந்த உறவு
அழகாய் தான்
இருக்கும்.


அன்பு
அழகான ஓவியமாய்
அமைந்தால்
அது
அவளைப் போல்
தான்
இருக்கும்.


அவள்
என்னை விரும்பி
கொண்டேயிருப்பாள்....
நானே
என்னை
வெறுக்கின்றபோதும்.....அன்போடு நீ
ஆகாயத்தில் எறிந்தாலும்
மிதந்து இருப்பேன்.- ஆனால்
கோபத்தோடு சிறு
பூவை நீ எறிந்தால் கூட
நான்
பூமிக்குள் போய்விடுவேன்


என் கனவில்
நீ வர தவறுவதில்லை!....
எனக்கு தூக்கம்
வரவே தவறினாலும்....


அதுயெப்படி
உன் புன்னகை பூ
மட்டும் - நீ
உதிர்த்த பின்னும்
பூத்து நிற்கிறது?

எஞ்சி
இருக்கும்
எல்லாவற்றையும்
எனக்கு தந்த பின்னும் - அவளிடம்
ஏதோ
இருக்கும்.உன்
அளவுக்கு
என்னால் கூட
என்னை
நேசிக்க முடியாது...


நம்பினாயா நான் கூறியதை
எனக்கு குழந்தை மனம் என்று....
ஏங்குகிறது பார் உன் மடியில் படுத்துறங்க...(என்னையும் மதித்து கொலைவெறியோடு நேசிக்கும் என் மனைவிக்கு நான் எழுதிய சில வரிகள்...)

0 மறுமொழிகள்:

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..