உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

காதலர் தினம் - மறுக்கப் பட்ட காதலுக்கு சில வரிகள்
காதலர் தினம் - மறுக்கப் பட்ட காதலுக்கு சில வரிகள்

நான்
எனக்குள் இருக்கும்
அவளுக்காக அழவில்லை.
அவளுள் இருக்கும்
எனக்காக.

****************************************

அவள் விழியின்
அகலாத ஈரம்
கொஞ்சமாய் என் கண்ணில்
அவள் இதழின்
அழகான புன்னகை
கொஞ்சமாய் என் இதழில்
அவள் மனதின்
மறைக்காத தன்மை
கொஞ்சமாய் என் மனதில்
அவள் மறுத்த
காதல் மட்டும்
மொத்தமாய் என்னுள்.

****************************************

நீண்ட
கோட்டினால் போட்ட
ஒரு வட்டம்.
வட்டத்தை நிரப்பும்
வெறுமை தான்
உன் நினைவு.
ஆனாலும்
அதன் பாரம்
அதிகமாகவே இருக்கிறது.

*****************************************


காதல் என்பது
ஒரு உணர்வு.
அதை விவரிக்க
வார்த்தைகளுக்கு
வயது போதாது..

*****************************************

காதலன்
மலரிடம்
இரைத் தேடி தான்
போனோம்! - கடைசியில்
அம்மலருக்கே
இரையானோம் !
கரை தேடி
அலையாய் வந்தோம்!- ஏனோ
கரைக்குள்ளே
புதைந்து போனோம் !

*****************************************

என்
வாழ்க்கை ஏட்டின்
இளமை பக்க்த்தில்
இருக்கிறது இன்னும்.
கருப்பாக
கண்ணே - நான்
உன்னை செய்த
காதல் கறை.
இனி,
எப்போது நான்
என் வாழ்க்கையின்
கடந்த
காலத்தை
புரட்டினாலும்
என் மேல்
கறை பட்டு
கொண்டே இருக்கும்.
படும்
ஒவ்வொரு முறையும் - அதை
கழுவ அப்போதும்
கண்ணீர் தான்
கேட்கும் உன் காதல்.

3 மறுமொழிகள்:

அகல்விளக்கு சொன்னது…

அழகான வெளிப்பாடு.....

வாழ்த்துக்கள் நண்பரே...

மாயன் சொன்னது…

திருவிளையாடல் தருமி- "கொஞ்சம் வசன நடையா எழுதறேன்.. இருந்தாலும் புலவன்னு ஒத்துக்கிட்டிருக்காங்க..."

நன்றி அகல்விளக்கு...

anbu சொன்னது…

super

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..