உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

காதலர் தினம் - மறுக்கப் பட்ட காதலுக்கு சில வரிகள் - 2வாழ்க்கையில்
விழும்
இடைவெளி தான்
காதல்.

இடைவெளியில்
விழுந்து விட்டால்
வாழ்க்கை
திரும்ப கிடைக்காது.

இடைவெளியை
இழந்து விட்டால்
வாழ்க்கை
எளிதாய் இருக்காது.
-------------------------------------------------------
மற்றவைகள்
உயிருக்கு
உரைக்கும்
உணர்வுகளாய் உதிக்கும் போது,

காதல்
உயிரே
உரைக்கும்
உணர்வாய் வந்து விழுகிறது.

மற்றவைகள்
நினைவுகளிலே
நித்தியமாகும் போது,

நினைவுகளே
நித்தியமாகும்
இடமாய் இருப்பது காதல் தான்.
-----------------------------------------------

காதலை நான்
விளையாட்டாக தான்
ஆரம்பித்தேன்- கடைசியில்
என் வாழ்க்கையே அதன்
களமாக
மாறிவிட்டது.

காதலை நான்
விரட்ட தான் துரத்தினேன்.
இறுதியில் அதன்
பின்னாலேயே
ஓடும் படி ஆகிவிட்டது.

காதலை நான்
சுவைக்க தான் நினைத்தேன்.
அது தான் என்னை
சுவைத்து கொண்டிருக்கிறது.

காதலை நான் தான்
எழுத நினைத்தேன் - இன்று
அது தான் என்னை
எழுதிக் கொண்டிருக்கிறது.
----------------------------------------------
நீ
அங்கு இல்லை -
என்ற பதிலை விட

எங்கு இருக்கிறாய் -
என்ற கேள்வி தான்
என்னை எரிக்கிறது.

நீ
எங்கு இருக்கிறாய் -
என்ற கேள்வியை விடவும்

இங்கு இல்லை -
என்ற பதில் தான்
என்னை கிழிக்கிறது.

----------------------------------------------

காதல்
என்பது ஒரு
கருப்பு அறிவியல்.

உன் செய்முறையும், சமன்பாடும்
ஜெயிக்கும் போது,
உனக்கது புரிவதில்லை.

சமன்பாடு சரிவராத
போது தான்
செய்முறை சரியும்
போது தான்
உனக்கது புரிய துவங்கும்.

----------------------------------------------

நீ

இருக்க மாட்டாய் என்று

அறிந்தும் தேடுகின்றேன்.

நீ

இருப்பாய் என்பது

அறிந்தும் தேட மறுக்கின்றேன்.

---------------------------------------------

2 மறுமொழிகள்:

RajaSekar சொன்னது…

Superb....

மாயன் சொன்னது…

Thank you for the appreciations sir

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..