உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

PKP-யின் பயனுள்ள பதிவுகள்...

PKP

இவருடைய பதிவுகளுக்கு அறிமுகம் தேவை இருக்காது என்றே நினைக்கிறேன்.. என்றாலும் புதியவர்களின் வசதிக்காக இந்த பதிவு...

www.pkp.blogspot.com

என்ற blog முகவரியில் இயங்கி வரும் நண்பர் PKP-யின் பிலாகைப் பற்றி எனக்கே 2 வாரம் முன்பு தான் தெரிய வந்தது...

மிக எளிய மொழி நடையில், அருமையான உதாரணங்களோடு பல புதிய தொழில்நுட்பங்களைப் பற்றியும், புதிய கணினி விஷயங்களையும் அருமையாக விளக்குகிறார்...

4 வருடங்களாக இவர் பதிவிட்டு வருகிறார்... 2004-ம் வருடம் 71 பதிவுகள் ஆரம்பித்து 2006-ல் 207, 2007-ல் 224 எனப் பதிவுகளாக எழுதிக் குவித்து இருக்கிறார்... இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பெரும்பான்மையான பதிவுகள் நமக்கு புதிய விஷயங்களை அறிமுகப் படுத்தும் விதமாகவும், நமக்கு உதவிகரமான கணினி டிப்ஸ் பதிவுகளாக இருப்பதும் தான்....

கணினி அறிமுகம் அதிகம் இல்லாதவர்களுக்கும் புரியும் விதமாக சுவாரஸ்மான தகவல்களை தருவது அருமை... இதில் இன்னும் சிறப்பு நிறைய தமிழ் மின்னூல்களும் தேடிப் பிடித்து பதிவிறக்கம் செய்ய தோதாக இணைப்புகள் கொடுக்கிறார்....

இன்னும் முடிந்து விடவில்லை... பயனாளர்களின் டெக்னிக்கல் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காகவே ஒரு FஓறூM ஒன்றையும் நடத்தி வருகிறார்...(இதை நான் இன்னும் பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை).. http://wiki.pkp.in/forum:start


பொதுவாக நான் வாரம் ஒரு பதிவரை தேர்ந்தெடுத்து கூகிள் ரீடரில் இணைத்து படிக்க ஆரம்பிப்பேன்... PKP அவர்களின் இடுகைகளை 2 வாரமாக படித்து வருகிறேன்... நிறைய பயனுள்ள தகவல்கள் இருக்கின்றன...

நேரம் ஒதுக்கி அவசியம் அவர் பதிவுக்கு ஒரு முறை சென்று பாருங்கள்....

PKP தங்கள் பணி மேலும் வளர, சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....

எனது பதிவில் தங்களின் பதிவுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்... அனுமதி மறுக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்....

நன்றியும்.. வாழ்த்துக்களும்...

3 மறுமொழிகள்:

எம்.ரிஷான் ஷெரீப் சொன்னது…

மாயன் பயனுள்ள பதிவு உங்களது.நன்றி நண்பரே !

நண்பர் PKP அவர்களின் பணி மேலும் தொடர்ந்து வளரவும், சிறக்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றென்றும்....!

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

தமிழ்நெஞ்சம் சொன்னது…

http://pkp.blogspot.com/2008/02/blog-post_21.html

நண்பர் பி.கே.பி. அவர்களுக்கு 'இணையத்தளபதி' என்ற பட்டத்தைக் கொடுத்தது 'அடியேன்' என்பதை இங்கே தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகிறேன்.

இணையத்தளபதி வாழ்க வாழ்க

http://tamizh2000.blogspot.com/2008/02/blog-post_4393.html

ம.கஜதீபன் சொன்னது…

நானும் பி.கே.பி சாரின் தள வாசகன் தான். தாங்கள் அவர் தளம் பற்றி விமர்சித்தமைக்கு வாழ்த்துக்கள்.

ஈழமைந்தன்
ம.கஜதீபன்

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..