உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

செவ்வாய், ஏப்ரல் 10, 2007

சிரிங்க... சிந்திக்காதீங்க...

ஒரே நாளில் 2 விமானங்கள் தரை இறங்கும் போது கோளாறு...

என்னடா இது அநியாயமா இருக்கு...

ஏண்டா என்னாச்சு..

2 விமானங்கள் தரை இறங்கும் போது கோளாறாம்...தரை இறங்கினா தானே பிரச்சினைன்னு தரை இறங்கவே மாட்டேன்னு பைலட் அடம் பிடிக்கிறாராம்.

========================================

(அரசியல்வாதி பொதுக்கூட்டத்தில்...)

இது நிச்சயம் எங்கள் ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க, எதிர்க்கட்சியினர் பாகிஸ்தான் தீவரவாதிகளோடு சேர்ந்து செய்த சதி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்....

========================================

சார் எங்க கம்பெனி ஃப்ளைட்ஸ் லேண்ட் ஆகும் போது பிரச்சினை ஆனது உண்மை தான்... அதுக்காக இப்ப ஃப்ளைட் லேண்ட் ஆகும் போது.. இப்படி உரத்த குரல்ல கோவிந்தா, கோவிந்தான்னு கத்தி ஸீன் க்ரியேட் பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை சார்....

========================================

(பெயரியல்/வாஸ்து நிபுணர்)

ஏர் இந்தியான்னு பெயர் இருக்கறதால தான் அடிக்கடி லேண்டிங் கியர் பிரச்சினை வருது... பேசாம கியர் இந்தியான்னு பேரை மாத்திட்டோம்னா பேர்லயே கியர் இருக்கறதால பிரச்சினை வராது.

இன்னொரு விஷயம் சொன்னா அதிர்ச்சி ஆயிடுவீங்க.. "ஏர்" இந்தியான்னு பேர் இருக்கறதால அடிக்கடி ஃப்ளைட் வயல்வெளில போய் லேண்ட் ஆக வாய்ப்பு இருக்கு. ஏன்னா வயலுக்கும், ஏர்க்கும் தொடர்பு இருக்கு இல்லையா?

========================================

(போலீஸ் ஸ்டேஷனில்)
ஏம்மா உன் புருஷன் உன்னை கொல்ல முயற்சி பண்றார்னு எப்படி சொல்றே?


எப்ப அம்மா வீட்டுக்கு போகனும்னு சொன்னாலும் ஃப்ளைட்ல போடின்னு சொல்றாரு.. சும்மாவே உன்னை ஃப்ளைட்ல ஏத்தி விட்ருவேன்னு அடிக்கடி மிரட்டறார்.

========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக