சமீபத்தில் கமல்ஹாஸன் நடித்த 'வசூல்ராஜா MBBS' படத்தை மீண்டும் பார்க்க நேர்ந்தது.
நகைச்சுவை படம் தான். பலமான கதையம்சம் இல்லாத மசாலா படம் தான். ஆனாலும் பெரிய பெரிய மகான்கள், யோகிகள், வாழ்வியல் நிபுணர்கள் கூறும் வாழ்வியல் தத்துவங்களை சாதாரணமாக படத்தில் அள்ளி தெளித்து இருக்கிறார்கள்.
கமல் ஒரு நாத்திகவாதி என்பது அனைவருக்கும் தெரியும். சில, பல மகான்கள் சொல்லும் அதே விஷயத்தை தான் அவரும் சொல்கிறார். கடவுள் பெயரை இழுக்காமல். நான் தான் கடவுள் என்று சொல்லாமல்.
"அனைவரிடமும் அன்பாய் இருங்கள்"...
"மனிதனுக்கு தேவை அன்பும் பாசமும் தான்"...
"கடமையை செய்யுங்கள்.. பலனை எதிர்ப்பார்க்காதீர்கள்(பலன் தானே உங்களை தேடி வரும்)"
"சாதிக்க தேவை மனோபலமும் நம்பிக்கையும் தான்"
எவ்வளவு விளையாட்டாக போகிற போக்கில், அந்த கருத்துக்களை அறிவுரை போல் அல்லாமல் கதையோடு கதையாக, சம்பவத்தோடு சம்பவமாக சொல்லி இருக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் தத்தம் கடமையை சரியாக செய்து வந்தாலே போதும்.. நாட்டை தனியாக யாரும் திருத்த தேவை இல்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக