நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?
நீங்கள் கஷ்டபட்டு அங்குலம் அங்குலமாக நகர்ந்து கடவுளை தரிசிக்க நிற்கும் போது... 100, 500, 1000 என பணத்தை வாரி இறைத்து, உங்களை தாண்டி சென்று கடவுள் அருளை பெறுபவர்களை பற்றியும்? அவர்களுக்கு பணத்தை பெற்று கொண்டு அவ்வசதியை அளிக்கும் கோவில்களை பற்றியும்..
உங்களை ஒரு அரை நிமிடம்... இல்லை இல்லை 20 நொடிகள் கூட நிற்க விடாமல் 'ஜரகண்டி', 'ஜரகண்டி' என்று விரட்டும் கோவில் நிர்வாகிகள், பணமும், அதிகாரமும் படைத்தவர்களை பூரண கும்ப மரியாதையோடு வரவேற்று கடவுள் சிலை அருகிலேயே அமர வைத்து எவ்வளவு வேண்டுமானலும் தரிசித்து கொள்ள அனுமதிப்பது பற்றி?
கேட்பாரன்றி ஆயிரக்கணக்கான கோவில்களும், கடவுள்களும் இருக்க ஒரு சில குறிப்பிட்ட கோவில்களுக்கே எல்லோரும் வாரி வழங்குவது ஏன் என்பது பற்றி?
சமதர்மத்தையும், அருளையும் போற்றி பரப்புவதற்காக அமைக்கப்பட்ட கோவில்களும், மடங்களும் லாபங்களை குறித்து செயல்படும் வியாபார தலங்களாகவும், சுற்றுலா தலங்களாகவும் மாறி போனது பற்றி...?
யாரது? எங்களுக்கு கோவிலில் நுழையவே அனுமதி இல்லை... ஆதலால் இந்த கேள்வி எங்களுக்கு அநாவசியம் என்றது?
அதெல்லாம் பழைய கதை நண்பர்களே... கோவில்கள் மத, சாதி வெறியிலிருந்து பண வெறிக்கு மாறிவிட்டன.
ஏழைகள் எந்த சாதியாயினும் எள்ளி நகையாட படுகின்றனர்... பணக்காரர்களின் சொர்க்கமாகவும், ஏழைகளின் நரகமாகவும் இந்த உலகம் மாறி கொண்டு வருகிறது.. முன்னெப்போதையும் விட வேகமாய்.
உலகே மாயம் - மாயண்ணே!
பதிலளிநீக்குsir,the problem is administration
பதிலளிநீக்குIt s purely the mistake of fools who waste money and time to look decorated stones. When these stupid people come to know god is not there...?
பதிலளிநீக்கு"உலகே மாயம் - மாயண்ணே!"
பதிலளிநீக்குமாயம்-னா கற்பனை... கற்பனைல கூட நியாயம் இல்லை பாருங்க தம்பி... அதான் என் கவலை...
"sir,the problem is administration "
பதிலளிநீக்குI will suggest people will choose some poor Balaji temples to contribute.. God is everywhere..
தூணிலும் இருப்பான்.. துரும்பிலும் இருப்பான் என்றால் எல்லா கோவில்களிலும் அவன் இருந்தாக வேண்டுமே...
"It s purely the mistake of fools who waste money and time to look decorated stones. When these stupid people come to know god is not there...? "
பதிலளிநீக்குIam also a kind of supporter of your arguement. But Iam not an athiest... When it comes to society related issues iam more than a devotee...Nobody in this world can claim the God is here... OR here only... OR powerful here only...