பூசணிக்காய், பூசணிக்காய் என்று ஒரு வஸ்து இருக்கிறது...
அதை வைத்து குழம்பு பண்ணலாம்...
பொரியல் பண்ணலாம்..
கிச்சடி பண்ணலாம், பச்சடி பண்ணலாம்,
ஆட்களை விழ பண்ணலாம் என்று கண்டுபிடித்தவர்கள் நம்மூர் ஆட்களாய் தான் இருப்பார்கள்...
திருஷ்டி கழிக்க வேண்டும் அதற்கு பூசணிக்காய் சுற்றி உடைக்க வேண்டும் என்று எந்த சாத்திரத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை...
கோலம் போட்டு அதன் நடுவில் சாணம் வைத்து அதில் பூசணி பூ சொருகுவார்கள்... சரி பூசணிப்பூ சின்னது ஆபத்து கம்மி...
உடைத்த ஒரு பாதி பூசணியில், டூ வீலரின் முன் சக்கரம் போய் சரியாக புதைந்து வண்டியை அடியோடு குடை சாய்க்கும் படி செய்யும் ஜப்பான் டெக்னாலஜி நம்மாட்களுக்கு எப்படி தான் கை வந்ததோ தெரியவில்லை...
டூ வீலர்கள் எவ்வளவு நிதானமாக சென்றாலும், ஆயுத பூஜை என்பது பப்ளிக் எக்ஸாம் மாதிரி...
2 நாளைக்குள், பல பேர் நிறைய ஸ்கோர் பண்ணி விடுவார்கள்...
நம்மூர் கமிஷனர் நேற்று அறிக்கை எல்லாம் விட்டு பார்த்தார்.. ஒன்றும் பலனில்லை...
காலையில் தி.நகர் போய் வருவதற்குள் வண்டியுடன் லாங் ஜம்ப், ஹை ஜம்ப் எல்லாம் பண்ணி வேண்டியதாயிற்று...
என் கண் முன்னே ஒருவர் ஒரு டர்னிங் பூசணிகாயை சரியாக கணிக்க முடியாமல் திணறி, வண்டியுடன் அனந்த சயன போஸில் படுத்துக் கொண்டே ரோட்டை கடந்து சென்றதை பார்த்து திகிலடைந்து, 20 கி.மீ வேகத்தில் வண்டி ஓட்டி வீட்டை அடைந்தேன்...
அடுத்தவன் எப்படி போனால் என்ன நம்ம கடை வீடு நல்லா இருந்தால் போதும் என்று பூசணிக்காயை ரோட்டில் உடைக்கும் இவர்கள் நல்ல மனதை என்னவென்று சொல்ல?
பூசணிக்காயை ஆபரேஷன் செய்து குங்குமம் காசு போட்டு நிரப்பி, கற்பூரம் ஏற்றி, சுற்றி நடுரோட்டில் போட்டு உடைக்கிறார்கள்....( எப்போ எப்படி ஆரம்பித்தது இந்த பழக்கம்.. வவ்வால் சார் உங்களுக்கு தெரியுமா?)
உடைந்த பூசணிக்காயில் இருந்து காசை எடுக்க இருக்கும் ஆர்வம், அதை ஓரமாய் போடுவதில் இல்லை பாருங்களேன்..
ஏன் உடைந்த பூசணியை திரும்ப எடுத்தால் தீட்டா?.. அதில் வழுக்கி விழுந்து யார் மண்டையாவது உடைந்தால் அந்த பாழாய் போன தீட்டு கிடையாதா?..
ஒன்று சாத்திரங்கள் தப்பு தப்பாய் இருக்க வேண்டும்..
இல்லை அதை யாரோ இவர்களுக்கு தப்பு தப்பாய் சொல்லி கொடுத்திருக்க வேண்டும்...
முழக்கம் காலத்திற்கேற்ப செய்யப்பட்டுள்ளது.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
ஜமாலன் சார்...
பதிலளிநீக்குவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி..
முதலில் கமிஷ்னர் செய்யவேண்டிய வேலையை சரியாக செய்யவில்லை என்றுதான் சொல்ல வேன்டும் பூசனிக்காய் உடைக்காதீர் என்று சொன்னவர் பூசனிக்காய் விற்க்க தடை செய்திருக்கவேன்டும் தொலைக்காட்ச்சி செய்திகளில் இதைப்பற்றி விளக்கி கூறி இருக்கவேன்டும் பாழாய்போன இந்த நம்பிக்கை எல்லம் விட்டுவிடுங்கள் என்று . இதை இந்த தி மு க ஆட்ச்சியே செய்யவில்லை என்றல் வேறு யார் செய்ய முடியும்
பதிலளிநீக்குippadi solvathu
ramajayam
நண்பரே !!
பதிலளிநீக்குகாலாகாலமாய் இருந்து வரும் திருஷ்டிப் பூசனிக்காய் உடைக்கும் பழக்கத்தை பதிவில் முழங்கியோ அல்லது சட்டம் போட்டோ நிறுத்த முடியாது. இதனால் வரும் விளைவுகள் தற்சமயம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன. இருப்பினும் ஓட்டுநர்கள் தான் ஜாக்கிரதையாக இரூக்க வேண்டும். எத்தனையோ தடுக்கப்பட வேண்டிய பழக்கங்களில் இதுவும் ஒன்று.
எல்லோருக்கும் விரல் நீட்ட உரிமை இருக்கிறது.. ஆனால் அடுத்தவன் மூக்கு ஆரம்பிக்கும் இடத்தில் அந்த உரிமை முடிந்து விடுகிறது...
பதிலளிநீக்குகமிஷனர், பூசணிக்காயை ஓரமாய் உடையுங்கள் என்று தான் சொல்ல முடியும்.. பூசணிக்காய் உடைக்காதே.. விற்காதே என்றெல்லாம் சொல்ல முடியாது.. சொன்னால் அவருக்கு என்னென்ன சாயம் எல்லாம் பூசுவார்கள் நம் மதவாதிகள் என்று எண்ணி பாருங்கள்...
கலைஞர் எதை சொன்னாலும் தப்பாகி விடும் இந்த சூழ்நிலையில் பொது நலன் கருதி பூசணிக்காய் உடைக்காதே என்று சொன்னால்.... வேணாம் சாமி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி(ராம்ஜெயம்)...
பதிலளிநீக்குவளைவுகளில் உடைக்கப்படும் பூசணிக்காய் துண்டுகள் மிக ஆபத்தானவை... பெரிய வண்டிகளின் சக்கரத்தில் சிக்கி சிதறி தெரித்து இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குவதும் உண்டு...
பதிலளிநீக்குஹெல்மெட் போடவில்லை என்றால் வழிமறித்து அபராதம் வசூலிக்கும் போலீசார் இதையும் அதே கண்டிப்புடன்(?) கவனிக்க வேண்டும்... பொது நலனுக்காக வழக்கு தொடரும் ட்ராஃபிக் ராமசாமி இதற்கும் பொது நலன் வழக்கு தொடர்ந்து, தீர்ப்பு ஏதும் வந்துள்ளதா என்று தெரியவில்லை....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனா...
//அடுத்தவன் எப்படி போனால் என்ன?//
பதிலளிநீக்குநாமெல்லோருமே ஏதோ ஒரு விஷயத்திலாவது ஏன் இப்படி இருக்கிறோம்? புரியாத புதிர்தான்!
சாஸ்திரமாவது, மண்ணாவது ?? பத்து பேரு ஒரு விஷயத்த பண்ணாங்கன்ன, ஏன்,எதுக்குன்னு கூட கேட்காம, இன்னும் ஒரு பத்து பேரு அதயே திரும்ப பண்ணுவாங்க!
பதிலளிநீக்குவாங்க தருமி அய்யா.. வீரசுந்தர்..
பதிலளிநீக்குவீரசுந்தர்
இந்த சாத்திரம் மட்டுமல்ல பல சாத்திரங்கள் இப்படி தான் நடைமுறைக்கு வந்திருக்கும்.. ஏன் எதுக்குன்னு கேக்காம அடுத்தவர் செய்வதை நாமும் செய்ய வேண்டும் என்று சொல்லி கொடுக்கும் இன்றைய சமூகத்தின் அவலம்...
"என்ன நம்ம மாயன் இணைய தளத்தில எல்லாம் கலக்கிட்டு இருக்கார்னு கேள்விப்பட்டேன்; திருஷ்டி ரொம்ப பட்டிருக்கும்; எதுக்கும் ஒரு பூசணிக்காய் சுத்திப் போடுங்க" என்று சொல்லும் அளவு பாசம் மிகு உறவினர்கள் யாராவது இருப்பார்களே!
பதிலளிநீக்குதிருஷ்டி கழிப்பதிலும் மினி மிடி மேக்ஸி என்று வைத்திருக்கிறார்கள் பாருங்கள் (முறையே சூடன் கொளுத்துதல், தேங்காய் உடைத்தல், பூசணிக்காய் உடைத்தல்).
எனக்குத் தெரிந்து வடமாநிலங்களில் இந்தப் பழக்கம் இல்லை. குழந்தைகளை வாசல் நடையில் நிறுத்தி தண்ணீரால் ஆரத்தி எடுத்து அந்த நீரினை மரங்களுக்கு ஊற்றி விடுவது தான் அதிகபட்ச திருஷ்டிக் கழிப்பு.
"தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணம் உண்டு" என்பதை இப்படி எல்லாம் தான் நம்மவர்கள் நிரூபிக்கிறார்கள்.
ரத்னேஷ்.. இது தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கிறதா?.. அண்டை மாநிலங்களிலும் பூசணிக்காய் உடைப்பது உண்டா.. தெரிந்தவர்கள் யாராவது சொல்வார்களா?
பதிலளிநீக்குவ்ருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி ரத்னேஷ்
This is a good topic.
பதிலளிநீக்குi wish to add my thoughts here
1.its inddividual responsibility to not to pose harm to others
2.its governments responsibility to ensure that individual does not pose harm to others
if i say that for ayudha pooja i will cut the head of first person who comes after the pooja.. will government be calm?
When u enforce to wear helmet for safety y dont u enforce that there is no one who does this act?
again i accept that individual needs to change but isnt the duty of the government to enforce it?
pls dont say that whatever kalignar says goes wrong..
i am not against kalaignar.. but i have my questions..
you cannot comment on beleif of a larger mass just bcos they keep quiet.. :)
that too from the post of a cheif minister... as a individual u have freedom of speech....
k i think i am deviating from the topic..
good job mr.mayan
Hi Karthik
பதிலளிநீக்குWelcome and thank you for the comments.
That comment was added for a lighter moment.
Your arguement is correct But we need to think if kalaingar says not to break pumpkin people are going to listen to that?
//you cannot comment on beleif of a larger mass just bcos they keep quiet.. :)//
I will put the same question pointed out by you
//if i say that for ayudha pooja i will cut the head of first person who comes after the pooja.. will government be calm?//
If larger mass(so called) does the above thing and keeps quiet.. should i be not commenting on it...
as you said I too have right of speech...
Thanks once again karthik...
//ஒன்று சாத்திரங்கள் தப்பு தப்பாய் இருக்க வேண்டும்..
பதிலளிநீக்குஇல்லை அதை யாரோ இவர்களுக்கு தப்பு தப்பாய் சொல்லி கொடுத்திருக்க வேண்டும்...//
:))
அது ........!