அனுராதபுரத்தில் போரிட்டு மடிந்த புலிகளின் உடல்களுக்கு செய்யப்பட்ட அவமரியாதை குறித்து...
பதிவுலகம் முழுக்க அவர் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை இவர் ஏன் கண்டனம் தெரிவிக்க வில்லை என்று கேள்விகள்...
போர்க்கைதிகளை, அவர் தம் உடல்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து சர்வதேச அளவில் சட்டங்கள் உள்ளன.
http://www.unhchr.ch/html/menu3/b/91.htm
இவையெல்லாம் இருந்தும் இப்படிப்பட்ட கொடுமைகள் நடப்பது மன்னிக்கமுடியாத தவறு...
இந்த புகைப்படம் பல்வேறு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டும், சரியான கவன ஈர்ப்பை பெறவில்லை என்பது வேதனையான உண்மை...
இலங்கை தமிழர்களுக்கும், புலிகளுக்கும் ஆதரவாக குரல் கொடுத்து வருவதாக நம்பப்படும் அரசியல், சமூக தலைவர்களின் கண்டன குரல்கள் கூட அடக்கி வாசிக்கப்படும் மர்மம் என்ன என்பது புரிய வில்லை...
(கலைஞர், வைகோ, அய்யா ராமதாஸ் உள்பட தமிழகத்தின் தலைவர்கள் யாருமே கண்டனம் தெரிவித்தார்களா என்று எனக்கு தெரியவில்லை..)
ஒரு வேளை இந்த மாதிரி கொடுமைகள் பழக்கப்பட்டு விட்டதால் எப்போதும் நடப்பது தானே என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டு விட்டார்களா?..
புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் தான். அதற்கு ஆதரவாக பேசுவது தவறு தான். ஆனால் மனிதாபிமான அடிப்படையில் கண்டனங்களை பதிவு செய்வதில் தவறு இருக்க முடியாது...
இந்த விஷயத்தில் யாருமே அவ்வளவு பலமான எதிர்ப்பு குரல் கொடுக்காதது போல் தான் இருக்கிறது..
தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் நாடுகளின் மௌனம் கவலையை அளிக்கிறது...
செய்யப்படும் செயல்களால் தான் தீவிரவாதம் தீர்மாணிக்கப்படுகிறது... யார் செய்கிறார்கள் என்பதால் அல்ல...
அப்படிப் பார்த்தால் இலங்கை அரசு செய்த செயல் கேடு கெட்ட தீவிரவாத செயல் என்றால் அதில் தவறில்லை...
(ஏற்கனவே அந்த புகைப்படங்கள் பலமுறை வெளியிடப்பட்டு விட்டதால் நான் அதை இங்கே வெளியிடவில்லை...)
ஈழத்தமிழனுக்காக உயிரைக் கொடுப்பேன் எனக் கர்ச்சிக்கும் வை.கோவுக்கு என்ன நடந்தது?
பதிலளிநீக்குதமிழனுக்கு ஒரு நாடு வேண்டும் என்றுதானே இலங்கையில் போராட்டம் நடைபெறுகின்றது.
தமிழ் மூச்சு, தமிழன் வாழ்வு மூச்செனக் கூறும் திராவிடக் கட்சிகளின் இன்றைய நிலைப்பாடு என்ன?
புரிந்தவர்கள் விளக்குங்கள்
Vasuhi
புலிகளுக்கு மனித உரிமை மீறல்களை கதைப்பதற்கு என்ன அருகதை இருக்கின்றது? கடந்த 25 வருடகால புலிகளின் மனித உரிமை மீறல்களை பட்டியலிட்டு அடங்காது. போர்வீரர்களை தற்கொலை செய்துமடி என்று கூறி போர்க்களத்திற்கு அனுப்புவதுதான் மிகப்பெரிய மனித உரிமை மீறல்.
பதிலளிநீக்குதிவாகர்
6 கோடி தமிழ் மக்களே எங்களை காப்பாற்றுங்கள்....கரம் ஏந்தி நிற்கின்றோம்...உங்கள் தொப்புள் கொடி உறவு நாங்கள்....வாசித்து பார்த்துவிட்டு என்ன செய்வது என்று விட்டு விடாமல் ஏதாவது செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் ..............
பதிலளிநீக்குநீங்கள் எங்களுக்காக செய்த ஆர்ப்பாட்டங்களுக்கு நன்றி....நாளுக்கு நாள் எங்கள் உறவுகளில் ஒருவன் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காவதை நீங்கள் அறீவீர்கள்....
என்றும் அன்புடன்
இலங்கைப்பெண்...
எல்லா செய்திகளிலும் இதை பின்னூட்டம் ஆக இடுகின்றேன்.
சரியான தருணத்திலல சுட்டப்பட்டிருக்கும் பதிவு. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்கு//செய்யப்படும் செயல்களால் தான் தீவிரவாதம் தீர்மாணிக்கப்படுகிறது... யார் செய்கிறார்கள் என்பதால் அல்ல...//
புரிதலுள்ள வாசகம்....
பின்னூட்டம் இட்டவர்கள் அனைவரும் மன்னிக்க.. இன்று தான் நேரம் கிடைத்தது...
பதிலளிநீக்குVashusi
எனக்கும் அது தான் புரியவில்லை
திவாகர்
பதிலளிநீக்குபோருக்கு சாக போகிறோம் என்று தெரிந்து தான் எல்லா ராணுவ வீரர்களும் போகிறார்கள்.. எல்லா நாடுகளும் அவர்களை அனுப்பி வைக்கின்றன..
அப்போ அதுவும் மனித உரிமை மீறல் தானே..
புலிகள் எவ்வளவோ மனித உரிமை மீறல்கள் செய்திருக்கிறார்கள் என்று கூறி இதை நியாயப்படுத்த கூடாது.. அதையும் கண்டிப்போம்... இதையும் கண்டிக்க வேண்டும்...
//"வாசித்து பார்த்துவிட்டு என்ன செய்வது என்று விட்டு விடாமல் ஏதாவது செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் ..............
பதிலளிநீக்கு"//
தோழி
எங்களின் பிரார்த்தனைகளால் பெரியதாக ஒன்றும் விளைய போவதில்லை என்றாலும்... பிரார்த்திக்கிறோம்
ஜமாலன் சார்.. புரிதலுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி..
பதிலளிநீக்கு(அய்யா... உங்களது எந்த பதிவையும் பதிவு நீக்கம் செய்ய யோசிக்காதீர்கள்.. உங்கள் பதிவுகள் கனமானவை... புரிதலுக்கும், எதிர்வினைகளுக்கும் நேரம் தேவை... )