நான் சமீபத்தில் வலை மேய்ந்து கொண்டிருந்த போது இந்த வீடியோக்களை பார்க்க நேர்ந்தது...
குழந்தையின் சிரிப்புக்கு தான் என்ன சக்தி... மனம் அப்படியே லேசாகி விடுகிறது... இரண்டு வீடியோவையும் இறக்க்ம் செய்து வைத்துக் கொண்டேன்.. இப்போதெல்லாம் டென்ஷன் மிகுந்த வேலையின் நடுவே இந்த வீடியோக்களை பார்க்க தவறுவதில்லை நான்....
அப்பா கொடுக்கும் வித்தியாசமான சப்தத்துக்கு.. மூச்சு முட்ட சிரிக்கும் குழந்தை...
அப்பா கொடுக்கும் வித்தியாசமான சப்தத்துக்கு.. மூச்சு முட்ட சிரிக்கும் குழந்தை...
உலகத்தில் உள்நாட்டு கலவரங்களும், போர் அபாயத்தில் சிக்கி கிடக்கும் நாடுகளிலும் ஊர்களிலும் இது போன்ற கள்ளமில்லா குழந்தைகள் இருக்குமில்லையா?
ம்ம்ம்ம்... நினைத்தால் மனது பாரமாக தான் இருக்கிறது.. அந்த பாரத்தை போக்கி கொள்ளவும் இந்த வீடியோவை தான் பார்க்க வேண்டியிருக்கிறது....
மழலை சிரிப்பின் மாயத்தில் மனசு மயங்கி லேசாகி அதை எம் 'பார்வை'க்கும் வைத்ததற்கு நன்றி, மாயன்! உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வீடியோக்கள்!
பதிலளிநீக்கு