உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

சனி, அக்டோபர் 13, 2007

போக்குவரத்து நெ(சி)ரிசல்

சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளாக ஆக அதிகமாகிக்கொண்டே போகிறது...

இதை தவிர்க்க சென்னை போ.காவலர்கள்..(போக்குவரத்து காவலர்கள்!!!) அவர்களால் ஆன வரை முயற்சி செய்கிறார்கள்... முடிந்த வரை எல்லா சாலைகளையும் ஒரு வழிப்பாதையாக்கி அவர்கள் குழம்புவதோடு இல்லாமல் வாகன ஓட்டிகளையும் சகட்டுமேனிக்கு குழப்பி விடுகிறார்கள்...

எழும்பூர், கிண்டியை தொடர்ந்து இப்போது தி.நகர் சாலைகளும் ஒரு வழிப்பாதையாக்கப் பட்டிருக்கிறது....

இது இப்படியே தொடர்ந்தால் என்னாகும் என்று ஒரு கற்பனை...

அலுவலகத்தில்,

“ஏன்யா கண்ணு சிவந்திருக்கு.. ராத்திரி சரியா தூங்கலையா?”

“அத ஏன்யா கேக்கற.. அடிக்கடி ட்ராஃபிக் ஜாம் ஆகுதுன்னு எங்க தெருல ரெண்டு பக்கமும் "நோ என்ட்ரி" போர்டு வெச்சுட்டாங்க... வீட்டுக்கே போக முடியலை...”

=========================================

சாலையில் ஒரு போக்குவரத்து காவலரிடம் ஒருவர்,

"சார், ஒன் வே பண்ண ரூட்டை நல்லா சரிப்பார்த்துட்டீங்களா?.. நான் 20வது தடவையா உங்களை க்ராஸ் பண்றேன்... "


=========================================

தொலைபேசியில் இருவர்,

"என்னய்யா? திடீர்னு வீட்டை விழுப்புரத்துக்கு மாத்திட்ட?"

"எல்லா ஒன்வேயும் சுத்திட்டு மயிலாப்பூர்ல இருக்கிற வீட்டுக்கு விழுப்புரம் வழியா தான் போக வேண்டியிருக்கு.. எதுக்கு மறுபடியும் மயிலாப்பூர் போகனும்னு.. வீட்டை விழுப்புரத்துக்கே மாத்திட்டேன்.. ஒரு மணி நேரம் முன்னாடியே வீட்டுக்கு வந்துடுறேன்பா..."

=========================================

ரெயில் பாதையில் ரெயில் ட்ரைவரும், போ.காவலரும்

"சார் நல்லா விசாரிச்சீங்களா?.. ரெயிலுக்குமா ஒன் வே மாத்த சொல்லியிருக்காங்க?"

=========================================

காரில் போகும் ஒருவர் மொபைலில் அலறுகிறார்,

"அடியே உன்னை தாண்டி.. உடனே வக்கீலுக்கு ஃபோனை போட்டு உயிலை ரெடி பண்ண சொல்லு... பாழா போனவனுங்க.. டைவர்சன் டைவர்சன்னு ஏர்ப்போர்ட் ரன்வேக்குள்ள என் வண்டிய திருப்பி விட்டானுங்க... எதிர்த்த மாதிரி ஒரு ஃப்ளைட் லேண்டிங் ஆயிட்டிருக்கு..."

=========================================

பஸ்ஸில் இருவர்,

"என்னடா நான் கேட்டப்ப வேலை இருக்கு.. ஆஃபீஸ் போறேன்னு சொல்லிட்டு.. இப்ப நீயும் திருச்சி பஸ்ஸுல ஏர்ற? மனச மாத்திக்கிட்டயா? அமைஞ்சிக்கர பஸ் அங்கே இருக்கு"

"ஆஃபீஸ் தாண்டா போறேன்.. இந்த பஸ் தான் ஷார்ட்கட்ல சீக்கிரம் போகும்..."

=========================================

ஆஃபீசில் இருவர்

"டேய் எங்கடா உன் காரை காணோம்..."

"அதையேண்டா கேக்கற?.. போன மாசம் ஸ்பென்சர்ல ஷாப்பிங் பண்றதுக்காக போய் வண்டியை பார்க் பண்ணேன்.. ஷாப்பிங் முடிஞ்சு வந்து பார்த்தா என் வீட்டுக்கு போக வழியே இல்லாதபடிக்கு எல்லாத்தையும் ஒன் வே பண்ணிட்டாங்க... மறுபடியும் ரூட் எப்ப மாத்துவாங்கன்னு வெயிட் பண்ணிட்டிருக்கேன்.."



7 கருத்துகள்:

  1. தி. நகரில் இருந்து கோயம்பேடு வர 2 மணி நேரம் ஆகிறதாம்...

    பதிலளிநீக்கு
  2. நீங்க வேற குமார் சார்....

    நுங்கம்பாக்கத்தில் இருந்து தி.நகர் வர 1 மணி நேரம் ஆன கடுப்புல தான் இந்த பதிவே போட்டேன்..

    பதிலளிநீக்கு
  3. நன்றி சதுக்க பூதம்..

    இது எல்லாம் போக்குவரத்து நெரிசல்ல நானும் என் நண்பனும் பேசிக்கிட்டது...

    சாதாரண உணர்வுகளின் மிகைப்படுத்தல்கள்... அவ்வளவு தான்..

    பதிலளிநீக்கு
  4. உண்மை - முற்றிலும் உண்மை - பெரு நகரங்களில் போக்குவரத்து கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது - வங்கிகளின் தயவில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பெருத்து விட்டன. என்ன செய்வது ??

    பதிலளிநீக்கு
  5. சீனா..

    வருகைக்கும் தங்களின் ஊக்கத்திற்கும் நன்றிகள் பல..

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு.

    இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பாகவே அதாவது அப்போது பாரீஸ்ஸிலிருந்து கோயம்பேட்டுக்கு பஸ் நிலையத்தை மாற்றியிருந்தார்கள். அசோக் பில்லரிலிருந்து அண்ணா நகர் ஈஸ்ட் போக (டிவிஎஸ் சாம்பில்) ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் ஆனது. இது கற்பனை அல்ல நிஜம்.

    பதிலளிநீக்கு