உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

காதல் என்றால் என்ன? அதற்கு என்ன கொம்பா இருக்கிறது?

தினமும் காலையில செய்தித்தாளை பிரிச்சா போதும்...

காதல் ஜோடி ஊரை விட்டு ஓட்டம்...காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை...காதலர்கள் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்...

காதல்... காதல்னு ஏதாவது செய்தி இருந்துகிட்டே இருக்கு...

உங்க பார்வையில காதல்னா என்னங்க?

கலாச்சார சீரழிவா?

இல்லை... கலர் கலர் கனவா?

இல்லை... கண்ணீர் தரும் நினைவா?

இல்லை... காதோரம் ரீங்காரமிடும் இசையா?

என்னைப் பொருத்த வரை அதுக்கு முடிவே கிடையாது... முடிவு கிடையாதுன்னா அதை நீங்க ஆரம்பிச்சப்புறம் முடிவு கிடையாதுன்னு அர்த்தம் இல்லை... நீங்க ஆரம்பிக்காட்டியும் அது இருக்கும்... அதுக்கு முடிவே கிடையாதுன்னு அர்த்தம்....

பேசலாமா?

10 மறுமொழிகள்:

நளாயினி சொன்னது…

"இல்லை... கலர் கலர் கனவா?

இல்லை... கண்ணீர் தரும் நினைவா?

இல்லை... காதோரம் ரீங்காரமிடும் இசையா?"

நீங்களே சொல்லிவிட்டீர்களே.

வவ்வால் சொன்னது…

காதல் என்பது ஒரு பயோ கெமிக்கல் ரியாக்ஷன். நம்ம பின்னம் மண்டையில முகுளம் பக்கதில அட்ரோபைன்னு ஒரு ஹார்மோன் தாரளமா சுரந்தா காதல் பீறிடும் குளுக்கி திறந்த பீர் பாட்டில் போல, பருவ வயசில நல்ல ஊற்றெடுக்கும். இதற்கு தீர்வு நாளு நாளைக்கு பட்டிணி போட்டப்போதும்!

சினேகிதி சொன்னது…

வவ்வாலின்ர பதில் நல்லாயிருக்கே:-)

மாயன் சொன்னது…

வவ்வாலாரே

பதில் சொல்லும் போது நாம சின்ன வயசுல என்ன நினைச்சோம்னு யொசிச்சு பதில் சொல்லணும்....
:-)

இருந்தாலும் உங்க பதிலை ரசிச்சேன்...

மாயன் சொன்னது…

நானும் எங்கயோ படிச்சிருக்கேன்... அதோட தாக்கம் ஆளுக்காள் மாறுப்படுமாம். சிலருக்கு 10 வருடங்கள் வரை கூட தாக்கம் இருக்கும்...

ஆனா அட்ரோபைன் ஒரு குறிப்பிட்ட நபருக்காக தான் சுரக்குதா?.. ஏன் சிலருக்கு சிலர் மேல் வெறித்தானமான காதல்?

மாயன் சொன்னது…

//நீங்களே சொல்லிவிட்டீர்களே. //

காதல் என்பது எல்லாமும் என்று சொல்ல வருகிறீர்களா?

நளாயினி சொன்னது…

மாயன் said...
//நீங்களே சொல்லிவிட்டீர்களே. //

காதல் என்பது எல்லாமும் என்று சொல்ல வருகிறீர்களா?


*mm.

ஒவ்வொருவரின் மனநிலையைப்பொறுத்தது. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு குழந்தை மனசு அழகிய பல வர்ணங்கள் சிறகை அகலவிரிக்கும் பறவை இதெல்லாம் இருக்கு. இதை சாகடிகஇகாத அலஇலது கொஞ்சம் ஏனும் தீங்கிழைக்காத அல்லது வதைசெய்து துன்புறுத்தாதவர்களுக்கு காதல் வித்தியாசமானதோடை அழகானதும் உண்மையானதும்."

மாயன் சொன்னது…

அருமையா சொன்னீங்க...

சூழ்நிலை சில விழுக்காடு.. மனநிலை சில விழுக்காடு.. ஈர்ப்பு சில விழுக்காடு..

இந்த கலவையின் விகிதம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்..

எல்லா காதலும் ஒரு இடத்தோட... ஒரு காலச்சூழலோட சம்மந்தப்பட்டிருக்கும்.... வாழ்க்கையே அப்படிதான்... ஆனா காதல் மட்டும் தான் நம்மளை அதிகம் பாதிக்குது... அதனால நினைவுயிலயே நிக்குது....

வவ்வால் சொன்னது…

அட்ரோபைன் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருந்த பிரச்சனையே இல்லையே, ஆள் ஆளுக்கு சுரப்பது மாறுதாம் அதான் ஆண்டவன் திருவிளையாடல்(ஆண்டவன் இருக்கானா என்பது தனிப்பிரச்சினை) அதனால் தான் வெறித்தனம் மாறுது! எல்லாமே அலவோடு இருந்தா ஆசை ,அளவுக்கு மீறினால் வெறித்தானே!

தண்ணி அடிச்சா அட்ரோபைன் அதிகம் சுரக்கும் ஆனால் உடல் உறுப்புகள் தான் சரிவற செயல் படாது(எந்த உடல் உறுப்புனுலாம் கேட்டால், சொல்லியா தெரியனும்)

//வவ்வாலாரே

பதில் சொல்லும் போது நாம சின்ன வயசுல என்ன நினைச்சோம்னு யொசிச்சு பதில் சொல்லணும்....
:-)//

சின்ன வயசுனா எனது பச்சிளம் பாலகன் பருவமா? நாங்க எல்லாம் பொறக்கும் போதே பகுத்தறிவோட பொறந்தோமாக்கும்.

அறிவுப் பூர்வமா எதுனா சொன்னா பூர்வஜென்ம கதையெல்லாம் கிண்டலாமா, பின்னூட்டம் போட்டா ரசிக்கனும் ஆராய்ச்சிலாம் பண்ணப்படாது!

தமிழ் சினிமாவில் மட்டும் ஒரு பொண்ணை தெரியாம இடிச்சதும் காதல் பொத்துக்கிட்டு வரும் ஏன் என்று எனக்கு தெரியலை அனுபவஸ்தர் நீங்களாவது சொல்லுங்களேன்!

மாயன் சொன்னது…

//அனுபவஸ்தர் நீங்களாவது சொல்லுங்களேன்//

எதை வெச்சுங்க நான் அனுபவஸ்தன்னு முடிவு பண்ணீங்க?
:-)

//தமிழ் சினிமாவில் மட்டும் ஒரு பொண்ணை தெரியாம இடிச்சதும் காதல் பொத்துக்கிட்டு வரும் ஏன் //

ரொம்ப கஷ்டமான விஷயங்க...

நிறைய நிபந்தனைகள் இருக்கு..

ஹீரோ இடிக்கிற பொண்ணுக்கு ஏற்கனவே லவ் இருக்கப்படாது..

அந்த பொண்ணு அழகா இருக்கணும்...

ஹீரோ படிக்கிற காலேஜ் பக்கத்திலயோ, கம்ப்யூட்டர் வகுப்பிலயோ படிக்கணும்..

அதுவும் இல்லைன்ன அவர் வீட்டு பக்கத்துல குடியிருக்கணும்...

அட எதுவுமே இல்லைன்னா அவர் கூட பஸ்லயாவது கூட வரணும்....

ஆனா உண்மை என்னன்னா நிஜ காதல்கள் பல சினிமா காதல்களை விட விறுவிறுப்பா இருக்கு....

நம்ப முடியாத படிக்கு பாக்காமயே காதல் நிறைய நடந்துட்டு இருக்கு...

ஆனா அவங்கவங்க அவங்களுக்கு அழகானதா தான் இருக்கணும்... இல்லைன்னா இவ்ளோ பிரச்சினை எல்லாம் ஏன் நடகுது...

//அட்ரோபைன் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருந்த பிரச்சனையே இல்லையே, ஆள் ஆளுக்கு சுரப்பது மாறுதாம் //

அந்த போதைல தான் நம்மாளுங்க "கன்னியர் கடைக்கண் காட்டி விட்டால்னு"... ஊக்க மருந்து துணையோட மாமலையும் ஓர் கடுகாம்னு அழுகுணி ஆட்டம் ஆடராங்களா?

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..